Sunday, January 31, 2021
தியாக குணத்தைக் கடைப்பிடித்துவந்தால் மிகச் சிறந்த மனிதர்களாகிவிடுவீர்கள்
அன்பின் திரு உருவங்களே,
பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுங்கள். ஆனால் பணம் கொடுக்காதீர்கள். அணிய ஆடையில்லாதவர்களுக்கு ஆடையைக் கொடுங்கள். பலர் பணத்தை வாரி வழங்கி நம்மை மற்றவர்களைச் சார்ந்து வாழும் கீழ் நிலைக்குத் தள்ளிவிட்டார்கள். இப்படிப் பணத்துக்கு அடிபணியும் கீழ் நிலைக்கு நாம் ஒருபோதும் சென்றுவிடக்கூடாது. எப்பொழுதும் கௌரவத்துடன் வாழவேண்டும். மனிதவாழ்க்கை கௌரவமானது. கௌரவம் விலைமதிப்பற்றது. சில நாட்களின் முன் ஒரு வெளிநாட்டுப் பக்தர் ஒரு புதிய காரை பவானிடம் கொடுத்து ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடினார். மூன்று நட்களாக அவர் முகத்தைக்கூடப் பகவான் பார்க்கவில்லை. வெளிநாட்டிலிருந்து பக்தியோடு அனுப்பியதால் மறுக்க மனமின்றி அதனை வைத்திருக்கிறேன். யார் எதைக்கொடுத்தாலும் சுவாமி வாங்கமாட்டார். அந்தப் பக்தர் மிக மனம் வருந்துவதால் அந்தக் காரைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று பக்தர்கள் மன்றாடினர். கொடுப்பதையெல்லாம் வாங்குவது பண்பல்ல. தியாக குணத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். மற்றவர்களுக்காகத் தியாக குணத்தை வெளிப்படுத்த வேண்டும். சிறு வயதிலிருந்தே இப் பண்பை பகவான் கடைப்பிடித்து வருகிறார். நீங்களும் தியாக குணத்தைக் கடைப்பிடித்துவந்தால் மிகச் சிறந்த மனிதர்களாகிவிடுவீர்கள். சிறந்தவர்களாக மட்டுமன்றி மிகப் புண்ணியம் செய்தவர்களாகவும் ஆகிவிடுவீர்கள். புண்ணியசாலியாவது மட்டுமன்றி மோட்சமும் பெற்றுவிடுவீர்கள். மோட்சம் என்றால் என்ன. மோகத்தை விட்டுவிடுவதே மோட்சம். மோகத்தை முடிந்தளவு குறைத்துக்கொள்ளவேண்டும். எனவே அனைவரையும் அன்புடன் நேசியுங்கள். ஆனால் மனிதர்களைச் சார்ந்திருக்காதீர்கள். மனிதர்களை நேசியுங்கள். அனால் நம்பாதீர்கள். மற்றவர்களை நம்புவதால் மனரீதியில் மற்றவர்களைச் சார்ந்தவர்களாகிவிடுவீர்கள். அனைவரையும் அன்புடன் நேசியுங்கள். அனைவர்மேலும் அன்பு வையுங்கள். மற்றவர்களுக்குச் சேவை செய்யுங்கள். LOVE ALL: SERVE ALL. ஆனால் மற்றவரைச் சார்ந்தவராகிவிடாதீர்கள். Samastha Lokha Sukinoe Bavanthu.
Saturday, January 30, 2021
அன்பையும் அமைதியையும் கடைப்பிடித்தால் அனைவரும் வளமாக வாழலாம்
அன்பின் வடிவங்களே,
மனம்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். மனம் தான் அடிமைத்தனத்துக்கும் காரணம். வீடுபேற்றுக்கும் காரணம். எதை மறந்தாலும் கடவுளின் திருப்பெயரை மாத்திரம் மறக்கக்கூடாது. கடவுளின் திருநாமத்தை உச்சரிப்பதால் துன்பம் விலகும். அமைதியின்மை, கோபம், துன்பம், துயரம் அனைத்தையும் கடக்க இறைவனின் நாமம் ஒன்றே போதுமானது. காமம், குரோதம், மோகம், கோபம் போன்ற அனைத்துமே ராட்சச குணங்களாகும். கோபம் என்னும் அரக்கனை அனுமதித்தால் அது எல்லாவற்றையும் அழித்துவிடும். கோபமுடைய மனிதனை நம்பி எந்தவேலையையும் கொடுக்கக்கூடாது. அவனிடமிருந்து உறவினர்கள் கூட விலகிவிடுவார்கள். கோபம் , பொறாமை ஆகியவை நம்மை அணுகவிடக்கூடாது. எப்பொழுதும் அன்புவடிவமாக இருக்கவேண்டும். இவ்வாறு அனைவரும் அன்பையும் அமைதியையும் கடைப்பிடித்தால் நாடு வளம்பெறும். நலனை விரும்புபவர்கள் எப்பொழுதும் அன்புடன் வாழவேண்டும். யாருக்கும் எவ்வித துன்பமும் ஏற்படுத்தாமல் வாழவேண்டும். உலகத்திலுள்ள அனைவரும் சுகமாக வாழவேண்டுமெனப் பிரார்த்திக்க வேண்டும். அன்புடன் கடவுளை நினைக்கவேண்டும். ஏனெனில் இந்த அன்புதான் உலகைக் காக்கிறது. மனிதர்கள் அன்பெனும் பாதையை விட்டு விலகி வாழவே கூடாது. பிறர் பரிகசிக்கலாம், ஏளனம் செய்யலாம், ஆனால் அன்புடனே எப்பொழுதும் வாழவேண்டும். அன்பு அளித்தும், மன்னித்தும் வாழ்வதாகும். கோபம் கேடு விளைவிக்கும். ஆகவே அன்புடன் வாழுங்கள். உங்களுக்கு யாராவது துன்பம் செய்யக்கூடும் அப்பொழுதும் கோபப்படக்கூடாது. கடவுள்தான் அவ்வாறு செய்கிறார் என்று நினைக்கவேண்டும். கடவுள்தான் எல்லாவற்றையும் செய்கிறார். கடவுள் தான் துன்பங்களையும் தருகிறார். சந்தோசத்தையும் அவரே அளிக்கிறார். எல்லா நேரங்களிலும் காப்பாற்றுவது கடவுள்தான். தண்டிப்பதும் கடவுளே. காப்பதும் கடவுள்தான். எல்லாம் கடவுள் எண்ணப்படியே நடைபெறுகின்றன. அதனால் எல்லாவற்றையும் கடவுளுக்காக அர்பணம் செய்யவேண்டும். சிலர் பழி சொல்லலாம். அதையும் கடவுள்தான் செய்கிறார் என்று நம்பவேண்டும். உங்களுக்கு நடப்பதெல்லாம் கடவுளின் பிரசாதமே. செய்யும் செயல்கள் எல்லாம் கடவுளுக்கு மகிழ்ச்சியுண்டாக்கவே செய்யவேண்டும். இவ்வாறு நடந்துகொண்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும், முன்னேற்றமும் நிச்சயம் ஏற்படும். உலகம் அனைத்தும் நலமாக வாழ வாழ்த்துவோம்.
Friday, January 29, 2021
நான் என்னுடையது என்னும் அகம்பாவம் உள்ள இதயங்களில் கடவுள் வசிக்கமாட்டார்
அன்பின் திரு உருவங்களே,
கடவுளின் சங்கல்பம் என்ன என்று யாராலும் அறிந்துகொள்ள முடியாது. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார். நீங்கள் எங்கு பார்த்தாலும் அங்கெல்லாம் கடவுள் வியாபித்துள்ளார். அப்படிப்பட்ட கடவுளை ஜபம், யாகம், தியானம் போன்றவை மூலமாக மாத்திரம் அடைந்துவிட முடியாது. மனிதன் பலவீனங்களின் வடிவானவன். கடவுள் எப்படிப்பட்டவர் என்று யாராலும் சொல்லமுடியாது. யாரை நீங்கள் வணங்கினாலும் ஒருவரான கடவுளையே அடையும். இந்த ரகசியத்தை மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை. அதிகமான மக்களுக்கு ஆன்மீகத்தில் நோக்கம் இல்லை. சாதாரண மனிதர்களிலிருந்து மகான்கள் வரையில் யாக யக்ஞங்களில் திருப்தியடைந்து விடுகிறார்கள். கடவுள் நன்னடத்தையையும் ஆன்மீகத்தையும் தான் எதிர்பார்க்கிறார். இவ்வுலகில் செல்வமும் சிபார்சும் தான் முதலிடம் பெறுகின்றன. இது மிகுந்த அறிமையாகும். இந்த அறியாமையிலிருந்து வெளியேறாத வரை கடவுளைப் புரிந்துகொள்ள முடியாது. நான் என்னும் ஆணவமும் என்னுடையது என்னும் அகம்பாவமும் உள்ள இதயங்களில் கடவுள் வசிக்கமாட்டார். உலகில் சேர்த்துவைப்பதெல்லாம் ஒருநாள் அழியத்தான் வேண்டும். மனித உடலும் ஒருநாள் அழிந்துவிடும்.
நாம் தெய்வீகமானவர்களென்று நாம் கருதிக்கொள்ளவேண்டும். முதலில் உங்களை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.அகில உலகும் நலமாக வாழப் பிரர்த்திப்போம்.
