Tuesday, March 2, 2021

கர்க பகாவதத்தின் தொடர்ச்சி

அன்பின் அவதாரங்களே, (கர்க பகாவதத்தின் தொடர்ச்சி)நாம் அனைவரும் போன ஜென்மத்தில் நமக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை என்ற பரீட்சையில் தேறாமல் தோல்வியடைந்ததால் மீண்டும் பிறவியெடுத்துள்ளோம். போன ஜென்மத்தின் நிறைவேறாத ஆசைதான் இப்பிறவியின் காரணம். நாம் புரியும் செயல் மூலம் மாத்திரமன்றி மனதால் தவறாக நினைத்தலும் கர்மாதான் என்று நமது பகவான் கூறுகிறார். வியாச பகவானைத் திருப்திப்படுத்த அவர் முன் கிருஷ்ணபகவான் தோன்றினார். கலியுகத்தில் மக்களைக்காக்கத் தான் அவதாரம் எடுக்கவுள்ளதாகவும் தனது அவதாரத்தின் முன் ஒருவரை அனுப்புவுள்ளதாகவும்கூறிய ஸ்ரீகிருஷ்ணபகவான் தான் அனுப்பவுள்ளவர் 83 வயதுவரை வாழ்வாரென்றும் வியாச மகரிஷியிடம் கூறினார். ஆனால் அவரது போதனைகளை அக்காலத்தில் யாரும் ஒத்துக்கொளாமாட்டார்கள் என்றும் அவர் மறைந்து பலவருடங்களின் பின்தான் மக்கள் அவரது போதனைகளைப் புரிந்து பின்பற்றுவர் என்றும் அவர்தான் கௌதம புத்தர் என்றும் கூறினார். அதற்கு எட்டு நூற்றாண்டுகளின் பின் இன்னொருவரை அனுப்பவுள்ளதாகவும். அவர் வேதத்தையும் நாமஸ்மரணையையும் பரப்புவாரென்றும், பஜகோவிந்தம் என்னும் நூலை அவர் எழுதுவாரென்றும், அவர் தான் ஆதி சங்கரர் என்றும் கிருஷ்ணபகவான்கூறினார். ஆனால் ஆதி சங்கரர் 32 வருடங்கள் தான் இவ்வுலகில் வாழ்வாரென்றும் அவருக்குக் குறைந்த வயது என்பது தனது சங்கல்பம் என்றும் கூறிய கிருஷ்ணபகவான் நடக்கும் அனைத்தும் இறைவனின் சங்கல்பம் என அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். நாமத்தின்மூலம் தன்னைக் கட்டிப்போடுவது இலகு என்று நமது பகவானும் கூறுகிறார். அதன் பின் பாரதத்தை 4 பிரிவுகளாகப் பிரித்து எங்கும் இறைவன் நாமத்தைப் பரப்ப மகான்களை அனுப்பவுள்ளதாகவும் அதன்பின் தானேனே இவ்வுலகில் மனித அவதாரமெடுக்கவுள்ளதாகவும் கிருஷ்ணபகவான் வியாச பகவானிடம் கூறினார். இது சுமார் 5,000 வருடங்களின் முன் கலியுகம் பிறந்த வேளையில் நடைபெற்ற நிகழ்ச்சியாகும். உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரர்த்திப்போம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...