அருச்சுனனின் உள்ளம் தடுமாறுவதை கண்ணபிரான் நன்கு அறிந்திருந்தார். தடுமாற்றத்தை உருவாக்கியவரே பரந்தாமன் அல்லவா.
எம்பெருமான் அருச்சுனனின் ரதத்தை துரோணர் மற்றும் பீஷ்மரின் ரதங்களின் முன் நிறுத்தினார்.
அவர் வேண்டுமென்றே துரியோதனனின் ரதத்தின் முன் செல்லவில்ல்லை.
துரோணாச்சாரியர் மற்றும்் பீஷ்மர் எதிரணியில் நிற்பதையும தனது மரியாதைக்குரிய பாட்டனார் மற்றும் குருதேவரையும் உறவினரையும் கொல்லவேண்டியேற்பட்டதை எண்ணி அருச்சுனன தடுமாறினான்.
இந்த யுத்தத்தின் மூலம் உறவினர்களை அழித்து வெற்றி பெற்று நாட்டை ஆள வேண்டியுள்ளதை எண்ணித் தடுமாறினான் அருச்சுனன.
அவனது வில்லான காண்டீபம் அவனது கையிலிருந்து நழுவியது. கால்கள் நிற்கும் சக்தியை இழந்து தேர்த்தட்டில் உட்கார்ந்து விட்டான்.
அங்குதான் தனது கடமை எது என்பதை அருச்சுனன் மறந்துவிட்டான்.
ஓம் சிறி சாயி ராம்.
No comments:
Post a Comment