Thursday, January 28, 2021
நாம் மனிதர்களே எனும் உண்மை நிலையை உணர்ந்துகொள்வோம்
அன்பின் திரு உருவங்களே,நாம் மனிதர்களே எனும் உண்மை நிலையை உணர்ந்துகொள்வது அவசியம். மற்றவர்களுடைய துன்பங்களை நம்முடைய துன்பமாகவே பாவிக்கவேண்டும். மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நம்முடைய கஷ்டங்களாகவே கருதவேண்டும். மற்றவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை நாமும் அனுபவிக்கும்போதுதான் இந்த உண்மையை உணர்ந்துகொள்வோம். எனவே நாம் இந்த ஒன்றுபட்ட உணர்வைப் பெற்று, நம்மிடையே சகோதரத்துவத்தை வளர்த்து ஒற்றுமையாக வாழ வேண்டும். எனவே நாம் நம் சமுதாயத்திலுள்ள நல்ல விடயங்களைக் கடைப்பிடித்துத் தீயவற்றை ஒதுக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். சமுதாயத்திலுள்ள நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு தீயவற்றை ஒதுக்கிவிடவேண்டும். யராவது தீங்கு செய்தால் பதிலுக்கு அவர்களுக்கு நல்லதையே செய்யவேண்டும். உதவிசெய்தவர்களுக்குப் பிரதி உதவி செய்வதில் உள்ளதை விடத் துன்பம் செய்தவர்களுக்கும் நன்மை செய்வதில்தான் நமக்குப் பெருமை இருக்கிறது. நமது மனப்பான்மை எப்படி உள்ளதோ அப்படியே தான் விளைவும் இருக்கும். நம்முடைய உணர்வுகள் நல்லவையாக இருந்தால் நமது செயல்களும் நல்லவையாகவே இருக்கும். நாம் மாம்பழம் சாப்பிட்டால் ஏப்பம் விடும்போது வெங்காய்த்தின் வாசனை வராது. ஏப்பத்திலும் மாம்பழத்தின் வாசனைதான் வரும். மனம் நல்லதாக இருந்தால் நினைப்பவை, செய்பவை எல்லாமே தானாகவே நல்லவைகளாக அமைந்துவிடும். தீய எண்ணங்கள் இருந்தால் விளைவும் தீயவையாகவே இருக்கும். எனவே நல்லமனத்துடன், நல்ல செயல்களைச் செய்து இவ்வையகத்தைச் சிறப்பிப்போம். அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
Wednesday, January 27, 2021
அன்போடு இருங்கள், அன்போடு பேசுங்கள். அன்பினால் எதையும் சாதிித்து விடலாம்.
அன்பின் அவதாரங்களே,
எப்போதும் அன்போடு இருங்கள், யாரோடு பேசினாலும் அன்போடு பேசுங்கள். உள்ளத்தில் அன்பு இருந்தால் எதையும் சாதிித்து விடலாம். உங்கள் அனைவரிடத்திலும் அன்பு உள்ளது. ஆனால் அதைப் பயன்படுத்துவதில்லை. பலர் அன்புக்கு முரணான வாழ்க்கையை வாழ்கிறார்கள். காலால் நடக்கவேண்டிய மனிதன் தலையால் நடந்தால் எவ்வளவு தூரம் நடக்க முடியும். கால்கள் நடப்பதற்காக அளிக்கப்பட்டுள்ளது.வாயாலும் உண்மையைப் பேசவேண்டும். உண்மையைப்பேசுவதே சிறந்தது. உண்மையற்றதைப் பேசுவது தலையால் நடப்பதைப்போன்றது. எவ்வளவு தூரம் நடக்கமுடியும். சிந்திப்பதற்குத்தான் அறிவு வழங்கப்பட்டுள்ளது. எது நல்லது, எது கெட்டது, எது உண்மை, எது பொய், என்று சிந்தித்துச் செயல்படவேண்டும். நான் பேசியது உண்மையா பொய்யா, சரியா தவறா என்ற முடிவை உங்களுக்குள்ளகவே ஆராய்ந்து பார்க்கவேண்டும். உண்மை வழியில்தான் வாழவேண்டும்.
சத்தியத்தைவிட உயர்ந்த தர்மம் எதுவும் இல்லை. அதனால் எப்பொழுதும் உண்மையையே பேசவேண்டும். சத்தியமே இறைவனின் திருவுள்ளம். எப்பொழுதும் இறைவனின் திருப்பெயரைச் சொல்லுங்கள். வழிபாட்டுக்கென வீண்செலவு செய்யாதீர்கள். உணவற்றவர்களுக்கு உணவு அளித்திடுங்கள். உடையற்றவர்களுக்கு உடை கொடுங்கள். கடவுளின் பெயரை மனதுக்குள்ளாகவே சொன்னால் போதும். பிச்சயிடும்போதுகூட இறைவா என்று சொல்லிக் கொண்டே கொடுக்கவேண்டும். மனம்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். மனம் தான் அடிமைத்தனத்துக்கும் வீடுபேற்றுக்கும் காரணம். எதை மறந்தாலும் கடவுளின் திருப்பெயரை மாத்திரம் மறக்கக்கூடாது. திருநாமத்தால் துன்பம் விலகும். அமைதியின்மை, கோபம், துன்பம், துயரம் அனைத்தையும் கடக்க இறைவனின் நாமம் ஒன்றே போதுமானது. காமம், குரோதம், மோகம், கோபம் போன்ற அனைத்துமே நரகம் போன்றது. ராட்சச குணங்களைக் கொண்டவர்களைை நாம் அண்டவிடக்கூடாது. கோபம் என்னும் அரக்கனை அனுமதித்தால் அது எல்லாவற்றையும் அழித்துவிடும். கோபமுடைய மனிதனை நம்பி எந்தவேலையையும் கொடுக்கக்கூடாது. அவனிடமிருந்து உறவினர்கள் கூட விலகிவிடுவார்கள். கோபம் , பொறாமை ஆகியவை நம்மை அணுகவிடக்கூடாது. எப்பொழுதும் அன்புவடிவமாகக் கடவுளின் நாமத்தை உச்சரித்தவண்ண்மே இருக்கவேண்டும். இவ்வாறு அமைதியை அனைவரும் கடைப்பிடித்தால் நாடு வளம்பெறும். நாட்டு நலனை விரும்புபவர்கள் எப்பொழுதும் அன்புடன் வாழவேண்டும். யாருக்கும் எவ்வித துன்பமும் தராமல் வாழவேண்டும். உலகதின் அனைவரும் சுகமாக வாழவேண்டுமெனப் பிரார்த்திக்க வேண்டும். பஜனைகளின் முடிவில் கூட சமஸ்த லோகா சுகினோ பவந்து என்று சொல்கிறீர்கள். அன்புடன் கடவுளை நினைக்கவேண்டும். ஏனெனில் இந்த அன்புதான் உலகைக் காக்கிறது. மனிதர்கள் அன்பெனும் பாதையை விட்டு விலகி வாழவே கூடாது. பிறர் பரிகசிக்கலாம், ஏளனம் செய்யலாம், ஆனால் அன்புடனே எப்பொழுதும் வாழவேண்டும். அன்பு அளித்தும், மன்னித்தும் வாழ்வதே. கோபம் கேடு விளைவிக்கும். ஆகவே அன்புடன் வாழுங்கள். உங்களுக்கு யாராவது துன்பம் செய்யக்கூடும் அப்பொழுதும் கோபப்படக்கூடாது. கடவுள்தான் அவ்வாறு செய்கிறார் என்று நினைக்கவேண்டும். கடவுள்தான் எல்லாவற்றையும் செய்கிறார். கடவுள் தான் துன்பங்களையும் தருகிறார். சந்தோசத்தையும் அவரே அளிக்கிறார். எல்லா நேரங்களிலும் காப்பாற்றுவதும் கடவுளே. தண்டிப்பதும் கடவுளே. இருப்பதைக் காப்பதும் கடவுள்தான். எல்லாம் கடவுள் எண்னப்படியே நடைபெறுகின்றன. அதனால் எல்லாவற்றையும் கடவுளுக்கா அர்பணம் செய்யவேண்டும். சிலர் பழி சொல்லலாம். அதையும் கடவுள் செய்கிறார் என்று நம்பவேண்டும். உங்களுக்கு நடப்பதெல்லாம் கடவுளின் பிரசாதமே. செய்யும் செயல்கள் எல்லாம் கடவுளுக்கு மகிழ்ச்சியுண்டாக்கவே செய்யவேண்டும். இவ்வாறு நடந்துகொண்டால் முக்தி நிச்சயம். கல்லை மிதக்கவைக்கலாம். மனிதனை மிதக்கவைக்கமுடியாது. சம்சாரம் என்னும் இக்கடலில் நாம் மிதக்கும் பொருள்போல் இருக்கவேண்டும். அதில் முழ்கிவிடக்கூடாது. அன்பெனும் அமுதம் கோபம், பொறாமை எனும் அரக்கர்களை அழித்துவிடும். எப்பொழுதும் எது நடந்தாலும் அது கடவுள் சங்கல்ப்பப்படி நடப்பதாகவே நினைத்துக்கொள்ளவேண்டும். பஜனை செய்யுங்கள். கடவுளின் நாமத்தை உச்சரியுங்கள். பஜனை மிக முக்கியமானது. கடவுளின் திருப்பெயரை உச்சரிப்பதே பஜனையின் முக்கிய அம்சம். பலருடன் சேர்ந்து பஜனை செய்யும்போது ஒருவராவது கடவுளின் மனதை உருகச் செய்துவிடுவார். பலர் ஒன்றுசேர்ந்து நாம ஜெபத்தில் ஈடுபடும்போது கடவுளின் மனம் உருகிவிடும். அதிகாலையில் நகர சங்கீர்த்தனம் செய்யும்போது அதைக் கேட்டுக் கண்விழிப்பவர்கள் மனமகிழ்ச்சியடைவர். சமஸ்த லோகா சுகினோ பவந்து. ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி
Tuesday, January 26, 2021
உடல் பிறந்தது. பிறந்த உடல் ஒருநாள் அழிந்தே தீரும். பிறக்காததும் அழியாததும் ஆத்மா மத்திரமே
அன்பின் வடிவங்களே,
பணம் வரும் போகும்(MONEY COMS AND GOES), MORALITY COMES AND GROWS- நன்னடத்தை வரும் வளரும். ஆகவே நன்னடத்தையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதுதான் உயர்ந்த வரப்பிரசாதம். லட்சார்ச்சனை செய்தலும், கோடியர்ச்சனை செய்தாலும் அவற்றால் உங்களுக்குத் தற்காலிகத் திருப்திதான் கிடைக்கும். மக்கள் பலதரப்பட்ட வழிகளில் பணத்தை விரயம் செய்கிறார்கள். வீட்டுக்குப் பிச்சைக்காரர்கள் வந்தால் ஒருபிடி உணவுகூடக் கொடுக்கமாட்டார்கள். ஆனால் யாகங்கள் யக்ஞங்களுக்குக் கோடிக்கணக்கில் செலவுசெய்கிறார்கள். பணத்தைக் கொண்டு கடவுளைப் பெற முடியாது. கடவுள்தான் எல்லாச் செல்வங்களையும் அருள்பவர். கடவுளுக்கு உங்கள் பணம் எதற்காகத் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை உங்கள் நல்வாழ்வுக்காகச் செலவிடவேண்டும். ஏழை எளிய மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும். நாம் நாமஸ்மரணையில் மாத்திரம் திருப்தியடைவதாகச் சுவாமி சொல்கிறார். அதனால் நாமத்தில் அக்கறை செலுத்தவேண்டும். அதுதான் இறைவனை அடைவதற்கு ஒரே வழி. கடவுளை அவரது திருநாமத்தினால் மட்டுமே எளிதில் அடைய முடியும். திரௌபதி எவ்வளவு பெயர்களைக் கூறிக் கதறினாள். இறுதியில் இருதயவாசி என்றாள். அக்கணமே க்ரிஷ்ணர் தோன்றினார். உண்மையில் இதயமே கடவுள். கடவுள் இதயத்தில் இருக்கிறார். கடவுள் உங்களுக்குள்ளே இருந்தும் கூட நீங்கள் அவரை வெளியில் தேடுகிறீர்கள். உங்களால் பணத்தின் மூலம் வெளியில் உள்ள பொருட்களைத்தான் அடைய முடியுமே தவிரக் கடவுளை அடைய முடியாது. கடவுளை நீங்கள் உங்களுக்குள்ளே தான் தேடவேண்டும். உள்ளத்துக்குள் பாருங்கள். வெளியில் தேடாதீர்கள். கண்களை மூடிக்கொண்டு உங்களுக்குள் இருக்கும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் உங்கள் முன் தோன்றி வரத்தை அருள்வார். அதனால் திருநாமத்தால் கடவுளை வர்ணிக்கலாம், அறியலாம், அடையலாம். இப்படிப் பெயெரை உச்சரிப்பதற்கே நகர சங்கீர்த்தனங்கள் தொடங்கப்பட்டன. நகர சங்கீர்த்தனங்களில் இறைவனுடைய தோற்றங்களைப் போற்றவேண்டிய அவசியம் இல்லை. கடவுளை அளவற்ற ரூபங்களால் போற்றினாலும் பயனில்லை. கடவுள் ஆத்மசொரூபமானவர். ஆத்மாவுக்கு உருவம் இல்லை. கடவுளிடம் நீங்கள் யார் என்று யாராவது கேட்டால், நான் ராமர். நான் கிரிஷ்ணர், நான் சாயிபாபா என்றெல்லாம் சொல்ல மாட்டார். சாயி பாபா என்பது இவ்வுடலின் பெயர் மட்டுமே. ராமா என்பதும் உடலின் பெயர். சாயி பாபா என்னும் பெயர் தாய் தந்தையரால் வைக்கப்பட்டது. பெயர் என்பது வைக்கப்பட்டதே. பிறந்தது இல்லை. உடல் பிறந்தது. ஆனால் அதற்குப் பெயர் இல்லை. பிறந்த உடல் ஒருநாள் அழிந்தே தீரும். உடலுடன் பெயரும் அழிந்து விடும். பிறக்காததும் அழியாததும் ஒன்றே ஒன்றுதான். அது தான் ஆத்மா. சகல உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
Monday, January 25, 2021
இறைவனுடைய திருநாமத்தை இருதயத்தில் பிரதிஷ்டை செய்வதே உண்மையான சரணாகதியாகும்.
அன்பின் வடிவங்களே,
பெயர் (நாமம்) தான் நித்தியமானது, சத்தியமானது. யாராலும் அதை அழிக்க முடியாது. யாராலும் தூக்கியெறியவும் முடியாது. யாராலும் அதற்கு நாசம் விளைவிக்கவும் முடியாது. கடவுள் ராமர் எனும் பெயரும் வடிவமும் தாங்கி இலங்கைக்குச் சென்று ராவணனை வென்றார். ராவணன் அழியவேண்டியதாயிற்று. “ராமா, உங்கள் பெயர் எல்லாவற்றையும் வெல்லும் வல்லமை பெற்றது. இலங்கைச் சமுத்திரம் 100 மைல் தூரமுள்ளது. ரா, மா என்ற இரண்டு அட்சரங்களினால் மட்டுமே 100 மைல் கடலைக் கடக்க முடிந்தது” என்று விபீசணன் ராமரிடம் சொன்னான். யாரெல்லாம் இறைவனின் நாமத்தைச் சொல்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். இறைவனின் எப்பெயரை உச்சரித்தாலும் உங்களுக்கு வெற்றிதான். எல்லாப் பெயர்களிலுமே இரண்டு அட்சரங்கள் தான். ராமா, சிவா, யேசு, போன்ற இந்த இரண்டு எழுத்துக்களைக் கொண்டே உங்களால் எதையும் சாதிக்க முடியும். பெயர் ஒன்று மட்டுமே நிலையானது. வடிவம் முதிர்ச்சியடைந்து இறுதியில் அழிந்து விடும். பெயரே மிகவும் முக்கியமானது. ஆகவே இறைவனின் பெயரை நமது உள்ளங்களில் பிரதிஷ்டை செய்துகொள்ளவேண்டும். எவ்வளவு யாகங்கள் செய்தாலும் எவ்வளவு தான தர்மங்கள் செய்தாலும்,பயனில்லை. சிராவணம், கீர்த்தனம், நாம்ஸ்மரணம், பாதசேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்மநிவேதனம் என்பது நவவித பக்தி. சரணாகதியென்றால் உடலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யவேண்டியது என்று பொருளில்லை. இறைவனுடைய திருநாமத்தை இருதயத்தில் பிரதிஷ்டை செய்வதே உண்மையான சரணாகதியாகும். இறைவனுடைய திருநாமத்தை உச்சரித்து, வாழ்வினைப் பூர்த்திசெய்துகொள்ளுங்கள். உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்தியுங்கள்.
Sunday, January 24, 2021
ஒரே ஜாதி, ஒரே மதம். ஒரே கடவுள், என்னும் ஐக்கியம் நிலவ வேண்டும்
அன்பின் வடிவங்களே,
இது என் உடல் என்று கூறுகிறோம். ஆனால் நான் தான் உடல் என்று கூறுவதில்லை. எனது மனம், எனது உடல், எனது தலை, எனது கை, எனது வாய் என்று கூறுகிறோம். ஆனால் நான்தான் வாய், நான் தான் கை என்று கூறுவதில்லை. உடல் மனம் ஆகியவை நாமல்ல. அவை கடவுள் நமக்கு அருளியவையே. அவற்றை நாம் மரியாதை செலுத்திப் பாதுகாக்க வேண்டும். அப்பொழுதுதான் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒற்றுமையைக் காணமுடியும். புத்தகங்களைப் படிப்பதால் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது. புத்தகங்களின் பக்கங்களைத் திருப்பும்போது இதயத்தின் பக்கங்களையும் திருப்பவேண்டும். அப்பொழுதுதான் புத்தகங்களைப் படிப்பதன் பயன் ஏற்படும். வெளியில் நாம் காண்பவை அனைத்தும் கற்பனை தவிர உண்மையில்லை. உண்மை என்னவென்று நமக்குள் பார்க்க முயலவேண்டும். நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கானவர்களைப் பார்க்கலாம். ஆனால் கண்களை மூடிக்கொண்டால் யாரையும் பார்க்க முடியாது. நான் யார். நான் நானே. அது தான் சரியான பதில். நடைமுறைக்காகவே இவ்வுலகில் நமக்குப் பெயர்கள் வைக்கப்படுகின்றன.
உண்மையில் கல்வி இவ்வுலகத்துடன் தொடர்புடையது இல்லை. அது நம்முடன் தொடர்புடையது. விலங்குகளும்தான் கற்கின்றன. ஏட்டுச் சுரைக்காய் வெறும் புத்தகப் படிப்புத்தான். நமது இதயத்தை, நம்மைப்பற்றி நாம் அறிந்துகொள்ளவேண்டும். அந்த அறிவே உண்மையான கல்வி. உண்மை என்பது என்றும் ஒன்றே. அது இரண்டல்ல. உண்மையே கடவுள். தர்மமே கடவுள். அமைதியேயே கடவுள். அன்பே கடவுள். கடவுளில் வாழுங்கள். அந்த அன்பு நமது இதயங்களில் இருந்துவிட்டால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். அன்பு என்பது தனிப்பட்ட ஒருவருக்குச் சொந்தமானதல்ல. அது தெய்வீகமானது. நான் உங்கள்மீது செலுத்தும் அன்பும், நீங்கள் என்மீது செலுத்தும் அன்பும் தான் உண்மையான ஐக்கியம் என்று பகவான் கூறுகிறார். கடவுள் ஒருவரே. குறிக்கோளும் ஒன்றே. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் இவ்வுலகில் நம்மால் எதையும் சாதிக்க முடியும். இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் எவையுமே உண்மையானவை அல்ல.
