Thursday, February 4, 2021
அன்பெனும் உணர்வோடு செய்யப்படும் அனைத்தும் தியானமாகும்
அன்பின் வடிவங்களே,
மக்கள் ஜபம், தியானம், தவம் ஆகியவையெல்லாம் தான் ஆன்மீகப் பயிற்சி முறையென்ற தவறான நோக்கத்தில் இருக்கின்றனர். தியானம் என்றால் என்ன என்பதை அறியாமல் தியானம் செய்கின்றனர். தாங்கள் கடவுளின் மேல் தியானம் செய்வதாகச் சொல்கிறார்கள் ஆனால் கடவுள் யாரென்று அவர்களுக்கே தெரியாது! ராமா, கிருஸ்ணா, யேசு, அல்லா, புத்தா, ஜொராஷ்டிரா என முணு முணுத்து அவர்களைத் தியானிக்கிறார்கள். ஆனால் அனைவருமே கடவுளரின் வடிவங்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. மனம் குவித்துக் காண்பதை தியானம் எனத் தவறாக எண்ணுகிறார்கள். மனக் குவிப்பு என்பது புலன்கள் சம்பந்தப்பட்டது. ஆனால் தியானம் என்பது மன எல்லைகள் அனைத்தையும் கடந்தது. தியானம் என்பதை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கோ. இடத்துக்கோ குறுக்கிவிடக் கூடாது. அது ஒரு வாழ்க்கை முறை. அன்பெனும் உணர்வோடு செய்யப்படும் அனைத்தும் தியானமே!
மனிதர்களிடம் அன்பு செலுத்தாமல். மணிக்கணக்காகத் தியானத்திற்காக உட்காருவது என்பது தியானமே அல்ல. உண்மையான ஆன்மீக சாதனை என்பது அனைவருடனும் கைகோர்த்து சமுதாயம் முழுமைக்குமாக உழைப்பது தான். அதன் மூலம் சமுதாய முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அன்பே கடவுள், ஆகவே அன்பிலேயே வாழுங்கள். அன்பற்ற இதயம் வறண்ட தரிசு நிலத்திற்குச் சமம். அனைத்துச் செயல்பாடுகளும் அன்புடன் இணைந்திருக்க வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தை எப்படி பட்டப் படிப்புக்கான வகுப்புக்களுக்குச் செல்ல முடியாதோ அதே போலத்தான் உயர்ந்த பிரேமைத் தத்துவத்தை உடனடியாக அடைய முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்து படிப்படியாக முன்னேற வேண்டும் உள் நோக்கித் தன் பார்வையைச் (நிவ்ருத்தி) செலுத்தத் தயாராகும் வரை. இந்த வெளிப்புற (ப்ரவ்ருத்தி) மார்க்கமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் ஆன்மீகப் பார்வையோடு அணுகுங்கள். சத்தியம். பிரேமை இவற்றைப் பின்பற்றிச் செய்வதைவிடச் சிறந்த ஆன்மீகப் பயிற்சி முறை வேறெதுவும் கிடையாது. சத்தியமும். பிரேமையும் இறைவனின் பெயர்கள். ஆகவே இவை இரண்டுமின்றி ஆன்மீக சாதனைகளை மேற் கொள்வதில் அர்த்தமில்லை. அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்தியுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment