Sunday, February 28, 2021
ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் அவதார ரகசியம்
அன்பின் வடிவங்ககளே, ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் அவதார ரகசியம் பற்றிய சில விபரங்களை இப்போது பார்ப்போம்.
கர்க பகாவதத்தில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் அவதாரம் பற்றி வியாச பெருமனுக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இடையில் நடைபெற்ற உரயாடல் மூலம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வியாச பகவான் சரஸ்வதி நதிக் கரையில் அமர்ந்தபடி துவாபர யுகம் முடிந்து பகவான் ஸ்ரீ கிருஷ்னர் தனது அவதார்த்தை முடித்துக்கொண்டபின் கலியுகம் பிறக்குமென்பதையிட்டும், கலியுகத்தில் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாவார்கள் என்றும் கவலையில் ஆழ்ந்து, கலியுகத்தில் வாழும் மக்களுக்காக்க இறைவன் அவதாரம் எடுக்கவேண்டுமென்று வியாசபகவான் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரது தியானத்த்தின் போது கலியுக ஆரம்பத்தில் நீர்வளம், நிலவளம் நிறைந்து உலகவாழ்க்கை பிரகாசமாக இருப்பதையும், காலம் செல்லச் செல்ல மனிதகுலத்தின் தவறான நடத்தையால் சனப்பெருக்கம் அதிகரித்து, உணவுக்கே பற்றாக்குறை ஏற்பட்டு’ மிருகங்களைக் கொன்று சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்படுவார்களென்றும், அதனால் மனிதருக்கு மிருக குணங்கள் ஏற்படவுள்ளதையும் வியாசர் அறிந்தார். உட்கொள்ளும் உணவுக்கேற்றபடியே மனிதனின் மனநிலையும் புத்தியும் மாறும் என்பதால் மிருகங்களைக் கொன்று உண்பதான்மூலம் கலிகால மனிதருக்கு மிருக குணங்கள் ஏற்படும், சாத்வீக உணவை உண்பதால் சத்வ குணமும், உயிர்களைக் கொன்று உண்பதால் மிருக குணமும் ஏற்படுப்போவதையும் உணர்ந்து வியாசபகவான் மிகவும் பயப்பட்டார். அதே வேளை கிருஷ்ணபவான் பகவத் கீதையை அருளிச் சென்றிருப்பதால் அதைப் படித்து மக்கள் நேர்மையாக வாழ்வர்களென நம்பினார். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, பகவத் கீதையைப்படிப்பதும் அதனைப் பின்பற்றுவதும் அருகப்போவதையும் அவர் தனது ஞான சக்தியுன் மூலம் உணர்ந்தார். உலகம் அனைத்தும் வளமாக வாழப் பிரார்த்திப்போம்.
Saturday, February 27, 2021
வணங்கும் கடவுளின் பெயரையோ வடிவத்தையோ மாற்றிக்கொண்டிருக்கக் கூடாதெனப் பகவான் கூறுகிறார்.
அன்பின் வடிவங்களே, ஆத்மாவுக்கு உருவம் இல்லை. கடவுளிடம் நீங்கள் யார் என்று யாராவது கேட்டால், நான் ராமர். நான் கிருஷ்ணர், நான் யேசு, நான் புத்தர் நான் சாயிபாபா என்றெல்லாம் சொல்ல மாட்டார். சாயி பாபா என்பது இவ்வுடலின் பெயர் மட்டுமே. ராமா என்பதும் உடலின் பெயர். சாயி பாபா என்னும் பெயர் தாய் தந்தையரால் வைக்கப்பட்டது. பெயர் என்பது வைக்கப்பட்டதே தவிர நம்முடன் பிறந்தது இல்லை. உடல் பிறந்தது. ஆனால் அதற்குப் பெயர் இல்லை. பிறந்த பின்னர் தான் பெயர் சூட்டப்படுகிறது. பிறந்த உடல் ஒருநாள் அழிந்தே தீரும். உடலுடன் பெயரும் அழிந்து விடும். பிறக்காததும் அழியாததும் ஒன்றே ஒன்றுதான். அது தான் ஆத்மா.
நீங்கள் யாரென்று கேட்டால் நான் கடவுளே , அஹம் ப்ரம்மாஸ்மி, என்றுதான் பகவான் சொல்வார். நான் ப்ரம்மம் என்றுதான் அவர் கூறுவாரே தவிர, நான் சாயி பாபா என்று கூற மட்டார். அதே வேளை நீங்களும் கடவுளே என்றும் கூறுவார். நான் அல்லது கடவுள் என்பதற்கு எந்தப் பெயரும் கிடையாது. அகம் என்பது ஆத்மாவின் பெயர். அதனால் ஆத்மாவைத் தான் போற்றவேண்டும். வடிவத்தையல்ல. இந்த ஆத்மாவிற்குப் பல பெயர்களை வைத்து மகிழ்கிறீர்கள். சாதாரண சிறியதான் சிருஷ்டிக்கு இவ்வளவு பெயர்களை வைக்கிறீர்கள். ஏதாவது கஷ்டம் வந்தால் ஐயோ கடவுளே என்கிறார்கள். அவ்வேளையில் யாரும் வடிவத்தை நினைப்பதில்லை. எனவே உங்களுக்கு விரும்பிய ஒரே பெயரையும் அதே உருவத்தையும் மனதில் பதிய வைத்து அவற்றையே பிரார்த்தித்து வந்தால் உங்களுக்கு விருப்பமான உருவத்தில் கடவுள் உங்கள் முன் தோன்றுவார். அவ்வடிவத்தை இதயத்தில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். வணங்கும் பெயரையோ வடிவத்தையோ மாற்றிக்கொண்டிருக்கக் கூடாதெனப் பகவான் கூறுகிறார். உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
Friday, February 26, 2021
கண்களை மூடிக்கொண்டு உங்களுக்குள் இருக்கும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் உங்கள் முன் தோன்றி வரத்தை அருள்வார்.
