Thursday, January 14, 2021

இறைவனின் படைப்புக்கள் அனைத்தும் இறைவனே என்று உணர்ந்து தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவோம்.

அன்பின் வடிவங்களே, எப்படியான சூழ்நிலையிலும் ஒருவர் தர்மத்தின் வழியில் நடந்தால், இறைவனுடைய அருள் அவரைத் தேடிவந்துவிடும். பசு தியாகத்தின் சின்னம். மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை பாலைக் குடிக்கிறான். பிறந்த குழந்தையும் பாலைச் குடிக்கிறது. இறக்கும் தறுவாயிலும் மனிதனுக்குப் பால் தேவைப்படுகிறது. பால் ஒரு மனிதனுக்குத் தேவையான அத்தனை ஊட்டச் சத்துக்களையும் கொண்டது பாலைக் கொடுத்துவிட்டு, பசு புல்லையோ காய்ந்தவைக்கோைகோலையோதான் சாப்பிடுகிறது. ஒருபோதும் அது தனது பாலைச் சாப்பிடுவதில்லை. எனவே பசு மிக உயர்வான இடத்தில் வைக்கப்படுகிறது. ஒரு நாள் ஒரு பண்டிதர் பசு தர்மத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். பசு உணவை உண்ணும் பொழுது அதை விரட்டக் க்கூடாது என அவர் சொன்னார். சிறு மளிகைக் கடைக்கரன் ஒருவனின் மனதில் அது நன்கு பதிந்து விட்டது. அவன் தனது கடைச் சரக்குக்களைப் பாத்திரங்களில் போட்டுக் கடையின் முன் பரப்பி வைத்திருந்தான். இதைக் கண்ட பசுவொன்று கடையிலுள்ள பொருட்களைச் சாப்பிட ஆரம்பித்தது. இதைப் பார்த்த கடைக்காரன் பசுவை விரட்டவில்லை. இதை அங்குவந்தவர்கள் கடைக்காரனிடம் சொன்னபோது, அவன் பண்டிதர் கூறியதைச் சொன்னான். அவந்து அறிவுக்குத் தக்கபடி அவன் நடந்து கொண்டான். பொது விதியொன்று இருக்கும்; ஆனால் சூழ்நிலையைப் பொறுத்து அதனைப் பயன்படுத்த வேண்டும். “நான் கொடுத்த புத்தியைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்” என்று பகவான் கூறியிருக்கிறார். வேண்டுமென்றே பசுவைத் துன்புறுத்தக் கூடாது என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அம்மாவையும் அப்பாவையும் தெய்வமாக வணங்கவேண்டும். ஆசிரியரைத் தெய்வமாக வணங்கவேண்டும். விருந்தினரைத் தெய்வமாகப் பூஜிக்க வேண்டும். பிச்சைகேட்டு வருபவர்களும் தெய்வத்தின் வடிவமே. அதனால்தான் ஏழைகளுக்கு உணவளித்தல் நாராயணசேவை எனப்படுகிறது. எனவே தர்மத்தின் வழியில் நடப்போம். உண்மையைப் பேசுவோம். தர்மான முறையில் நடந்துகொள்வோம். இறைவனின் படைப்புக்கள் அனைத்தும் இறைவனே என்று உணர்ந்து தன்னலமற்ற சேவையில் ஈடுபாடுவோம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...