Thursday, February 25, 2021

அன்பபெனும் அமுதம் கோபம், பொறாமை எனும் அரக்கர்களை அழித்துவிடும்.

அன்பின் திரு உருவங்களே,அன்புடன் கடவுளை நினைக்கவேண்டும். ஏனெனில் இந்த அன்புதான் உலகைக் காக்கிறது. பக்தர்கள் அன்பெனும் பாதையை விட்டு விலகி வாழவே கூடாது. பிறர் பரிகசிக்கலாம், ஏளனம் செய்யலாம், ஆனால் அன்புடனே எப்பொழுதும் வாழவேண்டும். அன்பு அளித்தும், மன்னித்தும் வாழ்வதாகும். கோபம் கேடு விளைவிக்கும். ஆகவே அன்புடன் வாழுங்கள். உங்களுக்கு யாராவது துன்பம் செய்யக்கூடும் அப்பொழுதும் கோபப்படக்கூடாது. கடவுள்தான் அவ்வாறு செய்கிறார் என்று நினைக்கவேண்டும். கடவுள்தான் எல்லாவற்றையும் செய்கிறார். கடவுள் தான் துன்பங்களையும் தருகிறார். மகிழ்ச்சியையும் அவரே அளிக்கிறார். எல்லா நேரங்களிலும் காப்பாற்றுவதும் கடவுளே. தண்டிப்பதும் கடவுளே. இருப்பதைக் காப்பதும் கடவுள்தான். எல்லாம் கடவுள் எண்ணப்படியே நடைபெறுகின்றன. அதனால் எல்லாவற்றையும் கடவுளுக்காஎ அர்பணம் செய்யவேண்டும். சிலர் பழி சொல்லலாம். அதையும் கடவுள் செய்கிறார் என்று நம்பவேண்டும். உங்களுக்கு நடப்பதெல்லாம் கடவுளின் பிரசாதமே. செய்யும் செயல்கள் எல்லாம் கடவுளுக்கு மகிழ்ச்சியுண்டாக்கவே செய்யவேண்டும். இவ்வாறு நடந்துகொண்டால் நல்வாழ்வு நிச்சயம். வாழ்க்கை என்னும் இக்கடலில் நாம் மிதக்கும் பொருள்போல் இருக்கவேண்டும். அதுவே மனிதனைக் காத்திடும். அன்பபெனும் அமுதம் கோபம், பொறாமை எனும் அரக்கர்களை அழித்துவிடும். எப்பொழுதும் எது நடந்தாலும் அது கடவுள் சங்கல்ப்பப்படி நடப்பதாகவே நினைத்துக் கொள்ளவேண்டும். பஜனை செய்யுங்கள். கடவுளின் நாமத்தை உச்சரியுங்கள். பஜனை மிக முக்கியமானது. கடவுளின் திருப்பெயரை உச்சரிப்பதே பஜனையின் முக்கிய அம்சம். பலருடன் சேர்ந்து பஜனை செய்யும்போது ஒருவராவது கடவுளின் மனதை உருகச் செய்துவிடுவார். பலர் ஒன்றுசேர்ந்து நாம ஜெபத்தில் ஈடுபடும்போது கடவுளின் மனம் உருகிவிடும். அதிகாலையில் நகர சங்கீர்த்தனம் செய்யும்போது அதைக் கேட்டுக் கண்விழிப்பவர்கள் மனமகிழ்ச்சியடைவர். உலகம் அனைத்தும் நலமாக வாழ்ப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...