Thursday, January 28, 2021
நாம் மனிதர்களே எனும் உண்மை நிலையை உணர்ந்துகொள்வோம்
அன்பின் திரு உருவங்களே,நாம் மனிதர்களே எனும் உண்மை நிலையை உணர்ந்துகொள்வது அவசியம். மற்றவர்களுடைய துன்பங்களை நம்முடைய துன்பமாகவே பாவிக்கவேண்டும். மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நம்முடைய கஷ்டங்களாகவே கருதவேண்டும். மற்றவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை நாமும் அனுபவிக்கும்போதுதான் இந்த உண்மையை உணர்ந்துகொள்வோம். எனவே நாம் இந்த ஒன்றுபட்ட உணர்வைப் பெற்று, நம்மிடையே சகோதரத்துவத்தை வளர்த்து ஒற்றுமையாக வாழ வேண்டும். எனவே நாம் நம் சமுதாயத்திலுள்ள நல்ல விடயங்களைக் கடைப்பிடித்துத் தீயவற்றை ஒதுக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். சமுதாயத்திலுள்ள நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு தீயவற்றை ஒதுக்கிவிடவேண்டும். யராவது தீங்கு செய்தால் பதிலுக்கு அவர்களுக்கு நல்லதையே செய்யவேண்டும். உதவிசெய்தவர்களுக்குப் பிரதி உதவி செய்வதில் உள்ளதை விடத் துன்பம் செய்தவர்களுக்கும் நன்மை செய்வதில்தான் நமக்குப் பெருமை இருக்கிறது. நமது மனப்பான்மை எப்படி உள்ளதோ அப்படியே தான் விளைவும் இருக்கும். நம்முடைய உணர்வுகள் நல்லவையாக இருந்தால் நமது செயல்களும் நல்லவையாகவே இருக்கும். நாம் மாம்பழம் சாப்பிட்டால் ஏப்பம் விடும்போது வெங்காய்த்தின் வாசனை வராது. ஏப்பத்திலும் மாம்பழத்தின் வாசனைதான் வரும். மனம் நல்லதாக இருந்தால் நினைப்பவை, செய்பவை எல்லாமே தானாகவே நல்லவைகளாக அமைந்துவிடும். தீய எண்ணங்கள் இருந்தால் விளைவும் தீயவையாகவே இருக்கும். எனவே நல்லமனத்துடன், நல்ல செயல்களைச் செய்து இவ்வையகத்தைச் சிறப்பிப்போம். அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment