இவ்வுலகத்தைக் கர்மஷேத்திரம் என்றும் கீதைவாகினியில் குறிப்பிட்டுள்ள பகவான்,
உலகில் பிறவியெடுத்த அனைவரும் கர்மமாற்றவேண்டியதைத் தவிர்க்க முடியாதென்றும், அதேவேளை, தாம் செய்யும் கர்மங்களின் பலனை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டுமென்றும் பகவான் கூறுகிறார்.
பலனை எதிர்பார்த்துச் செய்யும் கருமங்கள் அவற்றுக்கேற்ப நற்பலனையோ தீப்பலனையோ உருவாக்குவதால் அவற்றுக்கான பலன்களைக் கருமமாற்றுபவரே அனுபவிக்கவேண்டிவரும்.
அதேவேளை, பலனை எதிர்பார்க்காமல் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யும் கருமங்களின் பலன்கள் இறைவனையே சென்றடையும்.
இதனை எடுத்துரைத்த கண்ணபிரான், சத்திரியனான அருச்சுனன் சத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பகவானுக்கு அர்ப்பணமாகச் செய்யும் அவனது கருமங்கள் அனைத்தின் பலன்களும் கருவியான அருச்சுனனை ஒருபோதும் பாதிக்காது என்பதையும் வலியுறுத்தினார்.
பகவான் ஆணித்தரமாக இவற்றை எடுத்துரைத்த போதிலும், அருச்சுனனின் சந்தேகங்கள் முழுமையாகத் தீரவில்லை. அவன் தொடர்ந்தும் நிச்சயமற்றதும் சலனம் நிறைந்த மனதுடனேயே தொடர்ந்தம்
கண்ணபிரானுடன் உரையாடுகிறான்
கண்ணபிரானினா வார்த்தைகளால் ஓரளவு தெளிவு பெற்றபோதிலும் அவனது சந்தேகங்கள் முழுமையாக நீங்கவில்லையென்பது கீதோபதேசத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் கீதோபதேசத்தின் இறுதி வரை அவன் பூரண சரணாகதி அடையவில்லை என்றும் கண்ணபிரான் தனது உண்மைத் தோற்றத்தைத் தனது விஸ்வரூப தரிசனத்தின் மூலம் காட்டிய பின்னரே அருச்சுனன் முழுமையாகத் தெளிவுபெற்று யுத்த சன்னத்தனானான் என்பதையும் கீதையின் 18 ஆவது அத்தியாயம் நமக்கு உணர்த்துகிறது.
ஓம் சிறி சாயி ராம்..