Saturday, March 6, 2021

ஆன்மீகத்தில் முன்னேறவேண்டுமானால் நாம் புலன்களைக் கட்டுப்படுத்தவேண்டியது அவசியம்.

அன்பின் வடிவங்களே, திருச்சி அருகில் பகவானின் அருட்பிரசங்கமொன்று நடைபெற்றது. நிறைந்திருந்த் பக்தர்கள் மத்தியில் பகவானின் தெவீகத் தன்மையைச் சந்தேகிக்கும் ஒருவரும் அங்கிருந்தார். மக்கள் மதியிலிருந்த ஊமைப்பையனொருவனை அழைத்த பகவான், மைக்குக்கு எதிரே நிற்குமாறு கூறி உன்பெயரென்ன என்று கேட்டார். எல்லோரது எதிரிலும் வாய்திறந்து அந்த ஊமைப் பையன் தனது பெயரைக் கூறினான். சந்தேகப்பட்ட மனிதர் வெட்கத்தால் தலை குனிந்தார். நல்லதையே பார்க்கவேண்டும். கெட்டதை ஒருபொழுதும் பார்க்கக் கூடாது. அப்பொழுது தான் நமது கண்கள் புனிதத் தன்மையை அடைகிறது. இதனால் இறைவனையே காணக்கூடிய திவ்வியத் தன்மையை அடையலாம். ஆன்மீகத்தில் முன்னேறவேண்டுமானால் நாம் புலன்களைக் கட்டுப்படுத்தவேண்டியது அவசியம். இன்றைய மனிதன் தன் தேகத்தின் மீதும் நிரந்தரமற்ற மற்ற விடயங்கள் மீதும் பற்று வைத்துத் தனக்குள் உறைந்திருக்கும் தெய்வீகத்தை மறக்கின்றான். ஆன்மீகதுக்கு வெளியேயுள்ளவற்றின் மேல் பற்று வைப்பதினால் எதையோஅடைந்துவிட்டதாக நினைக்கிறான். முதலில் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். சப்தம், தொடுதல், சுவை, பார்வை, நுகர்தல் என்பவற்றை நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும். எந்தத் தீய விடயங்களையும் கேட்க முயற்சிக்கக்கூடாது. அம்மதிரியான சூழ்நிலை ஏற்படும் போது அங்கிருந்து விலகிச் சென்றுவிடவேண்டும், தீய விடயங்களைக் கேட்கக் கூடாது, தீய விடயங்களைப் பார்க்கக் கூடாது, தீயவிடயங்களைப் பேசக்கூடாது. இவ்வகையான தீய பழக்ககளிலிருந்து விலகியிருக்க முயற்சிக்க வேண்டும். இதுவே நமது ஆன்மீக சாதனைக்கு வழி செய்கிறது. மகரிஷிகள் வனத்துக்குச் சென்று தமது புலன்களைக் கட்டுப்படுத்தியது எதற்காக. புலன்களைக் கட்டுப்படுத்துவதே உண்மையான ஆன்மீக சாதனையாகும். புலன்களைக் கட்டுப்படுத்தாத எந்த ஆன்மீக சாதனையும் பயனற்றது. தகாத வார்த்தைகளைப் பேசுவதை விட இறைவனின் தெய்வீக நாமங்களைக் கூறுவதே சிறந்தது. நாம் புலன்களைப் பயன்படுத்திப் பல தவறான காரியங்களைச் செய்கிறோம். இதை நாம் புறக் கண்களால் காண இயலாது. கண்களுக்குத் தெரியாத இந்தப் புலன்களால் நாம் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். கண்களால் காணமுடியாதது எதுவோ அது செய்கைகளின் பலன்களை அளிக்கிறது. கண்களால் காணாமுடியாவிட்டலும் இவற்றின் பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும். அன்பின் வடிவங்களே, மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் புலன்களே வாழ்க்கையாகிறது. புலன்களை நல்வழியில் செலுத்தினால் வாழ்க்கை ஆனந்தமாக அமைகிறது. அமைதியான வாழ்க்கை வாழப் புலன்களைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும். தீய வார்த்தைகளைத் தவிர்ப்பது மட்டுமின்றி, அமைதியாகவும் மெதுவாகவும் பேசவேண்டும். நமது பேச்சு மிருதுவாகவும் இனிமையாகவும் இருக்கவேண்டும். இதுபோன்றே எப்பொழுதும் பேசவேண்டும். வார்த்தைகளில் புனிதத் தன்மை இருக்க வேண்டும். புனித வார்த்தைகளை பயன்படுத்தியே பலர் புத்தகங்களையும் பாடல்களையும் எழுதியுள்ளனர். வால்மீகி, வியாசர், போத்தனா போன்றோர் பல புனித நூல்களை இயற்றியதால் இவர்களின் வாழ்க்கை புனிதமாகியது. இவர்களைப் பின்பற்றுவதன் மூலம் நமது வாழ்க்கையும் புனிதமடைகிறது. பல சமயங்களில் தேவையற்ற புத்தகங்களைக்கூடப் படிக்கிறோம். இதுவும் மிகத் தவறானது. எதைப் பார்த்தாலும், பேசினாலும், படித்தாலும், எழுதினாலும், செய்தாலும் அவை நல்லதாகவே இருக்க வேண்டும். முடிந்தவரை என்டத் தவறும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மனிதனில் மறைந்திருக்கும் தெய்வீகம் புலன்களில் உள்ளது. புலன்களின் மூலமாகவே நாம் தெய்வீகத்தை அடையமுடியும். இறைவனை நம் கண்களால் காணமுடியும். நாமும் தெய்வீகமாகவே மாறலாம். உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

