Friday, January 8, 2021

புலன்களை அடக்கி இறவனை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்வோம்.

அன்பின் திரு உருவங்களே, இறைவன் நமக்கு ஐந்து புலன்களை அளித்திருக்கிறான். அந்தப் புலன்களை அவற்றின் கட்டுப்பாட்டிலேயே விட்டால் அவை தமது இஷ்டப்படியே செயல்பட்டுப் பல்வேறு பாதைகளில் நம்மை இழுத்துச் சென்றுவிடும். இதனால் இப்புலன்களை கட்டுப்பாட்டில் வைத்து நல்வழியில் பயன்படுத்துவது நமது கடமையாகும். நமது உடல் தேர் போன்றது. மனமே தேர்ச்சாரதி. உயிரே பயணி. இறவனை அடைவதே உயிரின் பயணத்தின் நோக்கம். உடலான தேரை இழுத்துச் செல்லும் குதிரைகளே புலன்கள். புலன் எனப்படும் குதிரைகளைச் செலுத்தும் சாரதியே மனமாகும். குதிரைகள் சாரதியின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை தான் தேர் உரிய பாதையில் விரைவாகச் சென்று, அடைய வேண்டிய இடத்தை அடைய முடியும். ஆனால் குதிரைகள் சாரதியின்கட்டுப்பாட்டில் இருக்காவிட்டால் தேர் சேரவேண்டிய இடத்துக்குச் செல்லாது. எனவே மனமாகிய தேர்ச்சாரதி புலன்களாகிய குதிரைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஐந்து புலன்களும் தமது கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும். கண்ணால் பார்க்க மாத்திரம் முடியும். அதனால் கேட்க முடியாது. காதுகளால் கேடகமுடியும் ஆனால் பார்க்க முடியாது. எனவே ஒவ்வொரு புலனும் தனக்குரிய கடமையை ஒழுங்காகச் செய்யும்வரை எல்லாம் நன்றாகவே நடக்கும். கண்கள் நல்லவற்றையே பார்க்கவேண்டும். காதுகள் நல்லவற்றையே கேட்கவேண்டும் மூக்கு நல்லவற்றையே நுகர வேண்டும். கைகள் நல்லவற்றையே செய்யவேண்டும். கால்கள் நல்ல இடங்களுக்கே செல்ல வேண்டும் வாய் நல்லவற்றையே பேச வேண்டும் நா நல்லவற்றையே சுவைக்க வேண்டும்; பேசவேண்டும். இப்படி எல்லாப் புலன்களும் நல்லவிடயங்களையே செய்யும்போது மனமும் நற்சிந்தனையுடன் இருக்கும் நாம் தவறெதுவுதும் செய்யாமாட்டோம். எனவே புலன்களை அடக்கி இறவனை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்வோம். அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...