Saturday, January 22, 2022

பகவான் நமக்களித்த கடமை

ஓம் சிறி சாயி ராம்.

பகவான் தனது அருளுரைகளின் போதும் அவர் அருளிய கீதை வாகினியிலும் மனிதர்களாகிய நமது கடமை என்னவென்றும், நமக்கு எம்பெருமான் எதற்காக மனிதப்பிறவியை வழங்கியுள்ளார் என்பதையும், பகவத்கீதையின் சாரத்தைக் கல்விமான்கள் மட்டுமன்றிப் பாமரர்களும் புரிந்து கொள்ளும் விதமாக விளக்கமளித்துளளார்.

துவாபரயுகத்தில் கண்ணபிரானாக அவதரித்து அருச்சுனனுக்கு ‌கீதோபதேசம் அருளியவரல்லவா நமது கலியுகக் கண்ணன் சாயிநாதன்.

 பிறக்கும் உயிரினங்கள் அனைத்தும் என்றாவது ஒருநாள் மரணமடைந்தே ஆகவேண்டும். எனவே பூமியில் பிறந்த மனிதனும் என்றோ ஒருநாள் இறந்தே ஆகவேண்டும்.

மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் இடையேயுள்ள வேற்றுமை என்னவென்றால் மனிதனுக்கு மாத்திரமே, தான் யாரென உணரும் சக்தியுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துமே இறைவனால்தான் படைக்கப்பட்டவை.
அதேவேளை நமது கலியுகக் கண்ணனான சாயிநாதன், தான் படைத்த அனைத்திலும் சிறந்த படைப்பு மனிதன்தான் என்று கூறுகிறார்.
எனவே இறைவனிடமிருந்து தோன்றிய மனிதன் மீண்டும் இறைவனுடனேயே‌ சென்று சேரவேண்டுமென்று பகவான் கூறுகிறார். அதுமட்டுமன்றி மனிதன் பிறப்பது மீண்டுமொரு பிறப்பைத் தவிர்ப்பதற்கேயென்றும், மரணமென்பது மீண்டுமொருமுறை பிறந்து இறப்பதைத் தவிர்ப்பதற்கேயென்றும் நமது சாயிநாதன் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

ஓம் சிறி சாயி ராம்.
(இதன் தொடர்ச்சி நாளை)
 

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...