Friday, January 28, 2022

ஹம்ச காயத்திரியும் நாமஸ்மரணமும்.

ஓம் சிறி சாயி ராம்..

குழந்தை பிறக்கும் போது எவ்வித தீய குணங்களுமின்றியே பிறக்கிறது. பிறந்த குழந்தை குவா குவா என்று அழுவதாக நாம் சொல்லிக் கொள்கிறோம்.
ஆனால் குழந்தை பிறந்தவுடன் கோகம், கோகம் என்று அழுவதாக எம்பெருமான் கூறுகிறார்.

அதாவது குழந்தை நான் யார், நான் யார் என்றே அழுகிறது.

அதன் பின் சோகம் சோகம் என்றே சுவாசிக்க ஆரம்பிக்கிறது.
அதாவது " நான் இறைவன், நான் இறைவன்" என்றே ஒவ்வொரு சுவாசத்தின் போதும் தன்னையறியாமலேயே சொல்கிறது.
நாம் அனைவருமே நமது ஒவ்வொரு சுவாசத்தின் போதும் நம்மையறியாமலே நான் கடவுள், நான் கடவுள் எனறு சொல்லிக் கொண்டிருப்பதாக பகவான் சொல்கிறார்.

 சோகம் என்பது ஹம்ச காயத்திரி மந்திரம். நமது உட்சுவாசத்தின் போது சோ என்றும் வெளிச் சுவாசத்தின் போது ஹம்் என்றும் நம்மையறியாமலேயே நம்மால் உச்சரிக்கப்படுவதாகவும் பகவான் கூறுகிறார்.

எனவே ஒவ்வொரு சுவாசத்தின் போதும் நாம் சோ....ஹம்.... என்ற உணர்வுடன் வாழவேண்டுமென்று நமது சாயிநாதன் அருளுரைகளின் போது மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

எனவே பிறந்த நேரம் முதலே நாமும் இறைவனும் ஒருவரே என்பதை அறிந்தே இருக்கிறோம். ஆனால் வளர்ந்த பின் மாயையில் சிக்குண்டு, நிலையற்ற புற உலகக் கவர்ச்சி களில் சிக்குண்டு நாம் இறைவனிலிருந்து வேறுபட்ட வர்கள் எனும் உண்மையற்ற நிலையை நம்ப ஆரம்பிக்கிறோம்.

இக் கலியுகத்தில் மாயையிலிருந்து விடுபட்டு நாம் அனைவரும் இறைவனிலிருந்து வேறுபட்டவர்களல்ல, நாம் இறைவனின் வடிவங்களே  என்பதை உணர்வதற்கு நாமஸ்மரணமே இலகுவான ஒரேவழியென பகவான் கூறுகிறார்.

ஓம் சிறி சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...