நமது சாயி நாதனின் அருள் மொழிக்கிணங்க "எனது கடமை" என்பதே பகவத் கீதையின் சாரமாகும்.
பெங்களூரில் வைற் ஃபீல்ட் என்னுமிடத்தில் நமது பகவானின் பிருந்தாவனம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
அங்கு பிருந்தாவனம் உயர்கல்விப்பீடத்தில் கல்விபயின்று பகவானருளமுதத்தைப் பருகும் மாணவர்கள் சாயிபகவானுடன் உரையாடி மகிழும் வாய்ப்பு நிகழும்.
வைற் ஃபீல்டில் பக்தர்களுக்குத் தரிசனம் அளித்தபின் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் தனது தனிப்பட்ட வசிப்பிடமான திரயீ என்னுமிடத்தில் பகவான் கலந்துரையாடுவது வழக்கம்.
மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர் களுடன் நடைபெறும் இவ்வுரையாடலின்போது மாணவர்களின் தனிப்பட்ட விடயங்கள் முதல் மிக அரிதான ஆன்மீக விடயங்கள் வரை விரிவாக எம்பெருமான் உரையாடுவார்.
அப்போது, பகவத்கீதையின் இறுதிச் சொல் 'மம' என்றும், முதலாவது சொல் 'தர்ம' என்றும் விளக்கிய பகவான், இவ்விரு சொற்களையும் சேர்த்தால் வரும் சோற்றொடர் சுலோகத்தில் 'மம தர்ம' என்றும், அதன் தமிழ் அர்த்தம்் 'எனது கடமை' என்றும், கீதோபதேசத்தின் முழுப் பொருளும் இச்சொற்தொடரில் அடங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதாவது மனிதப்பிறவியெடுத்த அனைவரது கடமையும் பகவத் கீதையின் இச்சொற் தொடரில் அடங்கிய இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஓம் சிறி சாயி ராம்.
No comments:
Post a Comment