மானிதவளப் பண்புகள் எனப்படுவதே உண்மை. அது நமக்குள்ளேயே இருக்கும் விழுக்கல்வி (EDUCARE). CARE என்றால் உள்ளிருப்பதை வெளியே கொண்டுவருவது என்பதாகும். அதுதான் உண்மையான விழுக்கல்வி. CARE என்றால் மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவது என்று பொருள் அல்ல. CARE என்பது உள்ளே இருக்கும் நல்ல குணங்களை வெளிக்கொண்டு வருவதாகும். அதுதான் விழுக்கல்வி என்பதன் உண்மையான பொருள். நாம் புத்தகங்களைப் படிப்பதால் வரும் அறிவு, விடயங்களைப்பற்றிய அறிவு ஆகியவை கல்வி எனப்படும் EDUCATION. வெளியுலகத்தைச் சார்ந்தவை யாவும் EDUCATION. ஆனால் நமக்கு வேண்டியது EDUCARE. இன்றைய தேவை விழுக்கல்வியாகும். விழுக்கல்வியைப்பெற்றுவிட்டால் அனைவரும் ஒன்றே என்ற தெளிவைப் பெற்றுவிடலாம். இன்னும் சுமார் 30 வருடங்களுள் இவ்வுலகம் முழுவதும் ஒன்றாகிவிடும் என்று பகவான் கூறுகிறார். ஒரே ஜாதி, ஒரே மதம். ஒரே கடவுள், என்னும் ஐக்கியம் நிலவ வேண்டும். இன்று பல வேற்றுமைகளைக் காண்கிறோம். வேற்றுமைக்குப் பதிலாக ஒற்றுமையைக் காணவேண்டும். உண்மை ஒண்றே, ஆனால் அறிஞர்கள் அதனைப் பலவாறாகச் சொல்கிறார்கள். அதுதான் இப்பிரபஞ்சத்தின் உண்மை. அதுவே இன்றைய தெய்வீகமான் செய்தி. அகில உலகமும் நலமாக இருக்கப் பிரார்த்திப்போம்.
Saturday, January 23, 2021
ஆசிரியர்களும், பெரியவர்களும் தாய் தந்தையரும் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக வாழவேண்டும்
அன்பின் திரு உருவங்களே,
தாயும் தந்தையும் வேலைக்குச் செல்வதில் தவறில்லை. பிள்ளைகளுக்கு எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை என்றால் இருவரும் வேலைக்குச் செல்லலாம். பலர் வீட்டுக்கு வந்தபின்கூடச் செய்தித்தாள், டீவீ போன்றவற்றில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சிலர் கிளப்புகளுக்கும் போகிறார்கள். இப்படியான நிலமையில் பிள்ளைகளிடம் எப்படி முன்னேற்றத்தை எதிர்பார்க்கமுடியும். வீட்டில் கவனம் செலுத்திப் பிள்ளைகளைப் பராமரித்து வருவதே சிறந்தது. அதுவே நமது உண்மையான வருமானம். பிள்ளைகள் கெட்டுப்போய் மனம் வருந்த வேண்டி ஏற்படுவதைத் தடுத்து, அவர்களை நன்கு பராமரித்தல் பெற்றோர்களின் தலையாய கடமையாகும். சமுதாயத்தில் நடைபெறும் செயல்களின் விளைவுகள் பிள்ளைகளையே பாதிக்கின்றன. எனவே நமது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் நாம் வாழ வேண்டும். அதனால் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது நல்லவர்களாக இருப்பார்கள். காலையில் 8 மணி வரை தூங்குவதற்கு அவர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நீங்களும் அதிகாலையில் எழுந்து அவர்களும் எழுந்திருக்கிறார்களா என்று கவனிக்க வேண்டும். நாம் முதலில் இலட்சிய மனிதர்களாக இருக்கவேண்டும். எந்தப் பொறுப்புகளும் இல்லாதவர்கள், குழந்தைகள் இல்லாதவர்கள், அதிக நேரம் தூங்கினால் பரவாயில்லை. அதிக நேரத் தூக்கம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்குப் பரவாயில்லை. நாம் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிசெய்யவேண்டும். கட்டுப்பாடு, பக்தி, கடமை, ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை. மனித வளப் பண்புகளை அதிகமாகக் கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்களின் அவசியத் தேவைகளை மாத்திரமே நாம் பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான அளவுக்கு மாத்திரமே வாங்கிக் கொடுக்கலாம். அப்பொழுதுதான் அவர்கள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்கள். பிள்ளைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்ப்பது பெற்றோரின் கடமையாகும். சாயிக் கல்வித்திட்டங்கள் பற்றிப் பெற்றோர்களும் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சில பெற்றொர்களுக்குச் சாயிக்கல்வித் திட்டங்கள் பற்றித் தெரியாது. மாணவர்களும் பெற்றோர்களுக்கு விளக்கமாகச் சொன்னால்தான் பெற்றோர்களுக்கும் புரியும். மாணவர்களுக்கு வீட்டில் நடக்கும் சில நிகழ்ச்சிகளுக்கும் பள்ளியில் போதிக்கும் நற்பண்புகளுக்குமிடையில் வேறுபாடு இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது. சில பெற்றொர்கள் பிள்ளைகளுக்கு எதிரில் பொய் பேசுகின்றனர். மாணவர்களிடம் நாம் மிகவும் விழிப்புணர்ச்சியுடன் இருக்கவேண்டும். அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று அறிய அவர்களின் பள்ளிகளுக்குச் சென்று பார்க்க வேண்டும். தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுவிட்டு அதிக மதிப்பெண் பெற்றதாகக் கூறும் பிள்ளைகளும் உள்ளனர். பெற்றோரும் பள்ளிக்குச் சென்று பிள்ளைகளின் மதிப்பெண்களைச் சரிபார்க்க வேண்டும். உண்மையில் கிராமங்களில்தான் பிள்ளைகள் பெற்றோர்களைப் பாதுகாக்கிறார்கள். நகரங்களில் அதிகமான பிள்ளைகள் தெருக்களில் சுற்றுகிறார்கள். இது நல்லதல்ல. படிக்கும் பருவத்தில் பிள்ளைகள் வீணாக அலையக் கூடாது. வீட்டில் இருப்பதால் குடும்ப கௌரவமும் மதிப்பும் காப்பாற்றப்படுகிறது. பிள்ளைகள் அதிகமாகப் பணத்தைச் செலவு செய்யாமல் பெற்றோர் கண்கானிக்க வேண்டும். அவர்களிடம் எது சரி எது தவறு என்று தெளிவாகச் சொல்லவேண்டும். அநாவசியச் செலவு நல்லதில்லை என்று தெளிவாகச் சொல்ல வேண்டும். எவ்வளவு கிடைக்கிறதோ அதற்குள்ளாகத்தான் செலவு செய்ய வேண்டும். இவ்வாறாக அவர்கள் நேர்வழியில் செல்லப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும், பெரியவர்களும் தாய் தந்தையரும் முன்னுதாரணமாக வாழவேண்டும். பிள்ளைகள் சொல்வதைப் பல பெற்றோர்கள் கேட்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் சொல்வதைப் பல பிள்ளைகள் கேட்பதில்லை. யார் சொல்வது சரி, யார்சொல்வது தவறு, அடுத்து என்ன செய்யவேண்டும் என்று எல்லோரும் கலந்து ஆலோசித்து நல்வழியில் செயல்பட வேண்டும். உலகம் முழுவதும் நன்மையுடன் வாழ்ப் பிரார்த்திப்போம்.
Friday, January 22, 2021
மாணவர்களை மனிதவள மேம்பாட்டுப்பண்புகளை அறிந்த லட்சியமாணாவர்களாக்குவது மிகவும் அவசியமாகும்
அன்பின்வடிவங்களே,
ஒருவர் படித்துக் கல்வியறிவு பெற்றிருந்தாலும், தன்னைப்பற்றிய அறிவு இல்லாலமிலிருந்தால் அவர் ஒரு முட்டாளாகவே கருதப்படுவார். மேலும் மேலும் படித்து அறிவை வளர்த்துக்கொண்டாலும், முட்டாள் தனமான ஒருவரால் சரியான முடிவு எடுக்கமுடியாது. ஒருவர் கல்வியை அதிகம் பெற்று அதிக அறிவைப் பெறுவதாகக் கூறுகிறார். பள்ளிக் கல்விமூலம் முழுமையான அறிவைப் பெறமுடியாது. மிக அதிகம் படித்து என்ன பயன். நடைமுறைக்கு உதவாத படிப்பால் பயனேதும் இல்லை. எத்தனை பட்டங்களைப்பெற்றாலும் அறிவைப் பயன்படுதாவிட்டால் பயனெதுவுமில்லை. கல்விக்கான பயிற்சி வாழ்க்கைக்கான பயிற்சியிலிருந்து வேறுபட்டது. கற்றதன் பயன் வாழ்வில் கற்றதைக் கடைப்பிடிப்பதாகும். அதிகம் படித்திருந்தாலும் அற்பத்தனத்தைக் கைவிடவேண்டும். அதிகம் படித்தவர்கள் பலர் புத்தியீனர்களாக இருக்கிறார்கள். அறிவற்று நடக்கும் பெரியவர்களைப் பார்க்கும் சிறுவர்களும் அறிவற்றவர்களாகவே மாறி விடுகிறார்கள்.