Friday, March 5, 2021

நாம் நம்மிடையே ஒற்றுமையை வளர்த்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்

அன்பின் அவதாரங்களே,நம்மிடம் எல்லா நல்ல பண்புகளும் வளங்களும் உள்ளன. எல்லாத் தர்மங்களும் உள்ளன. ஆனால் ஒற்றுமை இல்லாத காரணத்தால் அவை பயனற்றுப் போய் நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம். எனவே நாம் நம்மிடையே ஒற்றுமையை வளர்த்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே மானுட இனத்தைச் சேர்ந்தவர்கள். மனித இனத்தினுள் மிருகத்தன்மைக்கு இடமில்லை. எனவே நாம் மனிதர்களே எனும் உண்மை நிலையை உணர்ந்துகொள்வது மிகவும் அவசியம். நாம் அடுத்வருடைய துன்பங்களை நம்முடைய துன்பமாகவே பாவிக்கவேண்டும். மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நமது கஷ்டங்களாகவே கருதவேண்டும். மற்றவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை நாமும் அனுபவிக்கும்போதுதான் இந்த உண்மையை உணர்ந்துகொள்வோம். ஒன்றுபட்ட உணர்வைப் பெற்று, நம்மிடையே சகோதரத்துவத்தை வளர்த்து ஒற்றுமையாக வாழ வேண்டும். சமுதாயத்திலுள்ள நல்ல விடயங்களைக் கடைப்பிடித்துத் தீயவற்றை ஒதுக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்.. நாம் நமது பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும். சமுதாயத்திலுள்ள நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு தீயவற்றை ஒதுக்கித் தள்ளவேண்டும். யராவது தீங்கு செய்தால் பதிலுக்கு அவர்களுக்கு நல்லதையே செய்யவேண்டும். உதவிசெய்தவர்களுக்குப் பிரதி உதவி செய்வதில் உள்ளதை விடத் துன்பம் செய்தவர்களுக்கும் நன்மை செய்வதில்தான் நமக்குப் பெருமை இருக்கிறது. தீமைசெய்து துன்பத்துக்கு ஆளாக்கியவர்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்ற உயர்ந்த மன நிலையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். யாராவது துன்பம் செய்தால், அது அப்போது அவருக்கிருக்கும் மனநிலையைப் பொறுத்தது. எனவே அவருக்கும் நன்மை செய்வதே நமது கொள்கையாக இருக்கவேண்டும். நமது மனப்பான்மை எப்படி உள்ளதோ அப்படியே தான் விளைவும் இருக்கும். நம்முடைய உணர்வுகள் நல்லவையாக இருந்தால் நமது செயல்களும் நல்லவையாகவே இருக்கும். மனம் நல்லதாக இருந்தால் நினைப்பவை, செய்பவை எல்லாமே தானாகவே நல்லவைகளாக அமைந்துவிடும். உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

