Monday, January 4, 2021

சத்தியத்தையே அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்

இறைவனின் அன்பு வடிவங்களே, எப்பொழுதும் நாம் சத்தியத்தையே கடைப்பிடிக்கவேண்டும். நமது எண்ணமும், சொல்லும் செயலும் ஒண்றாகவே இருக்கவேண்டும். நினைத்தவற்றையே சொல்லவேண்டும். சொல்லியதையே செய்யவேண்டும். எண்ணங்கள் தூய்மையானவையாக இருக்க வேண்டும். அதனால் நம் சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கும். சத்தியத்தையே அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும். சத்தியம் ஒருபோதும் மாறாதது. இடத்துக்கிடம் வேறுபடாதது. அமெரிக்கச் சத்தியம், இந்தியச் சத்தியம், ஜப்பான் சத்தியம் என்று நாட்டுக்கு நாடு அது வேறுபடாது. சத்தியத்தால் தூய்மையமான வாழ்க்கை கிடைகும். எப்பொழுதும் சத்தியத்தையே பேசவேண்டும். சத்தியம் தீங்கு விளைவிக்காது. பொய்யே தீங்குகளுக்குக் காரணம். எனவே அனைவரும் சத்தியத்தைக் கடைப்பிடிப்போம். இனிமையாகப் பேசுவோம். எவருடைய மனத்தையும் புண்படுத்தாமல் அனைவருக்கும் உதவியாக வாழ்வோம். உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...