Sunday, January 24, 2021

ஒரே ஜாதி, ஒரே மதம். ஒரே கடவுள், என்னும் ஐக்கியம் நிலவ வேண்டும்

அன்பின் வடிவங்களே, இது என் உடல் என்று கூறுகிறோம். ஆனால் நான் தான் உடல் என்று கூறுவதில்லை. எனது மனம், எனது உடல், எனது தலை, எனது கை, எனது வாய் என்று கூறுகிறோம். ஆனால் நான்தான் வாய், நான் தான் கை என்று கூறுவதில்லை. உடல் மனம் ஆகியவை நாமல்ல. அவை கடவுள் நமக்கு அருளியவையே. அவற்றை நாம் மரியாதை செலுத்திப் பாதுகாக்க வேண்டும். அப்பொழுதுதான் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒற்றுமையைக் காணமுடியும். புத்தகங்களைப் படிப்பதால் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது. புத்தகங்களின் பக்கங்களைத் திருப்பும்போது இதயத்தின் பக்கங்களையும் திருப்பவேண்டும். அப்பொழுதுதான் புத்தகங்களைப் படிப்பதன் பயன் ஏற்படும். வெளியில் நாம் காண்பவை அனைத்தும் கற்பனை தவிர உண்மையில்லை. உண்மை என்னவென்று நமக்குள் பார்க்க முயலவேண்டும். நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கானவர்களைப் பார்க்கலாம். ஆனால் கண்களை மூடிக்கொண்டால் யாரையும் பார்க்க முடியாது. நான் யார். நான் நானே. அது தான் சரியான பதில். நடைமுறைக்காகவே இவ்வுலகில் நமக்குப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. உண்மையில் கல்வி இவ்வுலகத்துடன் தொடர்புடையது இல்லை. அது நம்முடன் தொடர்புடையது. விலங்குகளும்தான் கற்கின்றன. ஏட்டுச் சுரைக்காய் வெறும் புத்தகப் படிப்புத்தான். நமது இதயத்தை, நம்மைப்பற்றி நாம் அறிந்துகொள்ளவேண்டும். அந்த அறிவே உண்மையான கல்வி. உண்மை என்பது என்றும் ஒன்றே. அது இரண்டல்ல. உண்மையே கடவுள். தர்மமே கடவுள். அமைதியேயே கடவுள். அன்பே கடவுள். கடவுளில் வாழுங்கள். அந்த அன்பு நமது இதயங்களில் இருந்துவிட்டால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். அன்பு என்பது தனிப்பட்ட ஒருவருக்குச் சொந்தமானதல்ல. அது தெய்வீகமானது. நான் உங்கள்மீது செலுத்தும் அன்பும், நீங்கள் என்மீது செலுத்தும் அன்பும் தான் உண்மையான ஐக்கியம் என்று பகவான் கூறுகிறார். கடவுள் ஒருவரே. குறிக்கோளும் ஒன்றே. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் இவ்வுலகில் நம்மால் எதையும் சாதிக்க முடியும். இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் எவையுமே உண்மையானவை அல்ல. மானிதவளப் பண்புகள் எனப்படுவதே உண்மை. அது நமக்குள்ளேயே இருக்கும் விழுக்கல்வி (EDUCARE). CARE என்றால் உள்ளிருப்பதை வெளியே கொண்டுவருவது என்பதாகும். அதுதான் உண்மையான விழுக்கல்வி. CARE என்றால் மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவது என்று பொருள் அல்ல. CARE என்பது உள்ளே இருக்கும் நல்ல குணங்களை வெளிக்கொண்டு வருவதாகும். அதுதான் விழுக்கல்வி என்பதன் உண்மையான பொருள். நாம் புத்தகங்களைப் படிப்பதால் வரும் அறிவு, விடயங்களைப்பற்றிய அறிவு ஆகியவை கல்வி எனப்படும் EDUCATION. வெளியுலகத்தைச் சார்ந்தவை யாவும் EDUCATION. ஆனால் நமக்கு வேண்டியது EDUCARE. இன்றைய தேவை விழுக்கல்வியாகும். விழுக்கல்வியைப்பெற்றுவிட்டால் அனைவரும் ஒன்றே என்ற தெளிவைப் பெற்றுவிடலாம். இன்னும் சுமார் 30 வருடங்களுள் இவ்வுலகம் முழுவதும் ஒன்றாகிவிடும் என்று பகவான் கூறுகிறார். ஒரே ஜாதி, ஒரே மதம். ஒரே கடவுள், என்னும் ஐக்கியம் நிலவ வேண்டும். இன்று பல வேற்றுமைகளைக் காண்கிறோம். வேற்றுமைக்குப் பதிலாக ஒற்றுமையைக் காணவேண்டும். உண்மை ஒண்றே, ஆனால் அறிஞர்கள் அதனைப் பலவாறாகச் சொல்கிறார்கள். அதுதான் இப்பிரபஞ்சத்தின் உண்மை. அதுவே இன்றைய தெய்வீகமான் செய்தி. அகில உலகமும் நலமாக இருக்கப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...