கடவுள் நமக்கு வெளியில் எங்கும் இல்லை. நமக்குள்ளேயே இருக்கிறார். அன்பைப் பெற்று அன்பை வளர்த்துக்கொண்டு நமக்குள் இருக்கும் கடவுளுடன் தொடர்புகொண்டு வாழவேண்டும். கடவுள் வெளியில் இருக்கிறார் என்று கருதினாலும் அவருடன் தொடர்பு கொள்ள முடியும். கடவுள் உங்களிடமிருந்து வேறுபட்டவரில்லை. கடவுள் உங்களுக்குக் கீழே, மேலே, முன்னே, பின்னே உங்களைச் சுற்றி இருக்கிறார். நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளுடன் நீங்கள் அன்பின்
தொடர்பிலிருப்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். கடவுளுடன் தொடர்புகொண்டவுடன் தெய்வீகத்தின் ஐக்கியம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மிடமிருக்கும் ஆன்மீக ஆற்றலை எப்படி அறிவது. கடவுளை நம்புவது இதயபூர்வமாகவா அல்லது பாசாங்கா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். லாபமோ நட்டமோ எது ஏற்பட்டாலும், கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிறிதும் குறைக்கமாட்டேன் என்று திடமாக நம்ப வேண்டும். கனவில் அவரைகாணலாம். மனதிற்குள் ஒரு குரல் கேட்பதை உணரலாம். மற்றவர்களுக்குத் தெரியும் படியான எந்த அடையாளமும் இருக்காது. பக்தி வளருகிறதா, குறைகிறதா என்பதை நீங்கள்தான் உணரவேண்டும். எனவே திடமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும். சாயிகல்வி நிலயத்தில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அன்போடு கற்றுத்தர வேண்டும். உங்கள் மாணவர்கள் என்று இஷ்டப்படி நடந்துகொள்ள அனுமதிக்ககூடாது. சுதந்திரம் அளித்தாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். சில வேளை தண்டனையும் அளிக்கவேண்டும். தண்டனையென்றால் சாதாரண நடைமுறையிலான தண்டனைகள் இல்லை. அது ஒரு எச்சரிக்கையைப் போல் இருக்க வேண்டும். பிள்ளைகள் ஆன்மீகப்பாதையில்தான் வளர்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.. மாணவர்கள் மாணவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இருக்கவேண்டும், ஆசிரியர்கள் வகுப்பில் மணவர்களின் தேவை என்ன என்பதை அறிந்து, அவற்றைப் பூர்த்தி செய்தால் போதுமானது. வேறு எதுவும் அவசியமில்லை. ஆசிரியர்கள் மாணவர்களை மனிதவள மேம்பாட்டுப்பண்புகளை அறிந்த லட்சியமாணாவர்களாக்குவது மிகவும் முக்கியமானதாகும். உலகம் முழுவதும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
Thursday, January 21, 2021
அன்பின் திரு உருவங்களே,
நன்நடத்தை என்பது ஒரு முக்கியமான பண்பாகும். ஒற்றுமை இல்லாத காரணத்தால் உயர்ந்த தியாகம் நம்மிடையே இல்லாமல் போய் விட்டது. நம்மிடம் எல்லா நல்ல பண்புகளும் வளங்களும் உள்ளன. எல்லாத் தர்மங்களும் உள்ளன. ஆனால் ஒற்றுமை இல்லாத காரணத்தால் அவை பயனற்றுப் போய் நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம். எனவே நாம் நம்மிடையே ஒற்றுமையை வளர்த்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே மானுட இனத்தைச் சேர்ந்தவர்கள். மனித இனத்தினுள் மிருகத்தன்மைக்கு இடமில்லை. எனவே நாம் மனிதர்களே எனும் உண்மை நிலையை உணர்ந்துகொள்வது மிகவும் அவசியம். நாம் அடுத்வருடைய துன்பங்களை நம்முடைய துன்பமாகவே பாவிக்கவேண்டும். மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நமது கஷ்டங்களாகவே கருதவேண்டும். மற்றவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை நாமும் அனுபவிக்கும்போதுதான் இந்த உண்மையை உணர்ந்துகொள்வோம். ஒன்றுபட்ட உணர்வைப் பெற்று, நம்மிடையே சகோதரத்துவத்தை வளர்த்து ஒற்றுமையாக வாழ வேண்டும். சமுதாயத்திலுள்ள நல்ல விடயங்களைக் கடைப்பிடித்துத் தீயவற்றை ஒதுக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். சமுதாயத்தில் எல்லாம் கலந்துதான் இருக்கிறது. இதனால் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. நாம் நமது பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும். சமுதாயத்திலுள்ள நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு தீயவற்றை ஒதுக்கித் தள்ளவேண்டும். யராவது தீங்கு செய்தால் பதிலுக்கு அவர்களுக்கு நல்லதையே செய்யவேண்டும். உதவிசெய்தவர்களுக்குப் பிரதி உதவி செய்வதில் உள்ளதை விடத் துன்பம் செய்தவர்களுக்கும் நன்மை செய்வதில்தான் நமக்குப் பெருமை இருக்கிறது. தீமைசெய்து துன்பத்துக்கு ஆளாக்கியவர்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்ற உயர்ந்த மன நிலையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். யாராவது துன்பம் செய்தால், அது அப்போது அவருக்கிருக்கும் மனநிலையைப் பொறுத்தது. எனவே அவருக்கும் நன்மை செய்வதே நமது கொள்கையாக இருக்கவேண்டும். நமது மனப்பான்மை எப்படி உள்ளதோ அப்படியே தான் விளைவும் இருக்கும். நம்முடைய உணர்வுகள் நல்லவையாக இருந்தால் நமது செயல்களும் நல்லவையாகவே இருக்கும். மனம் நல்லதாக இருந்தால் நினைப்பவை, செய்பவை எல்லாமே தானாகவே நல்லவைகளாக அமைந்துவிடும் தீய எண்ணங்கள் இருந்தால் செயல்களும் தீயவையாகவே இருக்கும்.
Wednesday, January 20, 2021
சமுதாயத்திலுள்ள நல்ல விடயங்களைக் கடைப்பிடித்துத் தீயவற்றை ஒதுக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்வோம்
அன்பின் திருவுருவங்களே,
நாம் மனிதர்களே எனும் உண்மை நிலையை உணர்ந்துகொள்வோம். மற்றவர்களுடைய துன்பங்களை நம்முடைய துன்பமாகவே பாவிக்கவேண்டும். மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நம்முடைய கஷ்டங்களாகவே கருதவேண்டும். மற்றவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை நாமும் அனுபவிக்கும்போதுதான் இந்த உண்மையை உணர்ந்துகொள்வோம். எனவே நாம் இந்த ஒன்றுபட்ட உணர்வைப் பெற்று, நம்மிடையே சகோதரத்துவத்தை வளர்த்து ஒற்றுமையாக வாழ வேண்டும். எனவே நாம் நம் சமுதாயத்திலுள்ள நல்ல விடயங்களைக் கடைப்பிடித்துத் தீயவற்றை ஒதுக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். சமுதாயத்திலுள்ள நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு தீயவற்றை ஒதுக்கிவிடவேண்டும். யராவது தீங்கு செய்தால் பதிலுக்கு அவர்களுக்கு நல்லதையே செய்யவேண்டும். உதவிசெய்தவர்களுக்குப் பிரதி உதவி செய்வதில் உள்ளதை விடத் துன்பம் செய்தவர்களுக்கும் நன்மை செய்வதில்தான் நமக்குப் பெருமை இருக்கிறது. நமது மனப்பான்மை எப்படி உள்ளதோ அப்படியே தான் விளைவும் இருக்கும். நம்முடைய உணர்வுகள் நல்லவையாக இருந்தால் நமது செயல்களும் நல்லவையாகவே இருக்கும். நாம் மாம்பழம் சாப்பிட்டால் ஏப்பம் விடும்போது வெங்காய்த்தின் வாசனை வராது. ஏப்பத்திலும் மாம்பழத்தின் வாசனைதான் வரும். மனம் நன்றாக இருந்தால் நினைப்பவை, செய்பவை எல்லாம் தானாகவே நல்லவைகளாக அமைந்துவிடும். தீய எண்ணங்கள் இருந்தால் விளைவும் தீயவையாகவே இருக்கும். எனவே நல்லமனத்துடன், நல்ல செயல்களைச் செய்து இவ்வையகத்தைச் சிறப்பிப்போம். அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துவோம்.
Sunday, January 17, 2021
இறைவனை நம்புங்கள். இறைவனருளைப் பெறுங்கள்.
அன்பின் வடிவங்களே,
உலகிலுள்ள பெயர்கள், உருவங்கள் அனைத்துமே இறைவனுடையது தான். எனவே அனைத்தும் இறைவனின் உருவங்களே, அனைத்தும் இறைவனின் பெயர்களே என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். நீங்கள் விரும்பும் உருவிலும் பெயரிலும் இறைவன் உங்களுக்கு அருள் பாலிப்பார், எனவே நீங்கள் வணங்கும் பெயரையும், உருவத்தையும் மாற்றாதீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால். தொடர்ந்து உண்மையான கிறிஸ்தவராக இருங்கள். இந்துவாக இருந்தால் உண்மையான இந்துவாக இருங்கள். பௌத்தராக இருந்தால் உண்மையான பௌத்தராக இருங்கள். உங்கள் தேவைக்கேற்றவாறு மதங்களையோ, இறைவனின் பெயர்களையோ மாற்றாதீர்கள். ராமனைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டால் ராமரையே தொடர்ந்து வணங்குங்கள். கிருஷ்ணனை விரும்பினால் கிருஷ்ணனையே தொடர்ந்து வணங்குங்கள். இஸ்லாமியராக இருந்தால் அல்லாவைத் தொடர்ந்து வணங்குங்கள். கிறிஸ்தவராக இருந்தால் யேசுவைத் தொடர்ந்து வணங்குங்கள். இறைவன் ஒருவரே. நீங்கள் அழைக்கும் எல்லாப் பெயர்களும் அவருடையதே. இறைவனை நம்புங்கள். இறைவனருளைப் பெறுங்கள். பேரின்பத்துடன் வாழுங்கள்.
Friday, January 15, 2021
மனதாலோ, வார்த்தைகளாலோ, செயலாலோ யாருடைய மனமும் புண்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
அன்பின் திருவுருவங்களே,
அம்மாவையும் அப்பாவையும் தெய்வமாக வணங்கவேண்டும். ஆசிரியரைத் தெய்வமாக வணங்கவேண்டும். விருந்தினர்களையும் தெய்வமாக மதித்து நடக்க வேண்டும் குயிலின் குரல் ஆனந்தத்தை அளிக்கிறது. காகத்தின் குரலை எவரும் விரும்புவதில்லை. மயில் என்ற பெயரிலேயே இனிமை இருக்கிறது. குழந்தைக்குப் பெயரிடும்போது முழு அமைதியைத் தரும் பெயரையே வைக்கவேண்டும். உதாரணமாக நாகம்மா என்று பெயர் ஒருவருக்கு இருந்தால் அப்பெயரை நினைக்கும்போது பாம்புதான் நினைவுக்கு வரும். எனவே அச்சத்தைத்தரும் பெயர்களை வைக்கக்கூடாது. சத்யா, நாராயணா, சத்யநாராயணா என்ற பெயர் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. ஈஸ்வரம்மா என்ற பெயர் ஈஸ்வரனுக்கே அம்மா என்பதைக் குறிக்கிறது. இனிமையாகவே பேசுங்கள். மனதாலோ, வார்த்தைகளாலோ, செயலாலோ யாருடைய மனமும் புண்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
Thursday, January 14, 2021
இறைவனின் படைப்புக்கள் அனைத்தும் இறைவனே என்று உணர்ந்து தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவோம்.
அன்பின் வடிவங்களே,
எப்படியான சூழ்நிலையிலும் ஒருவர் தர்மத்தின் வழியில் நடந்தால், இறைவனுடைய அருள் அவரைத் தேடிவந்துவிடும்.
பசு தியாகத்தின் சின்னம். மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை பாலைக் குடிக்கிறான். பிறந்த குழந்தையும் பாலைச் குடிக்கிறது. இறக்கும் தறுவாயிலும் மனிதனுக்குப் பால் தேவைப்படுகிறது. பால் ஒரு மனிதனுக்குத் தேவையான அத்தனை ஊட்டச் சத்துக்களையும் கொண்டது பாலைக் கொடுத்துவிட்டு, பசு புல்லையோ காய்ந்தவைக்கோைகோலையோதான் சாப்பிடுகிறது. ஒருபோதும் அது தனது பாலைச் சாப்பிடுவதில்லை. எனவே பசு மிக உயர்வான இடத்தில் வைக்கப்படுகிறது.
ஒரு நாள் ஒரு பண்டிதர் பசு தர்மத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். பசு உணவை உண்ணும் பொழுது அதை விரட்டக் க்கூடாது என அவர் சொன்னார். சிறு மளிகைக் கடைக்கரன் ஒருவனின் மனதில் அது நன்கு பதிந்து விட்டது. அவன் தனது கடைச் சரக்குக்களைப் பாத்திரங்களில் போட்டுக் கடையின் முன் பரப்பி வைத்திருந்தான். இதைக் கண்ட பசுவொன்று கடையிலுள்ள பொருட்களைச் சாப்பிட ஆரம்பித்தது. இதைப் பார்த்த கடைக்காரன் பசுவை விரட்டவில்லை. இதை அங்குவந்தவர்கள் கடைக்காரனிடம் சொன்னபோது, அவன் பண்டிதர் கூறியதைச் சொன்னான். அவந்து அறிவுக்குத் தக்கபடி அவன் நடந்து கொண்டான்.
பொது விதியொன்று இருக்கும்; ஆனால் சூழ்நிலையைப் பொறுத்து அதனைப் பயன்படுத்த வேண்டும். “நான் கொடுத்த புத்தியைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்” என்று பகவான் கூறியிருக்கிறார். வேண்டுமென்றே பசுவைத் துன்புறுத்தக் கூடாது என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
அம்மாவையும் அப்பாவையும் தெய்வமாக வணங்கவேண்டும். ஆசிரியரைத் தெய்வமாக வணங்கவேண்டும். விருந்தினரைத் தெய்வமாகப் பூஜிக்க வேண்டும். பிச்சைகேட்டு வருபவர்களும் தெய்வத்தின் வடிவமே. அதனால்தான் ஏழைகளுக்கு உணவளித்தல் நாராயணசேவை எனப்படுகிறது. எனவே தர்மத்தின் வழியில் நடப்போம். உண்மையைப் பேசுவோம். தர்மான முறையில் நடந்துகொள்வோம். இறைவனின் படைப்புக்கள் அனைத்தும் இறைவனே என்று உணர்ந்து தன்னலமற்ற சேவையில் ஈடுபாடுவோம்.
Wednesday, January 13, 2021
நாம் நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதையே சொல்ல வேண்டும், நல்லதையே செய்யவேண்டும், நல்லவராக வாழ வேண்டும்.
அன்பின் திரு உருவங்களே,
எப்பொழுதும் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கவேண்டும். எந்த முகத்தில் கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவை இல்லாமல் இருக்கிறதோ அந்த முகத்தையே அனைவரும் விரும்புகிறார்கள். எப்பொழுதும் சிரித்தமுகத்துடன் இருக்க வேண்டும். யாராவது உங்களைப் பார்த்துப் பரிகாசம் செய்தாலும் சிரித்த முகத்துடன் இருங்கள். சகோதரா, எப்படியிருக்கிறீர்கள் என்று கனிவோடு கேட்டால் எதிரிகூட மனம் மாறி, நீங்கள் எப்பாடியிருக்கிறீர்கள் என்று கனிவோடு திரும்பக்கேட்பார். நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதைப் பொறுத்தே எதிராளியின் எதிர் விளைவும் இருக்கும். நமக்கு நடைபெறும் அனைத்தும் நமது எண்ணம் செயல் ஆகியவற்றின் எதிர்விளைவாகும். அதாவது REACTION, REFLECTION , RESOUND ஆகும். நாம் என்ன செய்கிறோமோ அது எதிர்விளைவாக நம்மிடமே திரும்ப வந்து விடும். எனவே நமக்கு நடைபெறும் அனைத்தும் நமது செயல்களின் எதிர்விளைவாகும். நமது கேள்வி கடுமையானதாக இருந்தால் கிடைக்கும் பதிலும் கடுமையானதாகவே இருக்கும். REACTION, REFLECTION , RESOUND என்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எனவே நாம் நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதையே சொல்ல வேண்டும், நல்லதையே செய்யவேண்டும், நல்லவராக வாழ வேண்டும். இதுவே மனிதர்களுக்குத் தேவையான மிக முக்கியமான பண்புகளாகும். மனிதனென்றால் மனிதப்பண்புகளுடன் வாழவேண்டும்.
Tuesday, January 12, 2021
Sunday, January 10, 2021
ஆத்மா அநாதியானாது, மரணமற்றது என்பதை உணர்ந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து பிறவா நிலையை அடைவோம்.
அன்பின் திரு உருவங்களே,
ஒரு குழந்தை தாயின் கர்பத்திலிருக்கும் போது தனது தாயின் முகத்தைப் பார்ப்பதில்லை. பிறந்தவுடனும் தாய் யார், தந்தை யார் என்றும் அதற்குத் தெரியாது. அக்குழந்தைக்குப் பெயர் கூடக் கிடையாது. குழந்தை வளரத்தொடங்கியதன் பின்னரே தாயை அடையாளம் காண்கிறது. தந்தை யார், உறவினர்கள் யார் எனப் பிறர் சொல்லிக்கொடுத்தபின் தான் அவர்களை அடையாளம் காண்கிறது. பிறந்த பின்னர் தான் அக்குழந்தைக்குப் பெயர் சூட்டப்படுகிறது. பெயர் சூட்டப்படும் வரை அது குழந்தையே. அதுபோன்றே புவியில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் குழந்தை என்ற ஒரே பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். பிறந்த குழந்தையைத் தாயும் தந்தையும் மகன் அல்லது மகள் என்றும், அக்காவும் அண்ணாவும் தம்பி அல்லது தங்கை என்றும், மாமாவும் மாமியும் மருமகன் அல்லது மருமகள் என்றும் ஒரே குழந்தையைப் பல உறவுமுறைகளைக் குறிப்பிட்டு அழைக்கிறார்கள். சிறுவன் அல்லது சிறுமி என்று அழைக்கப்படும் அதே குழந்தை, சில வருடங்களில் வாலிபன் அல்லது மங்கை என அழைக்கப்படுகிறது. திருமணத்தின்பின் கணவன் அல்லது மனைவி என்ற பெயரும், குழந்தையைப் பெற்றபின் அம்மா அப்பா என்றும், பேரக்குழந்தை பிறந்தபின் தாத்தா, பாட்டி என்றும் அழைக்கப்படுகிறது. பிறந்தது முதல் இறுதி வரை உடல் தோற்றம் மாறிக்கொண்டிருக்கிறது. அழைக்கப்படும் முறையிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அந்த உடலினுன் உள்ளே இருக்கும் ஆத்மா வளர்வதுமில்லை, மாறுவதுமில்லை. இறப்பதுமில்லை. இறுதியில் ஆத்மா உடலை விட்டுப் பிரியும்போதும் அது ஆத்மாவாகவே பிரிகிறது.. உடல் மாத்திரம் அழிகிறது. ஆத்மா உடலில் தங்கியிருக்கும்பொழுது மாத்திரமே உடல் தனது இயக்கங்க்ளில் ஈடுபடுகிறது. எனவே எக்காலத்திலும் மாற்றமடையாத ஆத்மா அநாதியானாது, மரணமற்றது, உடலை இயக்குவது ஆத்மாவே என்பதையும். தனது கர்மவினைகளுக்கமைய அந்த ஆத்மா புதிய உடலை எடுப்பதையும் அல்லது நல்வினைப்பயனால் இறைவனுடன் இரண்டறக் கலந்து பிறவா நிலையை அடைகிறது என்பதையும் உணர்ந்துகொள்வோம். எனவே மனிதர்களாகப் பிறந்த நாம் அனைவரும், இறைவன் எனப்படும் பேரொளியிலிருந்து வந்த ஒரு சிறு பொறியே என்பதை உணர்ந்து, இறைவனருளால் மீண்டும் மீண்டும் உலகில் பிறப்பு இறப்பென்னும் சுழலிலிருந்து மீள்வதற்குப் பெரும் பேறான நமது மனிதப்பிறப்பைப் பயன்படுத்தி, இறைவனை அடைந்து, இறைவனுடன் இரண்டறக் கலப்போம். அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துவோம்
Saturday, January 9, 2021
Friday, January 8, 2021
புலன்களை அடக்கி இறவனை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்வோம்.
அன்பின் திரு உருவங்களே,
இறைவன் நமக்கு ஐந்து புலன்களை அளித்திருக்கிறான். அந்தப் புலன்களை அவற்றின் கட்டுப்பாட்டிலேயே விட்டால் அவை தமது இஷ்டப்படியே செயல்பட்டுப் பல்வேறு பாதைகளில் நம்மை இழுத்துச் சென்றுவிடும். இதனால் இப்புலன்களை கட்டுப்பாட்டில் வைத்து நல்வழியில் பயன்படுத்துவது நமது கடமையாகும். நமது உடல் தேர் போன்றது. மனமே தேர்ச்சாரதி. உயிரே பயணி. இறவனை அடைவதே உயிரின் பயணத்தின் நோக்கம். உடலான தேரை இழுத்துச் செல்லும் குதிரைகளே புலன்கள். புலன் எனப்படும் குதிரைகளைச் செலுத்தும் சாரதியே மனமாகும். குதிரைகள் சாரதியின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை தான் தேர் உரிய பாதையில் விரைவாகச் சென்று, அடைய வேண்டிய இடத்தை அடைய முடியும். ஆனால் குதிரைகள் சாரதியின்கட்டுப்பாட்டில் இருக்காவிட்டால் தேர் சேரவேண்டிய இடத்துக்குச் செல்லாது. எனவே மனமாகிய தேர்ச்சாரதி புலன்களாகிய குதிரைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஐந்து புலன்களும் தமது கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும். கண்ணால் பார்க்க மாத்திரம் முடியும். அதனால் கேட்க முடியாது. காதுகளால் கேடகமுடியும் ஆனால் பார்க்க முடியாது. எனவே ஒவ்வொரு புலனும் தனக்குரிய கடமையை ஒழுங்காகச் செய்யும்வரை எல்லாம் நன்றாகவே நடக்கும். கண்கள் நல்லவற்றையே பார்க்கவேண்டும். காதுகள் நல்லவற்றையே கேட்கவேண்டும் மூக்கு நல்லவற்றையே நுகர வேண்டும். கைகள் நல்லவற்றையே செய்யவேண்டும். கால்கள் நல்ல இடங்களுக்கே செல்ல வேண்டும் வாய் நல்லவற்றையே பேச வேண்டும் நா நல்லவற்றையே சுவைக்க வேண்டும்; பேசவேண்டும். இப்படி எல்லாப் புலன்களும் நல்லவிடயங்களையே செய்யும்போது மனமும் நற்சிந்தனையுடன் இருக்கும் நாம் தவறெதுவுதும் செய்யாமாட்டோம். எனவே புலன்களை அடக்கி இறவனை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்வோம். அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துவோம்.
Wednesday, January 6, 2021
நாம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நற்குண, நற்செய்கைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்
அன்பின் திரு உருவங்களே,
எப்பொழுதும் நமது எண்ணமும், சொல்லூம், செயலும் ஒன்றாக இருக்கவேண்டும். இதனைக் குழந்தைகளுக்குச் சிறு பராயத்திலிருந்தே கற்றுக் கொடுக்கவேண்டும். அதனால் அவர்கள் வளர்ந்த பின்னரும் நற்குணங்களுடன் நற்செயல்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள். தற்காலத்தில் பல குடும்பங்களில் பெரியவர்களே தவறுகளைக் குழந்தைகளின் எதிரிலேயே செய்கிறார்கள். குழந்தைகள் பெரியவர்களின் ஒவ்வொரு செயலையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக தனது தகப்பனாரைத் தேடி அவருக்கு வேண்டாதவர்கள் யாராவது வந்தால், வீட்டினுள் இருந்தபடியே தான் வீட்டில் இல்லையென்று சொல்லும் படி குழந்தையிடம் கூறச்சொல்வது போன்ற சம்பவங்கள் பல குடும்பங்களில் நடைபெறுகின்றன. குழந்தை தகப்பன் பொய்சொல்வதை அவதானிக்கிறது. அதே போல் ஆசிரியாரோ , தந்தை போன்ற பெரியவர்களோ புகைபிடிப்பதைக் குழந்தைகள் பார்கிறார்கள். அப்போது இவை கெட்ட பழக்கங்கள் என்று தம்மிடம் சொல்லும் பெரியவர்களே தவறான காரியங்களைச் செய்வது, குழந்தைகளின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நாம் நடந்துகொள்ள வேண்டும். அப்படியானால்தான் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது நற்குண, நற்செய்கைகளையே கடைப்பிடிப்பார்கள் என்பதை மனதில் கொண்டு நாம் நடந்துகொள்வோம். அதன் மூலம் எதிர்காலத்தை சத்திய யுகமாக மாற்றுவோம். உலகத்திலுள்ள அனைவரும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை, தியாகம் என்பவவற்றை உலக மக்கள் அனைவரும் கடைப்பிடித்து நலமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம்.
Tuesday, January 5, 2021
இறைவன் ஒருவனே. அவரை நம்புங்கள்
அன்பின் திருவுருவங்களே,
நாம் அனைவரும் இறவனை நம்புகிறோம். நாஸ்திகர்கள் கூட இறவன் இல்லை என்று சொல்லும் பொழுது இறவன் என்ற நாமத்தைப் பயன்படுத்துவதால் இறையருளைப் பெறுகின்றனர். ஆனால் அவர்கள் அதனை உணர்ந்துகொளதில்லை.
கடவுள் ஒருவரே. அவரை நாடு, கலாச்சராம், விருப்பு வெறுப்புப் போன்றவற்றின் காரணமாகப் பல பெயர்களால் அழைக்கிறோம். எந்தப் பெயரைப் பயன்படுத்தினாலும் அந்தப்பெயரை இறைவன் ஏற்றுக்கொள்கிறார்.
அதனால் ஒருவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்ற கேள்வி எழக்கூடாது.
ஒருவர் இந்து சமயத்தைச் சார்ந்தவராக இருந்தால் அவர் உண்மையான இந்துவாக இருக்கவேண்டும். இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்.
கிறிஸ்தவ சமயத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவர் உண்மையானா கிறிஸ்தவராக வாழவேண்டும் யேசு பகவானின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்
புத்தசமயத்தை சேர்ந்தவர் புத்தபகவானின் போதனைகளை கடைப்பிடித்து ஒரு சிற்ந்த புத்தமதத்தவராக இருக்கவேண்டும்.
ஒரு இஸ்லாமியர் திருக்குரானைப்பின்பற்றிச் சிறந்த இஸ்லாமியராக இருக்கவேண்டும்.
அதே போல் எந்தச் சமயத்தவராக இருந்தபோதும் அந்த்ச் சமயக் கொள்கைகளைப் பின்பற்றவேண்டும்.
எல்லாச் சமய நூல்களும் அன்பு, பண்பு, கருணை, தியாகம், பிறருக்குதவுதல், அகிம்சை போன்ற நற்குணங்களையே போதிக்கின்றன. எல்லா மதங்களும் வன்செயல், கோபம், ஆணவம், வெறுப்பு போன்றவற்றை விலக்கவேண்டுமென்றே போதிக்கின்றன.
அதனால் ஒரு மதத்தவர் பிற மதத்தவரைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது.
அனைவரும் இறைவனின் வடிவங்களே. எல்லோர் மனதிலும் இறைவன் வாழ்கிறார். எனவே ஒருவரது மனதைப் புண்படுத்துவது அவருள் குடியிருக்கும் இறைவனைப் புண்படுத்துவதாகும். எனவே உங்களால் முடிந்தவரை அனைவருக்கும் உதவுங்கள். உதவமுடியவிட்டாலும் யாரையும் புண்படுத்தாதீர்கள்.
உலகில் இருப்பது ஒரயொருே சூரியன். இந்தியாவுக்கென்று ஒரு சூரியனும், அமெரிக்காவுக்கென்று இன்னொரு சூரியனும், ஆபிரிவிக்காவுக்கு வேறுரு சூரியனும் கிடையாது. ஆங்கிலேயர் சூரியனைச் சன் என்று அழைக்கிறார்கள். தமிழர்கள் சூரியன் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படி வெவ்வேறு மொழிகளில் சூரியனை வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடுகிறார்கள். வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டாலும் அனைவராலும் ஒரே சூரியன்தான் குறிப்பிடப்ப்டுகிறது.
உதாரணமாக ஒருவரின் பெயர் மோகன் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஆசிரியராகப் பணிபுரிகிறார் என்றும் வைத்துக்கொள்வோம். பள்ளியில் அவரை ஆசிரியர் என்று அழைக்கிறார்கள். வீட்டில் அவரது தந்தையும் தாயும் மகன் என்று அழைக்கிறார்கள். அவரது பிள்ளைகள் அப்பா என்று அழைக்கிறார்கள். மாமாவும் மாமியும் மருமகன் என்று அழைக்கிறார்கள். நண்பர்கள் விரும்பியபடியெல்லாம் அழைக்கிறார்கள். ஆனால் அனைவரும் பல பெயர்களைப் பயன்படுத்துவது மோகன் என்னும் ஒருவரையே. யாரும் அப்பா, மகன், ஆசிரியர், மாமா, மருமகன், அண்ணன், தம்பி என அழைக்கப்படுவது வேறு வேறு நபர் என்று நினைப்பதில்லை. எல்லோரும் அவர்களது உரிமைக்கமையவே மோகனை அழைக்கிறார்க்ள். எப்படி அழைத்தாலும் வருவதும், பதிலளிப்பதும் மோகனே.
அதுபோல் தான் இறைவனை நாம் நமக்கு விரும்பிய எந்தப் பெயராலும் அழைக்கலாம். அதனால் ஒவ்வொரு சமயத்தவரும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கும் இறைவன் வெவ்வேறானவர் என்று நாம் நினைக்கக்கூடாது. பெயர்கள் அனைத்தும் ஒரே இறைவனையே குறிக்கின்றன. பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உருவங்களும் அவருடையதே.
இறைவன் அன்பின் வடிவானவர். விருப்பு வெறுப்பற்றவர். அனைவரையும் நேசிப்பவர். அவர் நமது இதயத்திலதான் வசிக்கிறார். நமது உடலே இறைவனின் ஆலயம். எனவே நாம் அனைவரும் நமது உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக்கொள்வோம். செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவன் விரும்பக்கூடிய செயல்களளாகவே செய்வோம். உலகம் முழுவதம் சாந்தியுடனுமும் மகிழ்வுடனும் சமாதானத்துடனும் வாழ இறைவைனை வேண்டிக்கொள்வோம்.