அன்பின் வடிவங்களே,பணத்தைக் கொண்டு கடவுளைப் பெற முடியாது. கடவுள்தான் எல்லாச் செல்வங்களையும் அருள்பவர். கடவுளுக்கு உங்கள் பணம் எதற்காகத் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை உங்கள் நல்வாழ்வுக்காகச் செலவிடவேண்டும். ஏழை எளிய மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும். நாம் நாமஸ்மரணையில் மாத்திரம் திருப்தியடைவதாகச் சுவாமி சொல்கிறார். அதனால் இறைநாமத்தில் அக்கறை செலுத்தவேண்டும். அதுதான் இறைவனை அடைவதற்கு ஒரே வழி. கடவுளை அவரது திருநாமத்தினால் மட்டுமே எளிதில் அடைய முடியும். திரௌபதி எவ்வளவு பெயர்களைக் கூறிக்கதறினாள். இறுதியில் இருதயவாசி என்றாள். அக்கணமே கிருஷ்ணர் தோன்றினார். உண்மையில் இதயமே கடவுள். கடவுள் இதயத்தில் இருக்கிறார். கடவுள் உங்களுக்குள்ளே இருந்தும் கூட நீங்கள் அவரை வெளியில் தேடுகிறீர்கள். உங்களால் பணத்தின் மூலம் வெளியில் உள்ள பொருட்களைத்தான் அடைய முடியுமே தவிரக் கடவுளை அடைய முடியாது. கடவுளை நீங்கள் உங்களுக்குள்ளே தான் தேடவேண்டும். உள்ளத்துக்குள் பாருங்கள். வெளியில் தேடாதீர்கள். கண்களை மூடிக்கொண்டு உங்களுக்குள் இருக்கும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் உங்கள் முன் தோன்றி வரத்தை அருள்வார். அதனால் திருநாமத்தால் கடவுளை வர்ணிக்கலாம், அறியலாம், அடையலாம். உலகம் அனைத்தும் நலமாக வாழ வாழ்த்துவோம்
Thursday, February 25, 2021
அன்பபெனும் அமுதம் கோபம், பொறாமை எனும் அரக்கர்களை அழித்துவிடும்.
அன்பின் திரு உருவங்களே,அன்புடன் கடவுளை நினைக்கவேண்டும். ஏனெனில் இந்த அன்புதான் உலகைக் காக்கிறது. பக்தர்கள் அன்பெனும் பாதையை விட்டு விலகி வாழவே கூடாது. பிறர் பரிகசிக்கலாம், ஏளனம் செய்யலாம், ஆனால் அன்புடனே எப்பொழுதும் வாழவேண்டும். அன்பு அளித்தும், மன்னித்தும் வாழ்வதாகும். கோபம் கேடு விளைவிக்கும். ஆகவே அன்புடன் வாழுங்கள். உங்களுக்கு யாராவது துன்பம் செய்யக்கூடும் அப்பொழுதும் கோபப்படக்கூடாது. கடவுள்தான் அவ்வாறு செய்கிறார் என்று நினைக்கவேண்டும். கடவுள்தான் எல்லாவற்றையும் செய்கிறார். கடவுள் தான் துன்பங்களையும் தருகிறார். மகிழ்ச்சியையும் அவரே அளிக்கிறார். எல்லா நேரங்களிலும் காப்பாற்றுவதும் கடவுளே. தண்டிப்பதும் கடவுளே. இருப்பதைக் காப்பதும் கடவுள்தான். எல்லாம் கடவுள் எண்ணப்படியே நடைபெறுகின்றன. அதனால் எல்லாவற்றையும் கடவுளுக்காஎ அர்பணம் செய்யவேண்டும். சிலர் பழி சொல்லலாம். அதையும் கடவுள் செய்கிறார் என்று நம்பவேண்டும். உங்களுக்கு நடப்பதெல்லாம் கடவுளின் பிரசாதமே. செய்யும் செயல்கள் எல்லாம் கடவுளுக்கு மகிழ்ச்சியுண்டாக்கவே செய்யவேண்டும். இவ்வாறு நடந்துகொண்டால் நல்வாழ்வு நிச்சயம். வாழ்க்கை என்னும் இக்கடலில் நாம் மிதக்கும் பொருள்போல் இருக்கவேண்டும். அதுவே மனிதனைக் காத்திடும். அன்பபெனும் அமுதம் கோபம், பொறாமை எனும் அரக்கர்களை அழித்துவிடும். எப்பொழுதும் எது நடந்தாலும் அது கடவுள் சங்கல்ப்பப்படி நடப்பதாகவே நினைத்துக் கொள்ளவேண்டும். பஜனை செய்யுங்கள். கடவுளின் நாமத்தை உச்சரியுங்கள். பஜனை மிக முக்கியமானது. கடவுளின் திருப்பெயரை உச்சரிப்பதே பஜனையின் முக்கிய அம்சம். பலருடன் சேர்ந்து பஜனை செய்யும்போது ஒருவராவது கடவுளின் மனதை உருகச் செய்துவிடுவார். பலர் ஒன்றுசேர்ந்து நாம ஜெபத்தில் ஈடுபடும்போது கடவுளின் மனம் உருகிவிடும். அதிகாலையில் நகர சங்கீர்த்தனம் செய்யும்போது அதைக் கேட்டுக் கண்விழிப்பவர்கள் மனமகிழ்ச்சியடைவர். உலகம் அனைத்தும் நலமாக வாழ்ப் பிரார்த்திப்போம்.
