Thursday, January 27, 2022

கீதை யாருக்காக உபதேசிக்கப்பட்டது.

ஓம் சிறி சாயி ராம்.

பகவத் கீதை பற்றிய தனது விளக்கத்தின் ஆரம்பத்தில்   கீதோபதேசம் யாருக்காக உபதேசிக்கப்பட்டது என்பதைப்பற்றி  நமது சாயிபகவான் விளக்கமளித்துள்ளார்..

பகவான் பகவத் கீதையைப் பற்றி விளக்கும் போது உபநிடதங்களைப் பசுவுக்கும், கீதையை உபநிடதத்திலிருந்து கறக்கப்பட்ட பாலுக்கும், அருச்சுனனைப் பசுவிலிருந்து பாலைக்கறக்க உதவும் கன்றுக்கும், பாலைக்கறக்கும் கோபாலனாகக் கண்ணபிரானையும் ஒப்பிடுகிறார். அவ்வாறு கறக்கப்படும் பாலான கீதை, அஞ்ஞானத்தில் மூழ்கிப் பிறவிப் பெருங்கடலில் தத்தளிப்போரைப் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து மீட்சிபெறப் பயன்படுத்தப்படவேண்டுமென்றும் கூறுகிறார். 
மேலும் அருச்சுனன் என்பதன் பொருள் தூய்மை, வெண்மை என்றும் சொல்கிறார்.
பகவத் கீதையைப்படிப்போர் மனத்தூய்மையுடனும் பக்திசிரத்தையுடனும் படித்து இறைவனை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

தர்மஷேத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஷேத்திரமென்பதன் உட்பொருள் உடல் என்றும், குழந்தை பிறக்கும்போது தூய மனதுடன் படைக்கப் படுவதால் அந்நிலையில் அவ்வுடலே தர்மஷேத்திரம் என்றும் கூறுகிறார்.

ஓம் சிறி சாயி ராம்.
, ,

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...