Monday, January 4, 2021
சத்தியத்தையே அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்
இறைவனின் அன்பு வடிவங்களே,
எப்பொழுதும் நாம் சத்தியத்தையே கடைப்பிடிக்கவேண்டும். நமது எண்ணமும், சொல்லும் செயலும் ஒண்றாகவே இருக்கவேண்டும். நினைத்தவற்றையே சொல்லவேண்டும். சொல்லியதையே செய்யவேண்டும். எண்ணங்கள் தூய்மையானவையாக இருக்க வேண்டும். அதனால் நம் சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கும். சத்தியத்தையே அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும். சத்தியம் ஒருபோதும் மாறாதது. இடத்துக்கிடம் வேறுபடாதது. அமெரிக்கச் சத்தியம், இந்தியச் சத்தியம், ஜப்பான் சத்தியம் என்று நாட்டுக்கு நாடு அது வேறுபடாது. சத்தியத்தால் தூய்மையமான வாழ்க்கை கிடைகும். எப்பொழுதும் சத்தியத்தையே பேசவேண்டும். சத்தியம் தீங்கு விளைவிக்காது. பொய்யே தீங்குகளுக்குக் காரணம். எனவே அனைவரும் சத்தியத்தைக் கடைப்பிடிப்போம். இனிமையாகப் பேசுவோம். எவருடைய மனத்தையும் புண்படுத்தாமல் அனைவருக்கும் உதவியாக வாழ்வோம். உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழப் பிரார்த்திப்போம்.
Sunday, January 3, 2021
Saturday, January 2, 2021
அனைத்திலும் இறைவன் இருப்பதை உணர்ந்து ஆன்மீகத்தில் முன்னேறுவோம் .
அன்பின் வடிவங்களே,
தற்போதைய இளைஞர்கள் பலரின் பார்வை தவறான நோக்கமுடையதாக இருக்கிறது. இப்பார்வை சாதாரணப் பார்வையைப் போன்றதல்ல. இப்பக்கம் அப்பக்கம் என்று மாறி மாறிப் பார்துக்கொண்டிருக்கிறார்கள். நம் பார்வை நேர் நோக்கு உடையதாக இருக்கவேண்டும். கண்கள் நல்ல காட்சிகளைப் பார்ப்பதால் நமக்கு நற்பயன் உண்டாகிறது. யாரிடம் என்ன பேசவேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், எப்பொழுது சிரிக்காமல் இருக்கவேண்டும், என்கின்ற பொது அறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது இங்குமங்கும் பார்த்துச் சிரிப்பது வழக்கத்தில் உள்ளது. இது தவறு. இது போன்ற சிரிப்பு நம் வாழ்க்கையைச் சீரழித்து விடும். நாம் எப்பொழுது சிரிக்கவேண்டும், எங்கே சிரிக்க வேண்டும், எதற்காகச் சிரிக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். சிரிப்பில் ஒன்று புன்முறுவல். மற்றது பிறர் கேட்கும்படி உரக்கச் சிரித்தல். உரக்கச் சிரிப்பது மிகவும் கெடுதல். இரண்டு மூன்றுபேர் கூடியிருந்து சிரிக்கிறார்கள். அப்பொழுது அவ்வழியாகப் பெண்கள் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் சிரித்தது வேறு விஷயம் பற்றி இருக்கலாம். ஆனால் அப்பெண்கள் தங்களைப் பார்த்துச் சிரித்ததாக எண்ண வாய்ப்பு உண்டல்லவா. ஆகவே எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் பெண்கள் கடந்து செல்லும்போது நாம் சிரிக்கக்கூடாது. மற்றவர்களைப் பார்த்து நீங்கள் சிரித்தால், மற்றவர்கள் உங்களை பார்த்துச் சிரிக்க மாட்டர்களா? நகர்ப்புறங்களில் சிலர் கடைகளிலும் ஷொப்பிங் மாலிலும் அமர்ந்து அங்கு வந்து, சென்றுகொண்டிருப்பவர்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படிச் சிரிப்பவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் ஷொப்பிங் வருவார்களல்லவா. அவர்களைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்கலாமல்லவா. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை ஒன்று உண்டு. அதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. நாம் செய்யும் செயல்களின் பயன்களை அனுபவித்தே தீரவேண்டும். இத்தீய செயல்களினால் கடவுளிடமிருந்தும் நீங்கள் விலகிச் செல்கிறீர்கள். இதுபோன்ற அவப்பெயர் கிட்டியவர்களுக்குத் தெய்வத்தின் அருகில் இருப்பதற்கான வாய்புக் கிடைக்காது. ஆகவே சிரிப்புக்கூட நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் பார்வையும் இதைப்போலவே நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். பேச்சையும் கூட நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். விலங்குகளைப் பார்த்தும் நாம் தீயவார்த்தைகளைப் பேசக்கூடாது. எல்லா உயிரினங்களுக்குள்ளும் இறைவன் இருப்பதால் நம் வார்த்தைகள் மிருகங்களைக் குறிப்பிடாமல் இறைவனையே குறிப்பிடும். எனவே மிருகங்களைப் பார்த்துக்கூடக் கொடுமையான வார்த்தைகளைச் சொல்லக்கூடாது. விலங்குகளிடமும் அன்பாக இருப்போம். தீய வார்த்தைகளை விட்டுவிடுவோம். பிரபஞ்சத்திலுள்ள அனைத்திலும் இறைவன் இருப்பதை உணர்வோம். ஆன்மீகத்தில் முன்னேறுவோம்.
Friday, January 1, 2021
வெறும் கைகளுடன் என்னிடம் வாருங்கள், உங்கள் கைகளை எனது அருளால் நிறைத்து அனுப்புகிறேன் என்று இறைவன் கூறுகிறார்.
யாராவது நமக்கு உதவிசெய்தால் அல்லது அவர்கள் நம்மிடம் பேசினால், எப்படியிருக்கிறீர்கள், மிக்க நன்றி என்று பதிலளிக்கிறோம். கீழே விழுந்த நமது கைக்குட்டையை யாராவது எடுத்துக் கொடுத்தால், மிக்க நன்றி என்று கூறுகிறோம். ஏரியிலிருக்கும் தண்ணீரை நம் வீட்டுக்கு வினியோகித்ததற்காக, நாம் தண்ணிர் வரி செலுத்துகிறோம். அதைப்போலவே மின்சாரத்துக்கும் மின்கட்டணம் செலுத்துகிறோம். நாம் வாங்கிய நிலத்தில் நாம் ஒரு வீடு கட்டிக்கொண்டால், அதற்கும் வீட்டுவரி செலுத்துகிறோம். காற்றைப் பெறுவதற்கு ஒரு மின்விசிறியைப் பயன்படுத்தினால் அதற்கு மின்கட்டணம் செலுத்துகிறோம். தண்ணீரை உபயோகப்படுத்தினால் தண்ணீர் வரி செலுத்துகிறோம். தடையில்லாமல் நமக்குக் காற்றையளிக்கும் இறைவனுக்கு என்ன நன்றி செலுத்துகிறோம். இறைவனுக்கு என்ன வரி செலுத்துகிறோம். சூரியன் உலக்குக்கு வெளிச்சத்தத் தருகிறது. அந்தச் சூரியனுக்கு என்ன வரி செலுத்துகிறோம். ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அதையும் நாம் எடுத்துப் பயன்படுத்துகிறோம். இப்படி நீரை வழங்கும் இறைவனுக்கு நாம் என்ன வரியைச் செலுத்துகிறோம். அற்பமான சாதரணமான விஷயத்துக்கெல்லம் நாம் வரி செலுத்துகிறோம். கடவுள் அருளும் அனைத்துமே இலவசம். காற்று இலவசம். நீரும் இலவசம். வெளிச்சமும் இலவசம், ஒலியும் இலவசம். இறைவன் அனைத்தையும் இலவசமாகவே கொடுக்கிறார். இந்தப் பூமி இறைவன் அருளியதே. அதில் சிறுபகுதியைப் பயன்படுத்தும் போது அதற்கும் வரி செலுத்துகிறோம். பஞ்சபூதங்களும் இறைவனின் வடிவங்களே. இறைவனுடைய அருளைப்பெற்றுக்கொண்டு அதனை அனுபவித்துக்கொண்டிருக்கும் நாம் அந்த இறைவனுக்கு என்ன வரி செலுத்துகிறோம். அதைக்கொடுக்கவில்லையே, இதைக்கொடுக்கவில்லையே என்று கடவுளயே குறை கூறுகிறோம். கடவுள் கொடுத்தவற்றுக்கே நன்றி இல்லாதவர்களாக இருக்கிறோம். அப்படியிருக்கக் கடவுள் இன்னும் கொடுக்கவில்லையே என்ற எண்ணம் எவ்வளவு கீழ்த்தரமானது. உண்மையில் மனிதன் திருப்தி உள்ளவனாக வாழவேண்டும். இறைவன் நமக்காக எத்தனை தான் அருளியிருக்கிறார். இந்தக் காடுகளைப் படைத்து இந்தமரங்களின் மூலமாகப் பிராண சக்தியை அதாவது ஒக்சிஜனை அருளியிருக்கிறார். மனிதன் மூச்சுக்காற்றின் மூலம் வெளியிடும் கரியமில வாயுவை, அதாவது காபன் டை ஒக்சைட்டை இந்த மரங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இதனால் காற்று மாசு கட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றை அருளிய கடவுளுக்கு நாம் செலுத்தும் வரியையே நம் முன்னோர்கள் பலி என்று கூறினார்கள். பலியென்றால் ஒரு உயிருள்ள உடலை இறைவனுக்குப் பலிகொடுப்பது என்ற தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது. பலியென்றால் எந்த உயிரையும் துன்புறுத்துவது அல்ல. பலி என்றால் வரி என்றுதான் அர்த்தம். நம்முடைய நன்றியுணர்வை இறைவனுக்குத் தெரிவிப்பதே நாம் இறைவனுக்குச் செலுத்தும் வரியாகும். அத்துடன் நாம் கடைப்பிடிக்கும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை அகிம்சை, தியாகம் என்பனவும், பிறருக்குச் செய்யும் சுயநலமற்ற உதவியும், ஆழ்ந்த பிரார்த்தனையும் இறைவனுக்கு நாம் செலுத்தும் வரியாகும். துன்மார்க்கம் மற்றும் தீயசக்திகளை அழித்து நம்மிடையே நற்சக்திகளை வளர்த்துக்கொள்வோம். வெறும் கைகளுடன் என்னிடம் வாருங்கள், உங்கள் கைகளை எனது அருளால் நிறைத்து அனுப்புகிறேன் என்று இறைவன் கூறுகிறார்.
Subscribe to:
Posts (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...