Saturday, February 6, 2021

இறைவன் பெயரைச் சொல்லியவாறு, சமுதாயத்தில் இறங்கிச் சேவை செய்யுங்கள்

அன்பின் அவதாரங்களே,எந்த ஒரு செயலைச் செய்வதானாலும், மற்றவருடைய நலனைக் கருத்தில் கொள்ளுங்கள். சுயநலமான வாழ்க்கை வாழாதீர்கள். அனைவருடைய நலனையும் கவனியுங்கள். தனிப் பட்ட பலன்களை மட்டும் எண்ணாதீர்கள். ஜபம், தியானம் போன்றவை சுயநல நோக்குடன் செய்யப் படுகின்றன. இதற்குப் பதில், இறைவன் பெயரைச் சொல்லியவாறு, சமுதாயத்தில் இறங்கிச் சேவை செய்யுங்கள். இதுவே உண்மையான சாதனையாக அமையும். நீங்கள் யாருக்குச் சேவை செய்தாலும், இறைவனுக்குச் செய்வதாக எண்ணிக் கொண்டு செய்யுங்கள். இதயத்தில் தயை நிரம்பியிருந்ததால் ஒரு உயிரற்ற சவம், ஒரு நோயாளி, வயது முதிர்ந்த ஒரு மனிதன் ஆகியவர்களைப் பார்த்ததுமே புத்தருக்கு ஞானம் புலப்பட்டு, அவரால் நிர்வாண நிலையை அடையமுடிந்தது. நீங்கள் எத்தனையோ சவங்களையும், வயது முதிர்ந்தோரையும், நோயாளிகளையும் பார்க்கிறீர்கள். ஆனால் உங்களில் பலரிடத்தில் அத்தகைய மனமாற்றம் ஏற்படாதது வருந்தத்தக்கது. துரதிஷ்டவசமாக, பலரின் இதயங்கள் கடினமான பாறைகளாக மாறிவிட்டிருக்கின்றன. அடுத்தவரின் துயரம் பலரின் இதயங்களைக் காயப்படுத்துவதில்லை. நிர்வாணம் அல்லது பந்தவிடுதலை அடைய வேண்டுமென்றால், அடுத்தவரது துயரத்துடன், தன்னையும் இணைத்துப் பார்த்து, அவர்களது துயர்களைக் களைய முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். உலகம் முழுவதும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...