Friday, January 15, 2021

மனதாலோ, வார்த்தைகளாலோ, செயலாலோ யாருடைய மனமும் புண்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

அன்பின் திருவுருவங்களே, அம்மாவையும் அப்பாவையும் தெய்வமாக வணங்கவேண்டும். ஆசிரியரைத் தெய்வமாக வணங்கவேண்டும். விருந்தினர்களையும் தெய்வமாக மதித்து நடக்க வேண்டும் குயிலின் குரல் ஆனந்தத்தை அளிக்கிறது. காகத்தின் குரலை எவரும் விரும்புவதில்லை. மயில் என்ற பெயரிலேயே இனிமை இருக்கிறது. குழந்தைக்குப் பெயரிடும்போது முழு அமைதியைத் தரும் பெயரையே வைக்கவேண்டும். உதாரணமாக நாகம்மா என்று பெயர் ஒருவருக்கு இருந்தால் அப்பெயரை நினைக்கும்போது பாம்புதான் நினைவுக்கு வரும். எனவே அச்சத்தைத்தரும் பெயர்களை வைக்கக்கூடாது. சத்யா, நாராயணா, சத்யநாராயணா என்ற பெயர் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. ஈஸ்வரம்மா என்ற பெயர் ஈஸ்வரனுக்கே அம்மா என்பதைக் குறிக்கிறது. இனிமையாகவே பேசுங்கள். மனதாலோ, வார்த்தைகளாலோ, செயலாலோ யாருடைய மனமும் புண்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...