Thursday, March 4, 2021

ஓம் ஸ்ரீ பகவான் சத்திய சாயி பாபாய நமஹ

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அஷ்டோத்திர நாமாவளியின் முதலாவது சுலோகம்: ஓம் ஸ்ரீ பகவான் சத்திய சாயி பாபாய நமஹ இதன் பொருள்: பகவான் ஸ்ரீ சத்யசாயி பபாவின் தாய் ஈஸ்வராம்பா இரண்டு பெண்குழந்தைகளையும் ஒரு ஆண்மகனையும் பெற்றிருந்தார். தனக்கு இன்னொரு ஆண் மகன் வேண்டுமெனச் சத்தியநாராயண நோன்பில் ஈடுபட்டிருந்தார். அவரது கோரிக்கையை நிறைவேற்றி அவர் கேட்ட அந்த வரத்தை இறைவன் கொடுத்தார். ஆன்மீக முன்னேற்றத்துக்கு முதலாவதாகத் தேவைப்படுவது சத்தியம் என்று பாபா கூறுகிறார். வாழ்க்கையில் நல்லபடி வாழ நாம் உண்மையையே பின்பற்ற வேண்டும். அந்த உண்மை உருப்பெற்று விளங்குபவரே சத்திய சாயி பாபா. பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா உண்மையையே சத்தியமாகக் கொண்டு சயனித்திருந்தார். 1926 அம் ஆண்டு நவம்பர் திங்கள் 23 ஆம் நாள் கார்த்திகைச் சோமவாரம் திருவாதிரை நட்சத்திரத்திலே அன்னை ஈஸ்வராம்பாவின் பிரார்த்தனைக்கு இரங்கி அவரின் திருமகனாக அவதரித்தார். தனக்கு ஆண்மகவு வேண்டும் என்று அன்னை ஈஸ்வராம்பா சத்திய நாராயண பூஜை செய்ததன் பலனாகப் பிறந்ததால் அக்குழந்தை சத்திய நாராயணன் என்றே அழைக்கப்பட்டது. பிறந்த குழந்தையைக் கீழே கிடத்திய போது, அத்துணி விசித்திரமாக மேலும் கீழும் நாகர்வதைக்கண்ட அந்தக் கிராமப் பெண்கள் என்ன என்று பார்த்தபோது, துணிக்குக்கீழே ஒரு பாம்பு மண்டலமிட்டுப் படுத்திருப்பதை அவதானித்தனர். சத்திய சொரூபமான நாராயணனே அவதரித்திருந்தார். அனந்த சயனனுக்கு ஆதிசெஷனே படுக்கையாக அமைந்தார். ஓ சாயி சத்தியத்தில் சயனித்திருப்பவனே, உமக்கு எமது வணக்கம். உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