Wednesday, February 24, 2021
நலனை விரும்புபவர்கள் எப்பொழுதும் அன்பையும் சத்தியத்தையும் கடைப்பிடித்து வாழவேண்டும்
அன்பின் வடிவங்களே, சத்தியத்தைவிட உயர்ந்த தர்மம் எதுவும் இல்லை. அதனால் எப்பொழுதும் உண்மையையே பேசவேண்டும். சத்தியமே இறைவனின் திருவுள்ளம். எப்பொழுதும் இறைவனின் திருப்பெயரைச் சொல்லுங்கள். வழிபாட்டுக்கென வீண்செலவு செய்யாதீர்கள். உணவற்றவர்களுக்கு உணவு அளித்திடுங்கள். உடையற்றவர்களுக்கு உடை கொடுங்கள். ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லாமல். எதையும் செய்யக்கூடாது. வெளியில் உரக்கச் சொல்லத்தேவையில்லை. மனதுக்குள்ளாகவே சொன்னால் போதும். பிச்சயிடும்போதுகூட உங்கள் மனுதுக்குப் பிடித்த இறைவனின் பெயரைச் சொல்லிக் கொண்டே கொடுக்கவேண்டும். மனம்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். மனம் தான் அடிமைத்தனத்துக்கும் வீடுபேற்றுக்கும் காரணம். எதை மறந்தாலும் கடவுளின் திருப்பெயரை மாத்திரம் மறக்கக்கூடாது. திருநாமத்தால் துன்பம் விலகும். அமைதியின்மை, கோபம், துன்பம், துயரம் அனைத்தையும் கடக்க இறைவனின் நாமம் ஒன்றே போதுமானது. காமம், குரோதம், மோகம், கோபம் போன்ற அனைத்துமே இராட்சச குணம் கொண்டவை. இராட்சசர்களை நாம் அண்டவிடக்கூடாது. கோபம் என்னும் அரக்கனை அனுமதித்தால் அது எல்லாவற்றையும் அழித்துவிடும். கோபமுடைய மனிதனை நம்பி எந்தவேலையையும் கொடுக்கக்கூடாது. அவனிடமிருந்து உறவினர்கள் கூட விலகிவிடுவார்கள். கோபம் , பொறாமை ஆகியவை நம்மை அணுகவிடக்கூடாது. எப்பொழுதும் அன்பு வடிவமாகக் கடவுளின் நாமத்தை உச்சரித்தவண்ணமே இருக்கவேண்டும். இவ்வாறு சத்தியத்தை அனைவரும் கடைப்பிடித்தால் நாடு வளம்பெறும். நாட்டு நலனை விரும்புபவர்கள் எப்பொழுதும் அன்பையும் சத்தியத்தையும் கடைப்பிடித்து வாழவேண்டும். யாருக்கும் எவ்வித துன்பமும் தராமல் வாழவேண்டும். உலகதின் அனைவரும் சுகமாக வாழவேண்டுமெனப் பிரார்த்திக்க வேண்டும்.
Tuesday, February 23, 2021
யாரை நீங்கள் வணங்கினாலும் உங்கள் பிரார்த்தனை கடவுள் ஒருவரையே அடையும்
அன்பின் வடிவங்களே,கடவுளின் சங்கல்பம் என்ன என்று யாராலும் அறிந்துகொள்ள முடியாது. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார். நீங்கள் எங்கு பார்த்தாலும் அங்கெல்லாம் கடவுள் வியாபித்துள்ளார். அப்படிப்பட்ட கடவுளை ஜபம், யாகம், தியானம் போன்றவை மூலமாக மாத்திரம் அடைந்துவிட முடியாது. மனிதன் பலவீனங்களின் வடிவானவன். கடவுள் எப்படிப்பட்டவர் என்று யாராலும் சொல்லமுடியாது. யாரை நீங்கள் வணங்கினாலும் ஒருவரான கடவுளையே அடையும். இந்த ரகசியத்தை மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை. அதிகமான மக்களுக்கு ஆன்மீகத்தில் நோக்கம் இல்லை. சாதாரண மனிதர்களிலிருந்து மகான்கள் வரையில் யாக யக்ஞங்களில் திருப்தியடைந்து விடுகிறார்கள். கடவுள் நன்நடத்தையையும் ஆன்மீகத்தையும் தான் எதிர்பார்க்கிறார். இவ்வுலகில் செல்வமும் சிபார்சும் தான் முதலிடம் பெறுகின்றன. இது மிகுந்த அறியாமையாகும். இந்த அறியாமையிலிருந்து வெளியேறாத வரை கடவுளைப் புரிந்துகொள்ள முடியாது. நான் என்னும் ஆணவமும் என்னுடையது என்னும் அகம்பாவமும் உள்ள இதயங்களைக் கடவுள் விரும்பமாட்டார். உலகில் சேர்த்துவைப்பதெல்லாம் ஒருநாள் அழியத்தான் வேண்டும். மனித உடலும் ஒருநாள் அழிந்துவிடும். எனவே பிறந்து இறக்கும் இவ்வுலக வாழ்வின் துயரங்களிலிருந்து விடுதலைபெற்று இறைவனுடன் இரண்டறக்கலப்பதற்கான சத்தியம், தர்மம், சாந்தி, பிரமை, அகிம்சை, திரிகரணசுத்தி என்பவற்றைக் கடைப்பிடித்து பிறவிப்பெருங்கடலிலிருந்து மீட்சியடைவோம். உடலுக்கு உணவளிப்பது போன்று நமது ஆத்மாவுக்குரிய உணவையும் அளித்து இறைவனுடன் ஒண்றிணைந்து பேரின்பத்தை அடைவோம். உலகம் அனைத்தும் நலமாக வாழ வாழ்த்துவோம்.
