Saturday, January 2, 2021

அனைத்திலும் இறைவன் இருப்பதை உணர்ந்து ஆன்மீகத்தில் முன்னேறுவோம் .

அன்பின் வடிவங்களே, தற்போதைய இளைஞர்கள் பலரின் பார்வை தவறான நோக்கமுடையதாக இருக்கிறது. இப்பார்வை சாதாரணப் பார்வையைப் போன்றதல்ல. இப்பக்கம் அப்பக்கம் என்று மாறி மாறிப் பார்துக்கொண்டிருக்கிறார்கள். நம் பார்வை நேர் நோக்கு உடையதாக இருக்கவேண்டும். கண்கள் நல்ல காட்சிகளைப் பார்ப்பதால் நமக்கு நற்பயன் உண்டாகிறது. யாரிடம் என்ன பேசவேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், எப்பொழுது சிரிக்காமல் இருக்கவேண்டும், என்கின்ற பொது அறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது இங்குமங்கும் பார்த்துச் சிரிப்பது வழக்கத்தில் உள்ளது. இது தவறு. இது போன்ற சிரிப்பு நம் வாழ்க்கையைச் சீரழித்து விடும். நாம் எப்பொழுது சிரிக்கவேண்டும், எங்கே சிரிக்க வேண்டும், எதற்காகச் சிரிக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். சிரிப்பில் ஒன்று புன்முறுவல். மற்றது பிறர் கேட்கும்படி உரக்கச் சிரித்தல். உரக்கச் சிரிப்பது மிகவும் கெடுதல். இரண்டு மூன்றுபேர் கூடியிருந்து சிரிக்கிறார்கள். அப்பொழுது அவ்வழியாகப் பெண்கள் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் சிரித்தது வேறு விஷயம் பற்றி இருக்கலாம். ஆனால் அப்பெண்கள் தங்களைப் பார்த்துச் சிரித்ததாக எண்ண வாய்ப்பு உண்டல்லவா. ஆகவே எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் பெண்கள் கடந்து செல்லும்போது நாம் சிரிக்கக்கூடாது. மற்றவர்களைப் பார்த்து நீங்கள் சிரித்தால், மற்றவர்கள் உங்களை பார்த்துச் சிரிக்க மாட்டர்களா? நகர்ப்புறங்களில் சிலர் கடைகளிலும் ஷொப்பிங் மாலிலும் அமர்ந்து அங்கு வந்து, சென்றுகொண்டிருப்பவர்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படிச் சிரிப்பவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் ஷொப்பிங் வருவார்களல்லவா. அவர்களைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்கலாமல்லவா. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை ஒன்று உண்டு. அதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. நாம் செய்யும் செயல்களின் பயன்களை அனுபவித்தே தீரவேண்டும். இத்தீய செயல்களினால் கடவுளிடமிருந்தும் நீங்கள் விலகிச் செல்கிறீர்கள். இதுபோன்ற அவப்பெயர் கிட்டியவர்களுக்குத் தெய்வத்தின் அருகில் இருப்பதற்கான வாய்புக் கிடைக்காது. ஆகவே சிரிப்புக்கூட நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் பார்வையும் இதைப்போலவே நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். பேச்சையும் கூட நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். விலங்குகளைப் பார்த்தும் நாம் தீயவார்த்தைகளைப் பேசக்கூடாது. எல்லா உயிரினங்களுக்குள்ளும் இறைவன் இருப்பதால் நம் வார்த்தைகள் மிருகங்களைக் குறிப்பிடாமல் இறைவனையே குறிப்பிடும். எனவே மிருகங்களைப் பார்த்துக்கூடக் கொடுமையான வார்த்தைகளைச் சொல்லக்கூடாது. விலங்குகளிடமும் அன்பாக இருப்போம். தீய வார்த்தைகளை விட்டுவிடுவோம். பிரபஞ்சத்திலுள்ள அனைத்திலும் இறைவன் இருப்பதை உணர்வோம். ஆன்மீகத்தில் முன்னேறுவோம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...