Wednesday, January 26, 2022

பிதாமகர் பீஷ்மரின் ஏமாற்றம்

ஓம் சிறி சாயி ராம்.

அருச்சுனன் காண்டீபத்தை நழுவவிட்டுத் தேர்த்தட்டில் உட்கார்ந்து விட்டதையும் கிருஷ்ணபகவான் அருச்சுனனுடன் பேச ஆரம்பித்ததையும் கண்ட  இருதரப்புப் படையினருக்கும் உண்மைநிலை பரியவில்லை.

அருச்சுனன் தனது மாபெரும் படையைக் கண்டு பயந்து  யுத்தத்திலிருந்து பின்வாங்கி விட்டதாகத் துரியோதனன் நினைத்தான். வெற்றி தனக்கேயென்ற கற்பனையில் மிதந்தான்.

பகவானின் பக்தனான சஞ்சயன், அவரருளால் அஸ்தினாபுரத்தில் இருந்தபடியே நிகழவிருந்த யுத்தத்தை க் காணும் சக்தியைப் பெற்றுப் பிறவிக்குருடனனான திருதராஷ்டிரனுக்குப் போர்க்களத்தில் நிகழபவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தான்.
அருச்சுனன் காண்டீபத்தை வீசியெறிந்து விட்டதையும் போர்புரிய‌மறுப்பதையும் சஞ்சயன் கூறக்கேட்ட‌ திருதராஷ்டிரன் தனது மகன் துரியோதனன் வெற்றிபெற்று விட்டதாக ‌எண்ணி மகிழ்ந்தான்.

களத்தில் கௌரவ சேனையின் சேனாதிபதியான பீஷ்மரோ, அருச்சுனனுக்குக்
 கண்ணபிரான் கூறுவதில் சில வார்த்தைகளாவது தனது செவிகளில் விழுந்து, அதன்மூலம் தனது பிறவிப்பயன் முழுமையடையாதா என‌ எம்பெருமானை‌ வேண்டிநின்றார்.
தர்மத்துக்கும்  அதர்மத்துக்கும் இடையில் நடைபெறும் யுத்தத்தில் அதர்மத்துக்குத் தலைமை தங்கியுள்ள பீஷ்மருக்கு இப்பாக்கியம் கிட்டவில்லை.

ஓம் சிறி சாயி ராம்.


No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...