Monday, February 22, 2021
கரங்கள் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அதே வேளை சிந்தனை, மனம் இறைவன்மீது இருக்கவேண்டும்
சதுர்யுகங்களில் கடைசியான கலியுகத்தில் மனிதவாழ்க்கை லௌகிகத்தில் அமைகிறது. முந்தைய யுகங்களில் கடவுளை அடைய நோன்புகள். துறவறம் போன்ற விஷயங்களில் ஈடுபடவேண்டியிருந்தது. ஆனால் கலியுகத்தில் நாமஸ்மரணம், பஜனை மூலமாக மனதை இலகுவாக்கலாம். அதுமட்டுமன்றி துறவறத்தில் இருக்கக்கூடிய கடுமைகளை மாற்றி, லௌகீகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் சமுதாயத் தொண்டு புரிந்து இறைவனை அடையலாம் என்று சுவாமி கூறியிருக்கிறார். துறவறம் போன்றவை நமக்கு அவசியம் இல்லை. அனால் தனிப்பட்ட நபர்கள் சமுதாயத்தை மேம்படுத்துவதற்குத் தியாகம் செய்து தம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று சுவாமி சொல்கிறார். HANDS THAT SERVE ARE HOLIER THAN THE LIPS THAT PRAY என்று சுவாமி கூறுகிறார். பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிடச் சமுதாயத்துக்குச் சேவை செய்யு கரங்களே புனிதமானவை என்பதே சுவாமியின் வாக்கு. தனி மனிதனுக்கு ஆசைகள் இருக்கின்றன. ஆசைகளுக்கு வரம்பு கிடையாது. அளவும் கிடையாது. ஆனால் ஆசையின் பின்னே ஓடுகின்ற ஒரு மனிதன் தனது வாழ்நாளில் இன்பத்தையும், சுகத்தையும் சாந்தியையும் அனுபவிப்பது இல்லை. அவன் சுக துக்கங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு விழிக்கிறான். அவன் தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டுமென்றால், ஆசையைக் களையவேண்டும். துறவு நிலையை ஏற்கவேண்டும். சாதாரண வாழ்க்கையில் துறவறத்தை எப்படி ஏற்கமுடியும் என்று கூறும்போது HANDS IN THE SOCIETY AND HEDS IN THE FOREST என்று கூறுகிறார். கரங்கள் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அதே வேளை சிந்தனை, மனம் இறைவன்மீது இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே துறவற நிலையை நம்மால் அடைய முடியும் என்று சுவாமி வழிகாட்டுகிறார்.
Sunday, February 7, 2021
உங்களுக்கு இறைவன் வேண்டும் என்ற உண்மையான உணர்வு மட்டும் இருக்குமானால், இறைவனே நேரில் உங்களிடம் வந்து பேசுவார்.
அன்பின் திருவுருவங்களே,கரங்கள், கண்கள், காதுகள், மூக்கு போன்றவை தேகத்தின் அங்கங்கள். அது போலவே மனிதர்கள் இந்த சமுதாயத்தின் அங்கங்கள். சமுதாயம் இந்த பிரக்ருதியின் அங்கம், பிரக்ருதி கடவுளின் அங்கம். இதன் மூலம், தனிப்பட்ட மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே உள்ள அத்தியந்த உறவைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளலாம். உயிரற்ற ஜடங்களான தொலைபேசி போன்றவைக்கே இணைப்புகள் ஏற்படுத்த முடியுமென்றால்> மனிதனுக்கும், இறைவனுக்குமிடையே இணைப்பு இருக்க வேண்டாமா? முதலில் சொன்ன இணைப்புகள் எல்லாம் செயற்கை. ஆனால் இந்த இணைப்பு இதயம் சம்பந்தப்பட்டது. இதயத்துக்கு இதயம் இணையும் இணைப்பு இரண்டு வகை. ஒன்று நம்பர் மூலம் அழைப்பது. அதனை யார் வேண்டுமானாலும் ஏற்றுப் பேசலாம். இரண்டாவது தனிப்பட்ட நபருக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. அதைப்போல உங்களது இணைப்புகள் எல்லாம் நேராக இறைவனோடு இருக்க வேண்டும். உங்களுக்கு இறைவன் வேண்டும் என்ற உண்மையான உணர்வு மட்டும் இருக்குமானால், இறைவனே நேரில் உங்களிடம் வந்து பேசுவார். நீங்கள் நம்பர் கோல் போல பேசினால், இறைவன் பதில் கூறமாட்டார். இங்கே நம்பர் கால் என்பது எதிர் மறையான எண்ணங்கள். ஆகவே எதிர் மறையான (நெகடிவ்) எண்ணங்களை விட்டு விட்டு பாஸிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
Saturday, February 6, 2021
இறைவன் பெயரைச் சொல்லியவாறு, சமுதாயத்தில் இறங்கிச் சேவை செய்யுங்கள்
அன்பின் அவதாரங்களே,எந்த ஒரு செயலைச் செய்வதானாலும், மற்றவருடைய நலனைக் கருத்தில் கொள்ளுங்கள். சுயநலமான வாழ்க்கை வாழாதீர்கள். அனைவருடைய நலனையும் கவனியுங்கள். தனிப் பட்ட பலன்களை மட்டும் எண்ணாதீர்கள். ஜபம், தியானம் போன்றவை சுயநல நோக்குடன் செய்யப் படுகின்றன. இதற்குப் பதில், இறைவன் பெயரைச் சொல்லியவாறு, சமுதாயத்தில் இறங்கிச் சேவை செய்யுங்கள். இதுவே உண்மையான சாதனையாக அமையும். நீங்கள் யாருக்குச் சேவை செய்தாலும், இறைவனுக்குச் செய்வதாக எண்ணிக் கொண்டு செய்யுங்கள்.
இதயத்தில் தயை நிரம்பியிருந்ததால் ஒரு உயிரற்ற சவம், ஒரு நோயாளி, வயது முதிர்ந்த ஒரு மனிதன் ஆகியவர்களைப் பார்த்ததுமே புத்தருக்கு ஞானம் புலப்பட்டு, அவரால் நிர்வாண நிலையை அடையமுடிந்தது. நீங்கள் எத்தனையோ சவங்களையும், வயது முதிர்ந்தோரையும், நோயாளிகளையும் பார்க்கிறீர்கள். ஆனால் உங்களில் பலரிடத்தில் அத்தகைய மனமாற்றம் ஏற்படாதது வருந்தத்தக்கது. துரதிஷ்டவசமாக, பலரின் இதயங்கள் கடினமான பாறைகளாக மாறிவிட்டிருக்கின்றன. அடுத்தவரின் துயரம் பலரின் இதயங்களைக் காயப்படுத்துவதில்லை. நிர்வாணம் அல்லது பந்தவிடுதலை அடைய வேண்டுமென்றால், அடுத்தவரது துயரத்துடன், தன்னையும் இணைத்துப் பார்த்து, அவர்களது துயர்களைக் களைய முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். உலகம் முழுவதும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
Friday, February 5, 2021
அன்பையும், தியாகத்தையும் உங்களது மூச்சுக் காற்றாகக் கடைப்பிடியுங்கள்
அன்பின் அவதாரங்களே,அன்பையும், தியாகத்தையும் உங்களது பிராணனாக, மூச்சுக் காற்றாக எண்ணுங்கள். உங்கள் புலன்களை அடக்குங்கள். எந்த ஒரு ஆன்மீக சாதனை வெற்றி பெற வேண்டுமானாலும், புலனடக்கத்தின் மூலம் தெய்வீகமாக உயரமுடியும். கோபம் என்பது நாயின் இயல்பு. சலனப்படுத்திக் கொண்டே இருப்பது குரங்கின் குணம். உங்களுக்குக் கோபம் வரும் போது நான் நாயல்ல, நான் மனிதன் என்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அதைப் போலவே மனம் அலை பாயும் போது உங்களுக்குள் திரும்பத் திரும்பச் நான் குரங்கல்ல, நான் மனிதன் என்ற திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்ளுங்கள். சத்தியம். தர்மம். சாந்தி. பிரேமை. அஹிம்சை ஆகியவை தான் உண்மையான மனித உயர் குண நலன்கள். இந்தக் குணநலன்களைப் பஞ்ச பிராணன்களுக்கு ஒப்பிடலாம். பிராண. அபான. வ்யான. உதான மற்றும் சமான என்பவையே பஞ்சப்பிராணன்கள். இந்தக் குணநலன்கள் ஏதாவது ஒன்றை இழந்தாலும் கூட வாழ்க்கையையே துறந்து விடுவதைப் போன்றது. ஒரு குணநலனும் மற்றொன்றின்றி வாழ இயலாது. இக் குணநலன்களை இழந்து விட்டதால் மனிதன் இன்று வாழும் பிணமாக இருக்கிறான். இக்குண நலன்களின் மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். அவற்றைப் போற்றி வளர்த்து, அவற்றிடமிருந்து கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவியுங்கள்.
எங்கே நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே அன்பிருக்கிறது.
எங்கே அன்பிருக்கிறதோ, அங்கே அமைதியிருக்கிறது.
எங்கே அமைதியிருக்கிறதோ, அங்கே ஸத்யம் இருக்கிறது.
எங்கே ஸத்யம் இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார்.
எங்கே கடவுள் இருக்கிறாரோ, அங்கே ஆனந்தம் நிறைகிறது.
அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
Thursday, February 4, 2021
அன்பெனும் உணர்வோடு செய்யப்படும் அனைத்தும் தியானமாகும்
அன்பின் வடிவங்களே,
மக்கள் ஜபம், தியானம், தவம் ஆகியவையெல்லாம் தான் ஆன்மீகப் பயிற்சி முறையென்ற தவறான நோக்கத்தில் இருக்கின்றனர். தியானம் என்றால் என்ன என்பதை அறியாமல் தியானம் செய்கின்றனர். தாங்கள் கடவுளின் மேல் தியானம் செய்வதாகச் சொல்கிறார்கள் ஆனால் கடவுள் யாரென்று அவர்களுக்கே தெரியாது! ராமா, கிருஸ்ணா, யேசு, அல்லா, புத்தா, ஜொராஷ்டிரா என முணு முணுத்து அவர்களைத் தியானிக்கிறார்கள். ஆனால் அனைவருமே கடவுளரின் வடிவங்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. மனம் குவித்துக் காண்பதை தியானம் எனத் தவறாக எண்ணுகிறார்கள். மனக் குவிப்பு என்பது புலன்கள் சம்பந்தப்பட்டது. ஆனால் தியானம் என்பது மன எல்லைகள் அனைத்தையும் கடந்தது. தியானம் என்பதை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கோ. இடத்துக்கோ குறுக்கிவிடக் கூடாது. அது ஒரு வாழ்க்கை முறை. அன்பெனும் உணர்வோடு செய்யப்படும் அனைத்தும் தியானமே!
மனிதர்களிடம் அன்பு செலுத்தாமல். மணிக்கணக்காகத் தியானத்திற்காக உட்காருவது என்பது தியானமே அல்ல. உண்மையான ஆன்மீக சாதனை என்பது அனைவருடனும் கைகோர்த்து சமுதாயம் முழுமைக்குமாக உழைப்பது தான். அதன் மூலம் சமுதாய முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அன்பே கடவுள், ஆகவே அன்பிலேயே வாழுங்கள். அன்பற்ற இதயம் வறண்ட தரிசு நிலத்திற்குச் சமம். அனைத்துச் செயல்பாடுகளும் அன்புடன் இணைந்திருக்க வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தை எப்படி பட்டப் படிப்புக்கான வகுப்புக்களுக்குச் செல்ல முடியாதோ அதே போலத்தான் உயர்ந்த பிரேமைத் தத்துவத்தை உடனடியாக அடைய முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்து படிப்படியாக முன்னேற வேண்டும் உள் நோக்கித் தன் பார்வையைச் (நிவ்ருத்தி) செலுத்தத் தயாராகும் வரை. இந்த வெளிப்புற (ப்ரவ்ருத்தி) மார்க்கமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் ஆன்மீகப் பார்வையோடு அணுகுங்கள். சத்தியம். பிரேமை இவற்றைப் பின்பற்றிச் செய்வதைவிடச் சிறந்த ஆன்மீகப் பயிற்சி முறை வேறெதுவும் கிடையாது. சத்தியமும். பிரேமையும் இறைவனின் பெயர்கள். ஆகவே இவை இரண்டுமின்றி ஆன்மீக சாதனைகளை மேற் கொள்வதில் அர்த்தமில்லை. அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்தியுங்கள்.
Wednesday, February 3, 2021
நாம் பிறந்த நோக்கத்தை உணர்ந்து நல்வழியில் வாழ்வோம்.
அன்பின் வடிவங்களே,
குத்திய பிறகுதான் முள் என்று தெரிகிறது. தடுக்கிய பின்புதான், கல் என்று தெரிகிறது.வழுக்கிய பிறகுதான் அது வழுக்கல் நிலம் என்று புரிகிறது. சில சமயம் உண்டபின்தான் அது உறைப்பு என்று உணருகின்றோம். நமது செயல்பாடுகள் மகிழ்ச்சியாக ஆரம்பித்து பின் துக்கத்தில் முடிவதுண்டு . சொர்க்கத்துக்குள் நுழைவதுபோல் இருக்கும் பின்னர்தான் அது நரகம் என்று எண்ணிக் கலங்க முடிகிறது.
சுமைகளைச் சுமந்துகொண்டு அதை இறக்க முடியாமல் தவிக்கும் பலர் நம் மத்தியில் வாழ்கின்றார்கள். கால்களில்,கைகளில் எல்லாம் விலங்குகள், கழற்ற முடியாத நிலை. வாழமுடியாத, சாகமுடியாத குழப்பம். பலர் இன்று துயரங்களின் மொத்த வியாபாரியாக வாழ்கின்றார்கள். வாழ்வது எப்படி என்று பலர் சொல்லிச் சென்று இருக்கிறார்கள். ஆனால் அதைத் தெரிந்து கொள்ள நாம் தவறுகின்றோம். அல்லது தெரிந்தும் அதை உதாசீனம் செய்து துன்பத்தில் உழலுகின்றோம். மனிதனின் இந்த நிலையை அழகாகப் பாடி இருக்கிறார் பட்டினத்தார்.
" நாப்பிளக்க பொய் பேசி
நவநிதியம் தேடி
நலமொன்று மில்லாத
நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற
புற்றீசல் போலப்,
புலபுலெனக் கலகலெனப்
புதல்வர்களை பெறுவீர்,
காப்பதற்கும் வழியறியீர்,
கைவிடவும் மாட்டீர்,
கவர் பிளந்த மரத்துளையில்
கால் நுழைத்துக் கொண்டே,
ஆப்பதனை அசைதிட்ட
குரங்கு நிலைபோல.
