Wednesday, January 27, 2021

அன்போடு இருங்கள், அன்போடு பேசுங்கள். அன்பினால் எதையும் சாதிித்து விடலாம்.

அன்பின் அவதாரங்களே, எப்போதும் அன்போடு இருங்கள், யாரோடு பேசினாலும் அன்போடு பேசுங்கள். உள்ளத்தில் அன்பு இருந்தால் எதையும் சாதிித்து விடலாம். உங்கள் அனைவரிடத்திலும் அன்பு உள்ளது. ஆனால் அதைப் பயன்படுத்துவதில்லை. பலர் அன்புக்கு முரணான வாழ்க்கையை வாழ்கிறார்கள். காலால் நடக்கவேண்டிய மனிதன் தலையால் நடந்தால் எவ்வளவு தூரம் நடக்க முடியும். கால்கள் நடப்பதற்காக அளிக்கப்பட்டுள்ளது.வாயாலும் உண்மையைப் பேசவேண்டும். உண்மையைப்பேசுவதே சிறந்தது. உண்மையற்றதைப் பேசுவது தலையால் நடப்பதைப்போன்றது. எவ்வளவு தூரம் நடக்கமுடியும். சிந்திப்பதற்குத்தான் அறிவு வழங்கப்பட்டுள்ளது. எது நல்லது, எது கெட்டது, எது உண்மை, எது பொய், என்று சிந்தித்துச் செயல்படவேண்டும். நான் பேசியது உண்மையா பொய்யா, சரியா தவறா என்ற முடிவை உங்களுக்குள்ளகவே ஆராய்ந்து பார்க்கவேண்டும். உண்மை வழியில்தான் வாழவேண்டும். சத்தியத்தைவிட உயர்ந்த தர்மம் எதுவும் இல்லை. அதனால் எப்பொழுதும் உண்மையையே பேசவேண்டும். சத்தியமே இறைவனின் திருவுள்ளம். எப்பொழுதும் இறைவனின் திருப்பெயரைச் சொல்லுங்கள். வழிபாட்டுக்கென வீண்செலவு செய்யாதீர்கள். உணவற்றவர்களுக்கு உணவு அளித்திடுங்கள். உடையற்றவர்களுக்கு உடை கொடுங்கள். கடவுளின் பெயரை மனதுக்குள்ளாகவே சொன்னால் போதும். பிச்சயிடும்போதுகூட இறைவா என்று சொல்லிக் கொண்டே கொடுக்கவேண்டும். மனம்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். மனம் தான் அடிமைத்தனத்துக்கும் வீடுபேற்றுக்கும் காரணம். எதை மறந்தாலும் கடவுளின் திருப்பெயரை மாத்திரம் மறக்கக்கூடாது. திருநாமத்தால் துன்பம் விலகும். அமைதியின்மை, கோபம், துன்பம், துயரம் அனைத்தையும் கடக்க இறைவனின் நாமம் ஒன்றே போதுமானது. காமம், குரோதம், மோகம், கோபம் போன்ற அனைத்துமே நரகம் போன்றது. ராட்சச குணங்களைக் கொண்டவர்களைை நாம் அண்டவிடக்கூடாது. கோபம் என்னும் அரக்கனை அனுமதித்தால் அது எல்லாவற்றையும் அழித்துவிடும். கோபமுடைய மனிதனை நம்பி எந்தவேலையையும் கொடுக்கக்கூடாது. அவனிடமிருந்து உறவினர்கள் கூட விலகிவிடுவார்கள். கோபம் , பொறாமை ஆகியவை நம்மை அணுகவிடக்கூடாது. எப்பொழுதும் அன்புவடிவமாகக் கடவுளின் நாமத்தை உச்சரித்தவண்ண்மே இருக்கவேண்டும். இவ்வாறு அமைதியை அனைவரும் கடைப்பிடித்தால் நாடு வளம்பெறும். நாட்டு நலனை விரும்புபவர்கள் எப்பொழுதும் அன்புடன் வாழவேண்டும். யாருக்கும் எவ்வித துன்பமும் தராமல் வாழவேண்டும். உலகதின் அனைவரும் சுகமாக வாழவேண்டுமெனப் பிரார்த்திக்க வேண்டும். பஜனைகளின் முடிவில் கூட சமஸ்த லோகா சுகினோ பவந்து என்று சொல்கிறீர்கள். அன்புடன் கடவுளை நினைக்கவேண்டும். ஏனெனில் இந்த அன்புதான் உலகைக் காக்கிறது. மனிதர்கள் அன்பெனும் பாதையை விட்டு விலகி வாழவே கூடாது. பிறர் பரிகசிக்கலாம், ஏளனம் செய்யலாம், ஆனால் அன்புடனே எப்பொழுதும் வாழவேண்டும். அன்பு அளித்தும், மன்னித்தும் வாழ்வதே. கோபம் கேடு விளைவிக்கும். ஆகவே அன்புடன் வாழுங்கள். உங்களுக்கு யாராவது துன்பம் செய்யக்கூடும் அப்பொழுதும் கோபப்படக்கூடாது. கடவுள்தான் அவ்வாறு செய்கிறார் என்று நினைக்கவேண்டும். கடவுள்தான் எல்லாவற்றையும் செய்கிறார். கடவுள் தான் துன்பங்களையும் தருகிறார். சந்தோசத்தையும் அவரே அளிக்கிறார். எல்லா நேரங்களிலும் காப்பாற்றுவதும் கடவுளே. தண்டிப்பதும் கடவுளே. இருப்பதைக் காப்பதும் கடவுள்தான். எல்லாம் கடவுள் எண்னப்படியே நடைபெறுகின்றன. அதனால் எல்லாவற்றையும் கடவுளுக்கா அர்பணம் செய்யவேண்டும். சிலர் பழி சொல்லலாம். அதையும் கடவுள் செய்கிறார் என்று நம்பவேண்டும். உங்களுக்கு நடப்பதெல்லாம் கடவுளின் பிரசாதமே. செய்யும் செயல்கள் எல்லாம் கடவுளுக்கு மகிழ்ச்சியுண்டாக்கவே செய்யவேண்டும். இவ்வாறு நடந்துகொண்டால் முக்தி நிச்சயம். கல்லை மிதக்கவைக்கலாம். மனிதனை மிதக்கவைக்கமுடியாது. சம்சாரம் என்னும் இக்கடலில் நாம் மிதக்கும் பொருள்போல் இருக்கவேண்டும். அதில் முழ்கிவிடக்கூடாது. அன்பெனும் அமுதம் கோபம், பொறாமை எனும் அரக்கர்களை அழித்துவிடும். எப்பொழுதும் எது நடந்தாலும் அது கடவுள் சங்கல்ப்பப்படி நடப்பதாகவே நினைத்துக்கொள்ளவேண்டும். பஜனை செய்யுங்கள். கடவுளின் நாமத்தை உச்சரியுங்கள். பஜனை மிக முக்கியமானது. கடவுளின் திருப்பெயரை உச்சரிப்பதே பஜனையின் முக்கிய அம்சம். பலருடன் சேர்ந்து பஜனை செய்யும்போது ஒருவராவது கடவுளின் மனதை உருகச் செய்துவிடுவார். பலர் ஒன்றுசேர்ந்து நாம ஜெபத்தில் ஈடுபடும்போது கடவுளின் மனம் உருகிவிடும். அதிகாலையில் நகர சங்கீர்த்தனம் செய்யும்போது அதைக் கேட்டுக் கண்விழிப்பவர்கள் மனமகிழ்ச்சியடைவர். சமஸ்த லோகா சுகினோ பவந்து. ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...