ஓம் சிறி சாயி ராம்
பாரதப்போர் நடைபெற்ற இடத்தைத் தர்மஷேத்திரம் எனக் குறிப்பிட்டுள்ள பகவான், யாகங்கள் போன்ற பல புனிதமான சம்பவங்கள் அங்கு நடைபெற்றதால் அது தர்மஷேத்திரம் என்று பெயர் பெற்றதாகவும் கூறியுள்ளார்.
குரு வம்சத்தவரால் ஆட்சி செய்யப்பட்டதால் குருஷேத்திரம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாம் பிறக்கும்போது தீய தன்மைகள் இல்லாததால் நமது உடலும் தர்மஷேத்திரமே என்றும், நாட்கள் செல்லச்செல்ல கட்டுப்பாட்டை மீறி ஐம்புலன்களால் வழிநடத்தப்பட்டுத் தவறான பாதையில் மனமும் அதைத் தொடர்ந்து செல்வதால் பல தவறுகளில் உடலும் உள்ளமும் இட்டுச் செல்லப்பட்டு உடல் குருஷேத்திரமாக மாறுவதாகவும் பகவான் குறிப்பிட்டுள்ளார்.
மனித உடலைத் தேருக்கு ஒப்பிடும் பகவான், ஐம்புலன்களைக் குதிரைகளாகவும், தேரில் அமர்ந்திருக்கும் குருவே கிருஷ்ணபரமாத்மா என்றும், அவரே இவ்வுடலென்னும் தேரின் சாரதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேரின் சாரதியான எம்பிரானே நிலையற்ற மாயை நிறைந்த உலக வாழ்வான பிறப்பு இறப்பெனும் சுழலிலிருந்து நம்மைக் காத்து நாம் சென்றடையவேண்டிய இடமான இறைவனுடன் இரண்டறக் கலக்கச் செய்யும் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் பகவான் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஓம் சிறி சாயி ராம்.
No comments:
Post a Comment