அகப்படீர் கிடந்துழல
அகப்படீர் நீரே "
எனவே நாம் பிறந்த நோக்கத்தை உணர்ந்து நல்வழியில் வாழ்வோம். அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்,
Tuesday, February 2, 2021
நாடுகள், உடல்கள், உணர்வுகள் வேறு வேறாயினும் ஆத்ம தத்துவம் மட்டும் ஒன்றே
அன்பின் வடிவங்களே,
நீங்கள் அனைவரும் ஒன்றே. எந்தத் தேசத்தைச் சேர்ந்தவராயினும் சரி. பல்புகள் வேறானாலும் அவற்றினுள் பாயும் மின்சாரம் ஒன்றே. அதைப் போலவே நாடுகள், உடல்கள், உணர்வுகள் இவையெல்லாம் வேறு வேறாயினும் ஆத்ம தத்துவம் மட்டும் அனைத்திலும் ஒன்றே. ஆகவே ஜாதி. மதம். தேசியம் ஆகியவற்றின் பெயரால் வேறுபாடுகளைத் துறந்து. ஒற்றுமையின் செய்தியை எல்லோரிடத்தும் பரவச் செய்யுங்கள்.
நாடுகள் பல ஆயினும் மண் ஒன்றே!
நகைகள் பல ஆயினும் தங்கம் ஒன்றே!
பசுக்கள் பல ஆயினும் பால் ஒன்றே!
உடல்கள் பல ஆயினும் மூச்சு ஒன்றே!.
இவ்வாறு அனைத்து உயிரினங்களிலும் ஒற்றுமை கண்டு நீங்கள் சேவை புரியும் போது தான் ஆனந்தம் அனுபவமாகிறது.
நீங்கள் அன்பிலேயே பிறந்தீர்கள், அன்பிலேயே வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள். அன்பிலேயே ஐக்கியமாகிறீர்கள். பஞ்சபூதங்கள் சுயநலமற்ற தன்மைக்கு முழுமையான வடிவங்கள். சூரியன், சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களுக்கு ஒளியும், வெப்பமும், வாழ்வும் தந்து போஷிக்கிறது. மரங்கள் கரியமில வாயுவைத் தன்னுள்ளே ஏற்று மனித வாழ்க்கைக்குத் தேவையான பிராண வாயுவைத் தருகின்றன. தாய் போன்ற மண்ணோ, பொறுமைக்கும், தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாய் பாடம் போதிக்கிறது. எந்த விதமான பிரதியுபகாரமும் எதிர் பாராமல் இவை மனித குலத்திற்குத் தொண்டாற்றுகின்றன. இயற்கையை விடச் சுயநல மற்ற அன்பிற்குச் சிறந்த உதாரணம் வேறெதுவும் இல்லை. இயற்கையில் பிறந்து, இயற்கையினாலேயே போற்றிப் பாதுகாக் கப்படும் மனிதன், இயற்கை வெளிப்படுத்தும், இத்தகைய நற்குணங்களைத் தன்னககத்தே கொள்ளாமல், சுயநலமும், சுயலாபமும் கொண்ட வாழ்க்கை வாழ்வது மிகவும் அவமானகரமானது. இளைய தலைமுறையினர் சுயநலத்தையும், சுயலாபத்தையும் ஒரு சிறிய துளி கூட மிச்சமிராமல் வேரோடு களையவேண்டும். உலக மாந்தர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் எனவும் விரும்பவேண்டும். ஸமஸ்த லோகா ஸூகினோ பவந்து (உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்) எனவும் வாழ்த்துவோம்.
Monday, February 1, 2021
நேர்மையாக நடக்கும் போது தான் சமத்துவம். சகோதரத்துவம். சுதந்திரம் ஆகியவை நிலவும்.
அன்பின் வடிவங்களே,
இவ்வுலகின் எதிர் காலம், நன்மையோ அன்றித் தீமையோ - எதுவானாலும் உங்களது நடத்தையைப் பொறுத்தே அமையப் போகிறது. இவ்வுலகம் பாதுகாப் பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும் இருக்க வேண்டுமானால் உங்கள் நடத்தையும் ஒழுக்கமும் நல்லதாக இருக்க வேண்டும். இவ்வுலகத் திற்குத் தற்போதய தேவை, ஆடம்பரமும், உலகியல் சுகங்களும் அல்ல, மேன்மையான குணங்களும், நல் ஒழுக்கமும் நிறைந்த ஆடவரும், பெண்டிரும் தான். சரியான வழிமுறைகளில், இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் நடவடிக்கைகள் அமையாமல் போகுமானால் எதிர்காலத்தில் மகிழ்ச்சியும் சமாதானமும் இருக்காது
சத்யம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவனே உண்மையான மனிதன். சத்யம் என்பது நீதி, தர்மம் என்பது ரீதி, தியாகம் என்பது க்யாதி. இவை மூன்றும் சேர்ந்ததே மானவஜாதி. (மனித குலம்). இந்த மனித குலம் சத்தியத்திலிருந்து உருவாயிற்று.
