Tuesday, January 5, 2021
இறைவன் ஒருவனே. அவரை நம்புங்கள்
அன்பின் திருவுருவங்களே,
நாம் அனைவரும் இறவனை நம்புகிறோம். நாஸ்திகர்கள் கூட இறவன் இல்லை என்று சொல்லும் பொழுது இறவன் என்ற நாமத்தைப் பயன்படுத்துவதால் இறையருளைப் பெறுகின்றனர். ஆனால் அவர்கள் அதனை உணர்ந்துகொளதில்லை.
கடவுள் ஒருவரே. அவரை நாடு, கலாச்சராம், விருப்பு வெறுப்புப் போன்றவற்றின் காரணமாகப் பல பெயர்களால் அழைக்கிறோம். எந்தப் பெயரைப் பயன்படுத்தினாலும் அந்தப்பெயரை இறைவன் ஏற்றுக்கொள்கிறார்.
அதனால் ஒருவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்ற கேள்வி எழக்கூடாது.
ஒருவர் இந்து சமயத்தைச் சார்ந்தவராக இருந்தால் அவர் உண்மையான இந்துவாக இருக்கவேண்டும். இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்.
கிறிஸ்தவ சமயத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவர் உண்மையானா கிறிஸ்தவராக வாழவேண்டும் யேசு பகவானின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்
புத்தசமயத்தை சேர்ந்தவர் புத்தபகவானின் போதனைகளை கடைப்பிடித்து ஒரு சிற்ந்த புத்தமதத்தவராக இருக்கவேண்டும்.
ஒரு இஸ்லாமியர் திருக்குரானைப்பின்பற்றிச் சிறந்த இஸ்லாமியராக இருக்கவேண்டும்.
அதே போல் எந்தச் சமயத்தவராக இருந்தபோதும் அந்த்ச் சமயக் கொள்கைகளைப் பின்பற்றவேண்டும்.
எல்லாச் சமய நூல்களும் அன்பு, பண்பு, கருணை, தியாகம், பிறருக்குதவுதல், அகிம்சை போன்ற நற்குணங்களையே போதிக்கின்றன. எல்லா மதங்களும் வன்செயல், கோபம், ஆணவம், வெறுப்பு போன்றவற்றை விலக்கவேண்டுமென்றே போதிக்கின்றன.
அதனால் ஒரு மதத்தவர் பிற மதத்தவரைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது.
அனைவரும் இறைவனின் வடிவங்களே. எல்லோர் மனதிலும் இறைவன் வாழ்கிறார். எனவே ஒருவரது மனதைப் புண்படுத்துவது அவருள் குடியிருக்கும் இறைவனைப் புண்படுத்துவதாகும். எனவே உங்களால் முடிந்தவரை அனைவருக்கும் உதவுங்கள். உதவமுடியவிட்டாலும் யாரையும் புண்படுத்தாதீர்கள்.
உலகில் இருப்பது ஒரயொருே சூரியன். இந்தியாவுக்கென்று ஒரு சூரியனும், அமெரிக்காவுக்கென்று இன்னொரு சூரியனும், ஆபிரிவிக்காவுக்கு வேறுரு சூரியனும் கிடையாது. ஆங்கிலேயர் சூரியனைச் சன் என்று அழைக்கிறார்கள். தமிழர்கள் சூரியன் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படி வெவ்வேறு மொழிகளில் சூரியனை வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடுகிறார்கள். வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டாலும் அனைவராலும் ஒரே சூரியன்தான் குறிப்பிடப்ப்டுகிறது.
உதாரணமாக ஒருவரின் பெயர் மோகன் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஆசிரியராகப் பணிபுரிகிறார் என்றும் வைத்துக்கொள்வோம். பள்ளியில் அவரை ஆசிரியர் என்று அழைக்கிறார்கள். வீட்டில் அவரது தந்தையும் தாயும் மகன் என்று அழைக்கிறார்கள். அவரது பிள்ளைகள் அப்பா என்று அழைக்கிறார்கள். மாமாவும் மாமியும் மருமகன் என்று அழைக்கிறார்கள். நண்பர்கள் விரும்பியபடியெல்லாம் அழைக்கிறார்கள். ஆனால் அனைவரும் பல பெயர்களைப் பயன்படுத்துவது மோகன் என்னும் ஒருவரையே. யாரும் அப்பா, மகன், ஆசிரியர், மாமா, மருமகன், அண்ணன், தம்பி என அழைக்கப்படுவது வேறு வேறு நபர் என்று நினைப்பதில்லை. எல்லோரும் அவர்களது உரிமைக்கமையவே மோகனை அழைக்கிறார்க்ள். எப்படி அழைத்தாலும் வருவதும், பதிலளிப்பதும் மோகனே.
அதுபோல் தான் இறைவனை நாம் நமக்கு விரும்பிய எந்தப் பெயராலும் அழைக்கலாம். அதனால் ஒவ்வொரு சமயத்தவரும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கும் இறைவன் வெவ்வேறானவர் என்று நாம் நினைக்கக்கூடாது. பெயர்கள் அனைத்தும் ஒரே இறைவனையே குறிக்கின்றன. பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உருவங்களும் அவருடையதே.
இறைவன் அன்பின் வடிவானவர். விருப்பு வெறுப்பற்றவர். அனைவரையும் நேசிப்பவர். அவர் நமது இதயத்திலதான் வசிக்கிறார். நமது உடலே இறைவனின் ஆலயம். எனவே நாம் அனைவரும் நமது உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக்கொள்வோம். செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவன் விரும்பக்கூடிய செயல்களளாகவே செய்வோம். உலகம் முழுவதம் சாந்தியுடனுமும் மகிழ்வுடனும் சமாதானத்துடனும் வாழ இறைவைனை வேண்டிக்கொள்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment