Thursday, March 4, 2021
ஓம் ஸ்ரீ பகவான் சத்திய சாயி பாபாய நமஹ
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அஷ்டோத்திர நாமாவளியின் முதலாவது சுலோகம்:
ஓம் ஸ்ரீ பகவான் சத்திய சாயி பாபாய நமஹ
இதன் பொருள்: பகவான் ஸ்ரீ சத்யசாயி பபாவின் தாய் ஈஸ்வராம்பா இரண்டு பெண்குழந்தைகளையும் ஒரு ஆண்மகனையும் பெற்றிருந்தார். தனக்கு இன்னொரு ஆண் மகன் வேண்டுமெனச் சத்தியநாராயண நோன்பில் ஈடுபட்டிருந்தார். அவரது கோரிக்கையை நிறைவேற்றி அவர் கேட்ட அந்த வரத்தை இறைவன் கொடுத்தார். ஆன்மீக முன்னேற்றத்துக்கு முதலாவதாகத் தேவைப்படுவது சத்தியம் என்று பாபா கூறுகிறார். வாழ்க்கையில் நல்லபடி வாழ நாம் உண்மையையே பின்பற்ற வேண்டும். அந்த உண்மை உருப்பெற்று விளங்குபவரே சத்திய சாயி பாபா. பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா உண்மையையே சத்தியமாகக் கொண்டு சயனித்திருந்தார். 1926 அம் ஆண்டு நவம்பர் திங்கள் 23 ஆம் நாள் கார்த்திகைச் சோமவாரம் திருவாதிரை நட்சத்திரத்திலே அன்னை ஈஸ்வராம்பாவின் பிரார்த்தனைக்கு இரங்கி அவரின் திருமகனாக அவதரித்தார். தனக்கு ஆண்மகவு வேண்டும் என்று அன்னை ஈஸ்வராம்பா சத்திய நாராயண பூஜை செய்ததன் பலனாகப் பிறந்ததால் அக்குழந்தை சத்திய நாராயணன் என்றே அழைக்கப்பட்டது. பிறந்த குழந்தையைக் கீழே கிடத்திய போது, அத்துணி விசித்திரமாக மேலும் கீழும் நாகர்வதைக்கண்ட அந்தக் கிராமப் பெண்கள் என்ன என்று பார்த்தபோது, துணிக்குக்கீழே ஒரு பாம்பு மண்டலமிட்டுப் படுத்திருப்பதை அவதானித்தனர். சத்திய சொரூபமான நாராயணனே அவதரித்திருந்தார். அனந்த சயனனுக்கு ஆதிசெஷனே படுக்கையாக அமைந்தார். ஓ சாயி சத்தியத்தில் சயனித்திருப்பவனே, உமக்கு எமது வணக்கம்.
உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment