Monday, January 25, 2021

இறைவனுடைய திருநாமத்தை இருதயத்தில் பிரதிஷ்டை செய்வதே உண்மையான சரணாகதியாகும்.

அன்பின் வடிவங்களே, பெயர் (நாமம்) தான் நித்தியமானது, சத்தியமானது. யாராலும் அதை அழிக்க முடியாது. யாராலும் தூக்கியெறியவும் முடியாது. யாராலும் அதற்கு நாசம் விளைவிக்கவும் முடியாது. கடவுள் ராமர் எனும் பெயரும் வடிவமும் தாங்கி இலங்கைக்குச் சென்று ராவணனை வென்றார். ராவணன் அழியவேண்டியதாயிற்று. “ராமா, உங்கள் பெயர் எல்லாவற்றையும் வெல்லும் வல்லமை பெற்றது. இலங்கைச் சமுத்திரம் 100 மைல் தூரமுள்ளது. ரா, மா என்ற இரண்டு அட்சரங்களினால் மட்டுமே 100 மைல் கடலைக் கடக்க முடிந்தது” என்று விபீசணன் ராமரிடம் சொன்னான். யாரெல்லாம் இறைவனின் நாமத்தைச் சொல்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். இறைவனின் எப்பெயரை உச்சரித்தாலும் உங்களுக்கு வெற்றிதான். எல்லாப் பெயர்களிலுமே இரண்டு அட்சரங்கள் தான். ராமா, சிவா, யேசு, போன்ற இந்த இரண்டு எழுத்துக்களைக் கொண்டே உங்களால் எதையும் சாதிக்க முடியும். பெயர் ஒன்று மட்டுமே நிலையானது. வடிவம் முதிர்ச்சியடைந்து இறுதியில் அழிந்து விடும். பெயரே மிகவும் முக்கியமானது. ஆகவே இறைவனின் பெயரை நமது உள்ளங்களில் பிரதிஷ்டை செய்துகொள்ளவேண்டும். எவ்வளவு யாகங்கள் செய்தாலும் எவ்வளவு தான தர்மங்கள் செய்தாலும்,பயனில்லை. சிராவணம், கீர்த்தனம், நாம்ஸ்மரணம், பாதசேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்மநிவேதனம் என்பது நவவித பக்தி. சரணாகதியென்றால் உடலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யவேண்டியது என்று பொருளில்லை. இறைவனுடைய திருநாமத்தை இருதயத்தில் பிரதிஷ்டை செய்வதே உண்மையான சரணாகதியாகும். இறைவனுடைய திருநாமத்தை உச்சரித்து, வாழ்வினைப் பூர்த்திசெய்துகொள்ளுங்கள். உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்தியுங்கள்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...