Wednesday, January 13, 2021

நாம் நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதையே சொல்ல வேண்டும், நல்லதையே செய்யவேண்டும், நல்லவராக வாழ வேண்டும்.

அன்பின் திரு உருவங்களே, எப்பொழுதும் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கவேண்டும். எந்த முகத்தில் கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவை இல்லாமல் இருக்கிறதோ அந்த முகத்தையே அனைவரும் விரும்புகிறார்கள். எப்பொழுதும் சிரித்தமுகத்துடன் இருக்க வேண்டும். யாராவது உங்களைப் பார்த்துப் பரிகாசம் செய்தாலும் சிரித்த முகத்துடன் இருங்கள். சகோதரா, எப்படியிருக்கிறீர்கள் என்று கனிவோடு கேட்டால் எதிரிகூட மனம் மாறி, நீங்கள் எப்பாடியிருக்கிறீர்கள் என்று கனிவோடு திரும்பக்கேட்பார். நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதைப் பொறுத்தே எதிராளியின் எதிர் விளைவும் இருக்கும். நமக்கு நடைபெறும் அனைத்தும் நமது எண்ணம் செயல் ஆகியவற்றின் எதிர்விளைவாகும். அதாவது REACTION, REFLECTION , RESOUND ஆகும். நாம் என்ன செய்கிறோமோ அது எதிர்விளைவாக நம்மிடமே திரும்ப வந்து விடும். எனவே நமக்கு நடைபெறும் அனைத்தும் நமது செயல்களின் எதிர்விளைவாகும். நமது கேள்வி கடுமையானதாக இருந்தால் கிடைக்கும் பதிலும் கடுமையானதாகவே இருக்கும். REACTION, REFLECTION , RESOUND என்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எனவே நாம் நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதையே சொல்ல வேண்டும், நல்லதையே செய்யவேண்டும், நல்லவராக வாழ வேண்டும். இதுவே மனிதர்களுக்குத் தேவையான மிக முக்கியமான பண்புகளாகும். மனிதனென்றால் மனிதப்பண்புகளுடன் வாழவேண்டும்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...