Wednesday, March 3, 2021

கர்க்கபுராணத்தின் இறுதிப்பகுதி

அன்பின் திருவுருவங்களே, தனது கலியுக அவதாரம் மோஹினி அவதாரம் போல் மிக அழகாகத் தேஜோமயமாகத் தங்கம்போன்று இருக்குமென்றும், தான் சூரியன் போல் பிரகாசிப்பேன் என்றும் ஸ்ரீ க்ரிஷ்ணர் கூறினார். கலியுக அவதாரத்தின்போதான அடையளங்கள் பற்றி வியாச பகவான் கேட்டபோது, தனது கால் நகங்களும் உதடுகளும் எப்பொழுதும் மென்சிவப்பாக இருக்கும், கைகளும் கால்களும் ஒருபெண்ணுடையதைப்போன்று மெல்லியதாக இருக்கும், இடை மெலிந்தும் கழுத்து தீர்க்கமானதாகவும் இருக்கும், கழுத்துக்கும் உடலுக்கும் விகிதப் பொருத்தமற்று இருக்குமென்றும் தெரிவித்த பகவான், தனது மார்பில் மஹாலக்ஷ்மி பார்பதற்குரியதாக இருக்கும் ஸ்ரீவத்ச மச்சம் இடது கன்னத்தில் இருக்குமென்றும், தனது ஊடுருவிப்பர்க்கும் கண்களின் மூலம் ஒருவரது முற் பிறவிகள், இப்பிறவி, எதிகாலப் பிறவிகள் அல்லது தன்னுடன் இணைதுக்கொள்ளல் போன்ற அனைத்தையும் பார்க்கக்க்கூடிய திறனுடன் இருக்கும், பார்வை multidimensional ஆக இருக்கும், தன்னால் பார்க்கப்படும் அனைவரும் புனிதமாக்கப்படுவார்கள், தரிசன நேரத்தில் யாரையாவது பார்த்துத் தான் தனது புருவத்தை உயர்த்தினால் அவர்கள் நரகத்துக்குச் செல்லவதற்குரிய கொடிய பாவங்கள் செய்திருந்தாலும் அவர்கள் சொர்க்கத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், தான் ஒருவரைப் பார்த்துச் சிரித்தால் அவரது துன்பங்கள் அனைத்தும் பறந்தோடிவிடும் என்றும், ராமாவதரம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் முடிதரித்தத்து போலன்றித் தனது கேசமே முடியணிந்தது போலிருக்கும் என்றும் தனது உருவத்தின் அழகு, தனது கீதம், தனது லீலைகள் மற்றும் ஒரே நேரத்தில் பலருக்குப் பல இடங்களில் அவர்களது இஷ்ட தெய்வங்கள்போல் காட்சியளிப்பது, ஆபத்துக்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் அதிசயமான விதத்தில் காப்பாற்றுவதும் கையசைப்பின் மூலம் பல்வேறு பொருட்களை உருவாக்குதல், லிங்கோத்பவம், கனவில் வந்து சத்திரசிகிச்சை பண்ணுதல் போன்றவையும், (பகவான் இவற்றைத் தனது விசிடிங்காட் எனக் குறிப்பிடுவார்), உலக மொழிகள் அனைதையும் பேசித் தனது அன்பால் கவர்தல் ஆகிய முறைகள் மூலம் உலக மக்கள் அனைவரையும் நல்வழிப்படுத்துவேனென்றும் கூறினார். உலக மக்கள் மீது எவ்வித எதிர்பார்ப்புமின்றிய அன்பு, அதாவது பரமப்பிரேமையுடன் தான் செயல்படவுள்ளதாகவும் தெரிவித்தார். கௌஸ்துபமாலை பற்றி வியாச பகவான் கேட்டபோது அம்மாலைக்குப் பதிலாகத் தான் இரண்டு அங்கி அணிந்திருப்பதாகவும், (ஒன்று பட்டு வேஷ்டி மற்றது சுவாமியின் அங்கி) மகரந்தம் போன்ற மஞ்சள் நிறமான அங்கி அணிந்திருப்பதாகவும், அது சாதாரண அங்கியல்லாமல், அது தெய்வீமகமானதாக இருக்குமென்றும், தனது உடல் சாதாரண சதையாலும் ரத்தத்தாலும் ஆனதாக இருக்காமல் ககன சரீரமாக இருக்குமென்றும், அவரது பட்டாடையின் ஒரு நூலாவது தங்களுக்குக் கிடைக்குமா என உலக மக்கள் போட்டிபோடுவார்களென்றும் கூறியதுடன் தனது பெயர் பாபா, சாயி என்று இரண்டு எழுத்துக்களைக் கொண்டதாக இருக்குமென்றும் வியாச முனிவரிடம் கிருஸ்ஹ்ணபகவான் கூறினார். மேலும் தனது கலியுக அவதாரத்தின்போது தனது சங்கல்பமின்றி எவரும் தன்னிடம் வரமுடியாது என்றும் தனது கலியுக அவதார ரூபத்தைக் கனவில் கூடக் காண முடியாதென்றும் தான் அவதரித்திருக்கும் இடத்தில்கூடத் தனது சங்கல்பமின்றி யாரும் கால் வைக்கமுடியாதென்றும் தெரிவித்தார். கர்க்கபுராணம் இத்துடன் முடிவடைகிறது. உலகம் அனைத்தும் நலமாக இருக்கப் பிரார்த்திப்போம்.

