Saturday, January 30, 2021

அன்பையும் அமைதியையும் கடைப்பிடித்தால் அனைவரும் வளமாக வாழலாம்

அன்பின் வடிவங்களே, மனம்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். மனம் தான் அடிமைத்தனத்துக்கும் காரணம். வீடுபேற்றுக்கும் காரணம். எதை மறந்தாலும் கடவுளின் திருப்பெயரை மாத்திரம் மறக்கக்கூடாது. கடவுளின் திருநாமத்தை உச்சரிப்பதால் துன்பம் விலகும். அமைதியின்மை, கோபம், துன்பம், துயரம் அனைத்தையும் கடக்க இறைவனின் நாமம் ஒன்றே போதுமானது. காமம், குரோதம், மோகம், கோபம் போன்ற அனைத்துமே ராட்சச குணங்களாகும். கோபம் என்னும் அரக்கனை அனுமதித்தால் அது எல்லாவற்றையும் அழித்துவிடும். கோபமுடைய மனிதனை நம்பி எந்தவேலையையும் கொடுக்கக்கூடாது. அவனிடமிருந்து உறவினர்கள் கூட விலகிவிடுவார்கள். கோபம் , பொறாமை ஆகியவை நம்மை அணுகவிடக்கூடாது. எப்பொழுதும் அன்புவடிவமாக இருக்கவேண்டும். இவ்வாறு அனைவரும் அன்பையும் அமைதியையும் கடைப்பிடித்தால் நாடு வளம்பெறும். நலனை விரும்புபவர்கள் எப்பொழுதும் அன்புடன் வாழவேண்டும். யாருக்கும் எவ்வித துன்பமும் ஏற்படுத்தாமல் வாழவேண்டும். உலகத்திலுள்ள அனைவரும் சுகமாக வாழவேண்டுமெனப் பிரார்த்திக்க வேண்டும். அன்புடன் கடவுளை நினைக்கவேண்டும். ஏனெனில் இந்த அன்புதான் உலகைக் காக்கிறது. மனிதர்கள் அன்பெனும் பாதையை விட்டு விலகி வாழவே கூடாது. பிறர் பரிகசிக்கலாம், ஏளனம் செய்யலாம், ஆனால் அன்புடனே எப்பொழுதும் வாழவேண்டும். அன்பு அளித்தும், மன்னித்தும் வாழ்வதாகும். கோபம் கேடு விளைவிக்கும். ஆகவே அன்புடன் வாழுங்கள். உங்களுக்கு யாராவது துன்பம் செய்யக்கூடும் அப்பொழுதும் கோபப்படக்கூடாது. கடவுள்தான் அவ்வாறு செய்கிறார் என்று நினைக்கவேண்டும். கடவுள்தான் எல்லாவற்றையும் செய்கிறார். கடவுள் தான் துன்பங்களையும் தருகிறார். சந்தோசத்தையும் அவரே அளிக்கிறார். எல்லா நேரங்களிலும் காப்பாற்றுவது கடவுள்தான். தண்டிப்பதும் கடவுளே. காப்பதும் கடவுள்தான். எல்லாம் கடவுள் எண்ணப்படியே நடைபெறுகின்றன. அதனால் எல்லாவற்றையும் கடவுளுக்காக அர்பணம் செய்யவேண்டும். சிலர் பழி சொல்லலாம். அதையும் கடவுள்தான் செய்கிறார் என்று நம்பவேண்டும். உங்களுக்கு நடப்பதெல்லாம் கடவுளின் பிரசாதமே. செய்யும் செயல்கள் எல்லாம் கடவுளுக்கு மகிழ்ச்சியுண்டாக்கவே செய்யவேண்டும். இவ்வாறு நடந்துகொண்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும், முன்னேற்றமும் நிச்சயம் ஏற்படும். உலகம் அனைத்தும் நலமாக வாழ வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...