Wednesday, January 19, 2022

கீதை பிறந்த கதை

ஓம் சிறி சாயி ராம். 

தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச்‌ சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்குறோணிக் கௌரவ‌‌சேனை ஒருபுறமும் யுத்தத்துக்குத் தயாராக அணிவகுத்து‌நின்றனர். 


 அருச்சுனின் தேர்ச்சாரதியாக கிருஷ்ணபரமாத்மா ஆயுதமேந்தாமல் அமர்ந்திருந்தார். 

போருககுத் தயாராக இருந்த அருச்சுனனுக்கு எதிர் அணியில் தம்முடன் போர்புரியத் தயாராக‌ வந்திருப்போரைப் பார்க்கும்‌‌ ஆசை ஏற்பட்டது. எனவே தனது தேரோட்டியான கிருஷ்ண ‌பகவானிடம்‌ தனது தேரை இரு படைகளுக்கும் நடுவில் கொண்டு சென்று நிறுத்துமாறு கேட்டான். அதன்படியே இரு சேனைகளின் நடுவில் அருச்சுனனின் தேரை நிறுத்தினார் கண்ணபிரான். 

எதிரிகளின படையை அவதானித்த அருச்சுனன் தன்னைச் சிறு வயதிலிருந்து தூக்கிச் சீராட்டி வளர்த்த பீஷ்மர மற்றும் தனது குரு துரோணர் மற்றும் உறவினர்கள் தன்னுடன் போர்புரிய எதிரணியில் தயாராக நிற்பதைக் கண்டான். இதனால் அவனது மனதில் ஒருவித கலக்கம் ஏற்பட்டது.

 (தொடர்ச்சி நாளை) 

ஓம் சிறி சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...