Friday, January 22, 2021

மாணவர்களை மனிதவள மேம்பாட்டுப்பண்புகளை அறிந்த லட்சியமாணாவர்களாக்குவது மிகவும் அவசியமாகும்

அன்பின்வடிவங்களே, ஒருவர் படித்துக் கல்வியறிவு பெற்றிருந்தாலும், தன்னைப்பற்றிய அறிவு இல்லாலமிலிருந்தால் அவர் ஒரு முட்டாளாகவே கருதப்படுவார். மேலும் மேலும் படித்து அறிவை வளர்த்துக்கொண்டாலும், முட்டாள் தனமான ஒருவரால் சரியான முடிவு எடுக்கமுடியாது. ஒருவர் கல்வியை அதிகம் பெற்று அதிக அறிவைப் பெறுவதாகக் கூறுகிறார். பள்ளிக் கல்விமூலம் முழுமையான அறிவைப் பெறமுடியாது. மிக அதிகம் படித்து என்ன பயன். நடைமுறைக்கு உதவாத படிப்பால் பயனேதும் இல்லை. எத்தனை பட்டங்களைப்பெற்றாலும் அறிவைப் பயன்படுதாவிட்டால் பயனெதுவுமில்லை. கல்விக்கான பயிற்சி வாழ்க்கைக்கான பயிற்சியிலிருந்து வேறுபட்டது. கற்றதன் பயன் வாழ்வில் கற்றதைக் கடைப்பிடிப்பதாகும். அதிகம் படித்திருந்தாலும் அற்பத்தனத்தைக் கைவிடவேண்டும். அதிகம் படித்தவர்கள் பலர் புத்தியீனர்களாக இருக்கிறார்கள். அறிவற்று நடக்கும் பெரியவர்களைப் பார்க்கும் சிறுவர்களும் அறிவற்றவர்களாகவே மாறி விடுகிறார்கள். கடவுள் நமக்கு வெளியில் எங்கும் இல்லை. நமக்குள்ளேயே இருக்கிறார். அன்பைப் பெற்று அன்பை வளர்த்துக்கொண்டு நமக்குள் இருக்கும் கடவுளுடன் தொடர்புகொண்டு வாழவேண்டும். கடவுள் வெளியில் இருக்கிறார் என்று கருதினாலும் அவருடன் தொடர்பு கொள்ள முடியும். கடவுள் உங்களிடமிருந்து வேறுபட்டவரில்லை. கடவுள் உங்களுக்குக் கீழே, மேலே, முன்னே, பின்னே உங்களைச் சுற்றி இருக்கிறார். நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளுடன் நீங்கள் அன்பின் தொடர்பிலிருப்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். கடவுளுடன் தொடர்புகொண்டவுடன் தெய்வீகத்தின் ஐக்கியம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மிடமிருக்கும் ஆன்மீக ஆற்றலை எப்படி அறிவது. கடவுளை நம்புவது இதயபூர்வமாகவா அல்லது பாசாங்கா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். லாபமோ நட்டமோ எது ஏற்பட்டாலும், கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிறிதும் குறைக்கமாட்டேன் என்று திடமாக நம்ப வேண்டும். கனவில் அவரைகாணலாம். மனதிற்குள் ஒரு குரல் கேட்பதை உணரலாம். மற்றவர்களுக்குத் தெரியும் படியான எந்த அடையாளமும் இருக்காது. பக்தி வளருகிறதா, குறைகிறதா என்பதை நீங்கள்தான் உணரவேண்டும். எனவே திடமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும். சாயிகல்வி நிலயத்தில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அன்போடு கற்றுத்தர வேண்டும். உங்கள் மாணவர்கள் என்று இஷ்டப்படி நடந்துகொள்ள அனுமதிக்ககூடாது. சுதந்திரம் அளித்தாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். சில வேளை தண்டனையும் அளிக்கவேண்டும். தண்டனையென்றால் சாதாரண நடைமுறையிலான தண்டனைகள் இல்லை. அது ஒரு எச்சரிக்கையைப் போல் இருக்க வேண்டும். பிள்ளைகள் ஆன்மீகப்பாதையில்தான் வளர்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.. மாணவர்கள் மாணவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இருக்கவேண்டும், ஆசிரியர்கள் வகுப்பில் மணவர்களின் தேவை என்ன என்பதை அறிந்து, அவற்றைப் பூர்த்தி செய்தால் போதுமானது. வேறு எதுவும் அவசியமில்லை. ஆசிரியர்கள் மாணவர்களை மனிதவள மேம்பாட்டுப்பண்புகளை அறிந்த லட்சியமாணாவர்களாக்குவது மிகவும் முக்கியமானதாகும். உலகம் முழுவதும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...