Sunday, February 28, 2021

ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் அவதார ரகசியம்

அன்பின் வடிவங்ககளே, ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் அவதார ரகசியம் பற்றிய சில விபரங்களை இப்போது பார்ப்போம். கர்க பகாவதத்தில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் அவதாரம் பற்றி வியாச பெருமனுக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இடையில் நடைபெற்ற உரயாடல் மூலம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வியாச பகவான் சரஸ்வதி நதிக் கரையில் அமர்ந்தபடி துவாபர யுகம் முடிந்து பகவான் ஸ்ரீ கிருஷ்னர் தனது அவதார்த்தை முடித்துக்கொண்டபின் கலியுகம் பிறக்குமென்பதையிட்டும், கலியுகத்தில் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாவார்கள் என்றும் கவலையில் ஆழ்ந்து, கலியுகத்தில் வாழும் மக்களுக்காக்க இறைவன் அவதாரம் எடுக்கவேண்டுமென்று வியாசபகவான் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரது தியானத்த்தின் போது கலியுக ஆரம்பத்தில் நீர்வளம், நிலவளம் நிறைந்து உலகவாழ்க்கை பிரகாசமாக இருப்பதையும், காலம் செல்லச் செல்ல மனிதகுலத்தின் தவறான நடத்தையால் சனப்பெருக்கம் அதிகரித்து, உணவுக்கே பற்றாக்குறை ஏற்பட்டு’ மிருகங்களைக் கொன்று சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்படுவார்களென்றும், அதனால் மனிதருக்கு மிருக குணங்கள் ஏற்படவுள்ளதையும் வியாசர் அறிந்தார். உட்கொள்ளும் உணவுக்கேற்றபடியே மனிதனின் மனநிலையும் புத்தியும் மாறும் என்பதால் மிருகங்களைக் கொன்று உண்பதான்மூலம் கலிகால மனிதருக்கு மிருக குணங்கள் ஏற்படும், சாத்வீக உணவை உண்பதால் சத்வ குணமும், உயிர்களைக் கொன்று உண்பதால் மிருக குணமும் ஏற்படுப்போவதையும் உணர்ந்து வியாசபகவான் மிகவும் பயப்பட்டார். அதே வேளை கிருஷ்ணபவான் பகவத் கீதையை அருளிச் சென்றிருப்பதால் அதைப் படித்து மக்கள் நேர்மையாக வாழ்வர்களென நம்பினார். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, பகவத் கீதையைப்படிப்பதும் அதனைப் பின்பற்றுவதும் அருகப்போவதையும் அவர் தனது ஞான சக்தியுன் மூலம் உணர்ந்தார். உலகம் அனைத்தும் வளமாக வாழப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...