Tuesday, March 2, 2021

கர்க பகாவதத்தின் தொடர்ச்சி

அன்பின் அவதாரங்களே, (கர்க பகாவதத்தின் தொடர்ச்சி)நாம் அனைவரும் போன ஜென்மத்தில் நமக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை என்ற பரீட்சையில் தேறாமல் தோல்வியடைந்ததால் மீண்டும் பிறவியெடுத்துள்ளோம். போன ஜென்மத்தின் நிறைவேறாத ஆசைதான் இப்பிறவியின் காரணம். நாம் புரியும் செயல் மூலம் மாத்திரமன்றி மனதால் தவறாக நினைத்தலும் கர்மாதான் என்று நமது பகவான் கூறுகிறார். வியாச பகவானைத் திருப்திப்படுத்த அவர் முன் கிருஷ்ணபகவான் தோன்றினார். கலியுகத்தில் மக்களைக்காக்கத் தான் அவதாரம் எடுக்கவுள்ளதாகவும் தனது அவதாரத்தின் முன் ஒருவரை அனுப்புவுள்ளதாகவும்கூறிய ஸ்ரீகிருஷ்ணபகவான் தான் அனுப்பவுள்ளவர் 83 வயதுவரை வாழ்வாரென்றும் வியாச மகரிஷியிடம் கூறினார். ஆனால் அவரது போதனைகளை அக்காலத்தில் யாரும் ஒத்துக்கொளாமாட்டார்கள் என்றும் அவர் மறைந்து பலவருடங்களின் பின்தான் மக்கள் அவரது போதனைகளைப் புரிந்து பின்பற்றுவர் என்றும் அவர்தான் கௌதம புத்தர் என்றும் கூறினார். அதற்கு எட்டு நூற்றாண்டுகளின் பின் இன்னொருவரை அனுப்பவுள்ளதாகவும். அவர் வேதத்தையும் நாமஸ்மரணையையும் பரப்புவாரென்றும், பஜகோவிந்தம் என்னும் நூலை அவர் எழுதுவாரென்றும், அவர் தான் ஆதி சங்கரர் என்றும் கிருஷ்ணபகவான்கூறினார். ஆனால் ஆதி சங்கரர் 32 வருடங்கள் தான் இவ்வுலகில் வாழ்வாரென்றும் அவருக்குக் குறைந்த வயது என்பது தனது சங்கல்பம் என்றும் கூறிய கிருஷ்ணபகவான் நடக்கும் அனைத்தும் இறைவனின் சங்கல்பம் என அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். நாமத்தின்மூலம் தன்னைக் கட்டிப்போடுவது இலகு என்று நமது பகவானும் கூறுகிறார். அதன் பின் பாரதத்தை 4 பிரிவுகளாகப் பிரித்து எங்கும் இறைவன் நாமத்தைப் பரப்ப மகான்களை அனுப்பவுள்ளதாகவும் அதன்பின் தானேனே இவ்வுலகில் மனித அவதாரமெடுக்கவுள்ளதாகவும் கிருஷ்ணபகவான் வியாச பகவானிடம் கூறினார். இது சுமார் 5,000 வருடங்களின் முன் கலியுகம் பிறந்த வேளையில் நடைபெற்ற நிகழ்ச்சியாகும். உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரர்த்திப்போம்.

