Thursday, November 17, 2022

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம்


சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர்.

ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங்களில் செய்த கர்மவினைகளின்படியே ஒருவர் இப்பிறவியில் சுகத்தையும் துன்பத்தையும் மாறிமாறி அனுபவித்து வருவதாகக் கூறுகிறார்.

 ஒவ்வொருவரும் அவரவர்களுக்குரிய கர்மவினைப்படடி எந்தெந்தக் காலத்தில் என்னென்ன சுகதுக்கங்கள் அனுபவிக்க வேண்டுமோ அவற்றை அவனுக்குக் கொடுக்கும் அதிகார புருஷர்களாக பகவான் நவக்கிரக நாயகர்களை நியமித்துள்ள்ளார்.

ஒவ்வோருவரதும் கர்ம வினைகளுக்கேற்ப அவர்களுக்கு சுகம்-துக்கம் என்பனவற்றை உரிய நேரத்தில் வழங்கும் அதிகாரிகளாகக் கிரகங்களை நியமித்துத் தான் தர்ம பரிபாலனம் செய்வதாக பகவான் கூறுகிறார்.

இறைவனே நியமித்த அதிகாரிகளான கிரகங்கள் இறைவனது அனுகிரகத்தைப் பெற்றவர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
தன்னிடம் பரிபூரண சரணாகதியடைந்த பக்தர்களை நவக்கிரகங்களின் பாதிப்பிலிருந்துகாப்பதாகவும் பகவான் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

இதனால்தான் தனது அனுக்கிரகத்தைப் பெற்றுள்ள‌தனது பக்தர்கள் அனைவரையும் எந்தக் கிரகமுமும் பாதிப்பதில்லை என்று பகர்கிறார் நமது சாயிநாதன்.

எனவே தனது அனுக்கிரகமே சகல கிரகங்களினதும் பாதிப்பிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் ரக்க்ஷை என்பதை உறுதிப்படுத்துகிறார்.

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் ‌வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே
ஆறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவரக்குமுடனே ஏற்ற தேவாரப் பாடலுக்கு அமைய எம்பெருமானிடம் பரிபூரணமாகச் சரணாகதியடைந்து சகல கிரகதோஷங்களிலுமிருந்து உய்வுறுவோம்.

சமஸ்த லோகா சுகினோ பந்து.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...