Sunday, January 17, 2021

இறைவனை நம்புங்கள். இறைவனருளைப் பெறுங்கள்.

அன்பின் வடிவங்களே, உலகிலுள்ள பெயர்கள், உருவங்கள் அனைத்துமே இறைவனுடையது தான். எனவே அனைத்தும் இறைவனின் உருவங்களே, அனைத்தும் இறைவனின் பெயர்களே என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். நீங்கள் விரும்பும் உருவிலும் பெயரிலும் இறைவன் உங்களுக்கு அருள் பாலிப்பார், எனவே நீங்கள் வணங்கும் பெயரையும், உருவத்தையும் மாற்றாதீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால். தொடர்ந்து உண்மையான கிறிஸ்தவராக இருங்கள். இந்துவாக இருந்தால் உண்மையான இந்துவாக இருங்கள். பௌத்தராக இருந்தால் உண்மையான பௌத்தராக இருங்கள். உங்கள் தேவைக்கேற்றவாறு மதங்களையோ, இறைவனின் பெயர்களையோ மாற்றாதீர்கள். ராமனைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டால் ராமரையே தொடர்ந்து வணங்குங்கள். கிருஷ்ணனை விரும்பினால் கிருஷ்ணனையே தொடர்ந்து வணங்குங்கள். இஸ்லாமியராக இருந்தால் அல்லாவைத் தொடர்ந்து வணங்குங்கள். கிறிஸ்தவராக இருந்தால் யேசுவைத் தொடர்ந்து வணங்குங்கள். இறைவன் ஒருவரே. நீங்கள் அழைக்கும் எல்லாப் பெயர்களும் அவருடையதே. இறைவனை நம்புங்கள். இறைவனருளைப் பெறுங்கள். பேரின்பத்துடன் வாழுங்கள்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...