Monday, March 1, 2021

பகாவதத்தைப் பக்தியோடு கேட்பவர்கள், சொல்பவர்கள், படிப்பவர்கள் இறைவளி நடப்பர்

அன்பின் அவதாரங்களே, கலியுகத்தில் சத்தியத்துக்கு மதிப்பற்றுப் போவதையும் பொய்யைத் திரும்பத்திருமபச் சொல்வதன்மூலம் அதையே உண்மையென மனிதகுலத்தை நம்பவைக்கபடவுள்ளதையும் தமது ஞானதிருஷ்டியினால் அறிந்து வியாசர் மிக வேதனைப்பட்டார். வேதத்தை மனிதர்கள் பாராயணம் செய்யாமமையினால்தான் பல வித அகிம்சையற்ற செயல்களில் கலிகால மனிதர்கள் ஈடுபடவுள்ளதையும் மிருக வதை மூலம் உணவைப் பெறவுள்ளதையும் அவர் உணர்ந்தார். தினமும் சிறிதளவாவது வேதம் வீடுகளில் ஒலிக்கவேண்டிய நிலையில் ஏன் வேதத்தை மக்கள் சொல்லப்போவதில்லை என்று அவர் ஆராய்ந்தபோது வேதம் கடல்போல் மிகப் பெரியதென்பதை உணர்ந்தார். அதனை இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்கு வேதங்களாகப் பிரித்தார். அவையும் மிகப் பெரிதாக இருந்ததால், அதனை மேலும் பல சூத்திரங்களாகப் பிரித்தார். அதைக்கூட கலிகால மனிதர்கள் பாராயணம் செய்யப்போவதில்லை என்று உணர்ந்த வியாசர், திருப்தியுறாமல் தனது மானசீகக் குருவான நாரதரை நோக்கித் தவமிருந்தார். அவருக்குத் தரிசனமளித்த நாரதர், கிருஷ்ணபகவானின் லீலைகளை வியாசர் எழுதாமல் மஹா பாரத்தை எழுதியதைக் குறிப்பிட்டுப் பகாவதத்தை எழுதும்படி கூறினார். அதன் மூலம் கலியுக மனிதர்களுக்கு நிம்மதிகிடைக்கும் என்றும் கூறினார். ப, க, வ, த, மு என்ற அட்சரங்களைக் கொண்ட பகவதத்தில், ப என்னும் அட்சரம் பக்தியையும், க என்னும் அட்சரம் கல்வி அதாவது ஞானம் என்பதையும், வ என்னும் அட்சரம் வைராக்கியத்தையும், த என்னும் அட்சரம் தத்துவத்தையும், மு என்னும் அட்சரம் முக்தியயும் குறிப்பதாகும் என்று கூறியதுடன், பகாவதத்தைப் பக்தியோடும், ஞானத்தோடும், வைராக்கியத்தோடும் கேட்பவர்கள், சொல்பவர்கள், படிப்பவர்கள் ஆகியோர் தத்துவம் புரிந்து இறைவளி நடப்பர் என்றும் கூறினார். இதனை நமது சுவாமியும் அழகாக் கூறுகிறார். உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்திப்போம். (இதன் மிகுதியை நாளை தொடர்வோம்)

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...