இந்தப் படைப்பு அனைத்தும் சத்தியத்திலிருந்தே பிறந்து உருவாகிக் கடைசியில் சத்தியத்திலேயே ஐக்கியமாகிறது. சத்தியம் இல்லாத இடமே இவ்வுலகில் இல்லை. இந்தத்தூய கலப்பற்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
இதை ஆதாரமாகக் கொண்டே உண்மையே பேசு, இனிமையாகப் பேசு, என்று அறிஞர்களும், ஞானிகளும் கூறியுள்ளார்கள். 'ஸத்யம் ப்ருயாத்' என்பது நேர்மை என்னும் குணநலனைக் குறிப்பிடுகிறது. மானவ ஜாதி (மனித குலம்) நீதி (நேர்மை, ஒழுக்கம்) இன்றி வாழ முடியாது. அநியாயம். பொய்மை. அதர்;மம். இவற்றால் எல்லாம் சூழப்பட்டு இன்றைய உலகம் தத்தளிக்கிறது. சரிந்து வரும் மனித உயர்குண நலன்களை மீட்டு வந்து நிலை நாட்ட இளைஞர்களாலும். யுவதிகளாலும் மட்டுமே முடியும். மனிதன் நேர்மையைப் போற்றி அதன் வழி நடக்கும் போது தான் சமத்துவம். சகோதரத்துவம். சுதந்திரம் ஆகியவை சமுதாயத்தில் நிலவும். நேர்மையைத் தன் வழிமுறையாகக் கொள்ள வேண்டுமானால் மனிதன் சத்தியத்தை ஒட்டி நடக்க வேண்டும். இதனால் தான் ‘சத்தியம் ப்ருயாத்’ எனக் கூறுகிறார்கள். இது தான் மனிதனின் தலையாய கடமை. இரண்டாவது ‘ப்ரியம் ப்ருயாத்’ (இனிமையாகப் பேசுங்கள்). இது தர்மம் என்னும் குண நலனைக் குறிக்கிறது.
இதை அடிப்படையாகக் கொண்டுதான் பகவத் கீதையில் “சத்தியத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள், உங்களது பேச்சு. மற்றவர்களது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தூண்டிவிடுவதாக அமையக் கூடாது, ஆன்மீக குண நலனைக் கடைப்பிடிக்கவேண்டும், ஆன்மீகப் பாதையில் செல்ல இந்தக் குணநலன்களை மனிதன் கைக்கொள்ள வேண்டும்" என்று சொல்லப்பட்டுள்ளது. அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
சமுதாயத் தொண்டு புரிந்து இறைவனை அடையலாம் என்று பகவான் கூறியிருக்கிறார்
அன்பின் திர் உருவங்களே,
கலியுகத்தில் நாமஸ்மரணம், பஜனை மூலமாக மனதை இலகுவாக்கலாம். அதுமட்டுமன்றி துறவறத்தில் இருக்கக்கூடிய கடுமைகளை மாற்றி, லௌகீகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் சமுதாயத் தொண்டு புரிந்து இறைவனை அடையலாம் என்று சுவாமி கூறியிருக்கிறார். துறவறம் போன்றவை நமக்கு அவசியம் இல்லை. அனால் தனிப்பட்ட நபர்கள் சமுதாயத்தை மேம்படுத்துவதற்குத் தியாகம் செய்து தம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும்,. HANDS THAT SERVE ARE HOLIER THAN THE LIPS THAT PRAY என்று சுவாமி கூறுகிறார். பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிடச் சமுதாயத்துக்குச் சேவை செய்யும் கரங்களே புனிதமானவை என்பதே சுவாமியின் வாக்கு. தனி மனிதனுக்கு ஆசைகள் இருக்கின்றன. ஆசைகளுக்கு வரம்பு கிடையாது. அளவும் கிடையாது. ஆனால் ஆசையின் பின்னே ஓடுகின்ற ஒரு மனிதன் தனது வாழ்நாளில் இன்பத்தையும், சுகத்தையும் சாந்தியையும் அனுபவிப்பது இல்லை. அவன் சுக துக்கங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு விழிக்கிறான். அவன் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்றால், ஆசையைக் களையவேண்டும். துறவு நிலையை ஏற்கவேண்டும். சாதாரண வாழ்க்கையில் துறவறத்தை எப்படி ஏற்கமுடியும் என்று கூறும்போது HANDS IN THE SOCIETY AND HEAD IN THE FOREST என்று கூறுகிறார். கரங்கள் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அதே வேளை சிந்தனையும் மனமும் இறைவன்மீது இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே துறவற நிலையை நம்மால் அடைய முடியும் என்று சுவாமி வழிகாட்டுகிறார். மனிதனுடைய வாழ்வில் நான்கு நிலைகள் இருக்கின்றன. பிரம்மச்சரியம், சம்சாரம், வானப்பிரஸ்தம் சன்னியாசம் என்பனவே அவை. இவைகளில் சம்சார நிலை தவிர மற்ற மூன்று நிலைகளில் இருப்பவர்கள் பணத்தைக் கையாளக்கூடாது என்பது சனாதன தர்மத்தின் வழக்கமாகும். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் மற்ற மூன்று நிலைகளில் இருப்பவர்களை அரவணைத்து ஆதரவளித்து அவர்களைப் பேணவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் சுவாமி இதனிலும் மேலாக சமூகத்தில் இருப்போர், சமுதாயத் தொண்டு புரிவோர்களது மன நிலை துறவிகளுடையதைப் போன்று இருந்தால் வாழ்க்கை சுகமாகும் என்று விளக்குகிறார்.
Subscribe to:
Posts (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...