குருச்சேத்திரம் எனக் குறிப்பிடப்படும் தர்மசேத்திரத்தில் கௌரவர் தரப்பில் யுத்தம் புரியத் தயாராக 11 அக்குறோணி எண்ணிக்கை கொண்ட சேனை அணிவகுத்து நின்றது. பாணடவர்களின் பக்கம் சண்டைபரியத் தயார் நிலையில் 7 அக்குரோணிச் சேனை தயார் நிலையில் இருந்தது. இரு தரப்பினரும் யுத்தத்தை ஆரம்பிக்க மிக முனைப்புடன் நின்றனர்.
மொத்தத்தில் சொல்வதானால் இருதரப்பிலும் 18 அக்குரோணிச் சேனைகள் இறுதி யுத்தத்துக்கான
பரபரப்புடன் நின்றிருந்தனர்.
கௌரவ சேனைகளுக்கு பீஷ்மர் தலைமை தாங்குவதைத் தனது கடமையாகக் கொண்டிருந்தார்.
துரியோதனனும் தம்பிமாரும் இப் போரில் வெற்றி பெற்று அஸ்தினாபுரம் மற்றும் இந்திரப் பிரஸ்தம் என்பவற்றைத் தொடர்ந்தும் தாங்களே ஆட்சி புரிய வேண்டும் என்ற வெறியுடன் போர்முனையில் இருந்தனர்.
பாண்டவர் தரப்பினர் முறைப்படி தமக்குச் சேர வேண்டிய அரசாட்சியை மீண்டும் பெறவும் தமது சபதங்களை நிறைவேற்றவும் துடிப்புடன் நின்றனர்.
கண்ணபிரான் தர்மத்தின் பக்கம் இருந்தார்.
இந்தச் சூழ்நிலையில்தான் அருச்சுனன் தன் நிலைகுலைந்து காண்டீபத்தை நழுவவிட்டுத் தேர்த்தட்டில் உடகார்நாதிருநதான்.
இந்தப் போர் தேவையற்றது எனவும் இரத்த உறவினர்கள் பாட்டன் மற்றும் குரு போன்றோரைக் கொல்வதன் மூலம் நாட்டைத் திரும்பப் பெற்று அரசாள்வதைவிடக் காட்டிலும் குகைகளலும் கனிகளையும் கிழங்குகளையும் உணண்டு சன்னியாசியாக வாழ்வதே மேலானது என்றும் கிருஷ்ண பகவானிடம் கூறினான்.
இந்த நிலையில்தான் கீதோபதேசத்தை கிருஷ்ண பகவான் ஆரம்பித்தார்.
பகவத் கீதையில் சுமார் 700க்கு மேற்பட்ட சுலோகங்கள் உள்ளன. இவை அனைத்தையும் அருச்சுனனுக்கு உபதேசித்து முடிக்கக் குறைந்தது 5 முதல் 6 மணிநேரம் தேவைப்படும்.
யுத்த. சன்னத்தராக நின்ற இருபுறத்துச் சேனைகளும் அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்திருக்க முடியாது
.
கலியுக அவதாரமான நமது சாயிநாதன்தான் துவாபர யுகத்தில் கண்ணபிரானாகத் திரு அவதாரம் செய்து கீதோபதேசம் செய்தவர்.
தான் கீதோபதேசத்தை சுமார் 4 நிமிடங்களே நிகழ்த்தியதாகவும், அருச்சுனனைத் தனது கடமையைச் செய்யுமாறே கூறியதாகவும் 700 சுலோகங்களையும் மகாவிஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் வியாசபகவானே விரிவாக எழுதியதாகவூம் சாயிக்கண்ணனே திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
ஓம் சிறி சாயி ராம்.
No comments:
Post a Comment