Sunday, January 10, 2021

ஆத்மா அநாதியானாது, மரணமற்றது என்பதை உணர்ந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து பிறவா நிலையை அடைவோம்.

அன்பின் திரு உருவங்களே, ஒரு குழந்தை தாயின் கர்பத்திலிருக்கும் போது தனது தாயின் முகத்தைப் பார்ப்பதில்லை. பிறந்தவுடனும் தாய் யார், தந்தை யார் என்றும் அதற்குத் தெரியாது. அக்குழந்தைக்குப் பெயர் கூடக் கிடையாது. குழந்தை வளரத்தொடங்கியதன் பின்னரே தாயை அடையாளம் காண்கிறது. தந்தை யார், உறவினர்கள் யார் எனப் பிறர் சொல்லிக்கொடுத்தபின் தான் அவர்களை அடையாளம் காண்கிறது. பிறந்த பின்னர் தான் அக்குழந்தைக்குப் பெயர் சூட்டப்படுகிறது. பெயர் சூட்டப்படும் வரை அது குழந்தையே. அதுபோன்றே புவியில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் குழந்தை என்ற ஒரே பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். பிறந்த குழந்தையைத் தாயும் தந்தையும் மகன் அல்லது மகள் என்றும், அக்காவும் அண்ணாவும் தம்பி அல்லது தங்கை என்றும், மாமாவும் மாமியும் மருமகன் அல்லது மருமகள் என்றும் ஒரே குழந்தையைப் பல உறவுமுறைகளைக் குறிப்பிட்டு அழைக்கிறார்கள். சிறுவன் அல்லது சிறுமி என்று அழைக்கப்படும் அதே குழந்தை, சில வருடங்களில் வாலிபன் அல்லது மங்கை என அழைக்கப்படுகிறது. திருமணத்தின்பின் கணவன் அல்லது மனைவி என்ற பெயரும், குழந்தையைப் பெற்றபின் அம்மா அப்பா என்றும், பேரக்குழந்தை பிறந்தபின் தாத்தா, பாட்டி என்றும் அழைக்கப்படுகிறது. பிறந்தது முதல் இறுதி வரை உடல் தோற்றம் மாறிக்கொண்டிருக்கிறது. அழைக்கப்படும் முறையிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அந்த உடலினுன் உள்ளே இருக்கும் ஆத்மா வளர்வதுமில்லை, மாறுவதுமில்லை. இறப்பதுமில்லை. இறுதியில் ஆத்மா உடலை விட்டுப் பிரியும்போதும் அது ஆத்மாவாகவே பிரிகிறது.. உடல் மாத்திரம் அழிகிறது. ஆத்மா உடலில் தங்கியிருக்கும்பொழுது மாத்திரமே உடல் தனது இயக்கங்க்ளில் ஈடுபடுகிறது. எனவே எக்காலத்திலும் மாற்றமடையாத ஆத்மா அநாதியானாது, மரணமற்றது, உடலை இயக்குவது ஆத்மாவே என்பதையும். தனது கர்மவினைகளுக்கமைய அந்த ஆத்மா புதிய உடலை எடுப்பதையும் அல்லது நல்வினைப்பயனால் இறைவனுடன் இரண்டறக் கலந்து பிறவா நிலையை அடைகிறது என்பதையும் உணர்ந்துகொள்வோம். எனவே மனிதர்களாகப் பிறந்த நாம் அனைவரும், இறைவன் எனப்படும் பேரொளியிலிருந்து வந்த ஒரு சிறு பொறியே என்பதை உணர்ந்து, இறைவனருளால் மீண்டும் மீண்டும் உலகில் பிறப்பு இறப்பென்னும் சுழலிலிருந்து மீள்வதற்குப் பெரும் பேறான நமது மனிதப்பிறப்பைப் பயன்படுத்தி, இறைவனை அடைந்து, இறைவனுடன் இரண்டறக் கலப்போம். அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துவோம்

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...