Wednesday, March 3, 2021
கர்க்கபுராணத்தின் இறுதிப்பகுதி
அன்பின் திருவுருவங்களே, தனது கலியுக அவதாரம் மோஹினி அவதாரம் போல் மிக அழகாகத் தேஜோமயமாகத் தங்கம்போன்று இருக்குமென்றும், தான் சூரியன் போல் பிரகாசிப்பேன் என்றும் ஸ்ரீ க்ரிஷ்ணர் கூறினார். கலியுக அவதாரத்தின்போதான அடையளங்கள் பற்றி வியாச பகவான் கேட்டபோது, தனது கால் நகங்களும் உதடுகளும் எப்பொழுதும் மென்சிவப்பாக இருக்கும், கைகளும் கால்களும் ஒருபெண்ணுடையதைப்போன்று மெல்லியதாக இருக்கும், இடை மெலிந்தும் கழுத்து தீர்க்கமானதாகவும் இருக்கும், கழுத்துக்கும் உடலுக்கும் விகிதப் பொருத்தமற்று இருக்குமென்றும் தெரிவித்த பகவான், தனது மார்பில் மஹாலக்ஷ்மி பார்பதற்குரியதாக இருக்கும் ஸ்ரீவத்ச மச்சம் இடது கன்னத்தில் இருக்குமென்றும், தனது ஊடுருவிப்பர்க்கும் கண்களின் மூலம் ஒருவரது முற் பிறவிகள், இப்பிறவி, எதிகாலப் பிறவிகள் அல்லது தன்னுடன் இணைதுக்கொள்ளல் போன்ற அனைத்தையும் பார்க்கக்க்கூடிய திறனுடன் இருக்கும், பார்வை multidimensional ஆக இருக்கும், தன்னால் பார்க்கப்படும் அனைவரும் புனிதமாக்கப்படுவார்கள், தரிசன நேரத்தில் யாரையாவது பார்த்துத் தான் தனது புருவத்தை உயர்த்தினால் அவர்கள் நரகத்துக்குச் செல்லவதற்குரிய கொடிய பாவங்கள் செய்திருந்தாலும் அவர்கள் சொர்க்கத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், தான் ஒருவரைப் பார்த்துச் சிரித்தால் அவரது துன்பங்கள் அனைத்தும் பறந்தோடிவிடும் என்றும், ராமாவதரம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் முடிதரித்தத்து போலன்றித் தனது கேசமே முடியணிந்தது போலிருக்கும் என்றும் தனது உருவத்தின் அழகு, தனது கீதம், தனது லீலைகள் மற்றும் ஒரே நேரத்தில் பலருக்குப் பல இடங்களில் அவர்களது இஷ்ட தெய்வங்கள்போல் காட்சியளிப்பது, ஆபத்துக்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் அதிசயமான விதத்தில் காப்பாற்றுவதும் கையசைப்பின் மூலம் பல்வேறு பொருட்களை உருவாக்குதல், லிங்கோத்பவம், கனவில் வந்து சத்திரசிகிச்சை பண்ணுதல் போன்றவையும், (பகவான் இவற்றைத் தனது விசிடிங்காட் எனக் குறிப்பிடுவார்), உலக மொழிகள் அனைதையும் பேசித் தனது அன்பால் கவர்தல் ஆகிய முறைகள் மூலம் உலக மக்கள் அனைவரையும் நல்வழிப்படுத்துவேனென்றும் கூறினார். உலக மக்கள் மீது எவ்வித எதிர்பார்ப்புமின்றிய அன்பு, அதாவது பரமப்பிரேமையுடன் தான் செயல்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கௌஸ்துபமாலை பற்றி வியாச பகவான் கேட்டபோது அம்மாலைக்குப் பதிலாகத் தான் இரண்டு அங்கி அணிந்திருப்பதாகவும், (ஒன்று பட்டு வேஷ்டி மற்றது சுவாமியின் அங்கி) மகரந்தம் போன்ற மஞ்சள் நிறமான அங்கி அணிந்திருப்பதாகவும், அது சாதாரண அங்கியல்லாமல், அது தெய்வீமகமானதாக இருக்குமென்றும், தனது உடல் சாதாரண சதையாலும் ரத்தத்தாலும் ஆனதாக இருக்காமல் ககன சரீரமாக இருக்குமென்றும், அவரது பட்டாடையின் ஒரு நூலாவது தங்களுக்குக் கிடைக்குமா என உலக மக்கள் போட்டிபோடுவார்களென்றும் கூறியதுடன் தனது பெயர் பாபா, சாயி என்று இரண்டு எழுத்துக்களைக் கொண்டதாக இருக்குமென்றும் வியாச முனிவரிடம் கிருஸ்ஹ்ணபகவான் கூறினார்.
மேலும் தனது கலியுக அவதாரத்தின்போது தனது சங்கல்பமின்றி எவரும் தன்னிடம் வரமுடியாது என்றும் தனது கலியுக அவதார ரூபத்தைக் கனவில் கூடக் காண முடியாதென்றும் தான் அவதரித்திருக்கும் இடத்தில்கூடத் தனது சங்கல்பமின்றி யாரும் கால் வைக்கமுடியாதென்றும் தெரிவித்தார். கர்க்கபுராணம் இத்துடன் முடிவடைகிறது. உலகம் அனைத்தும் நலமாக இருக்கப் பிரார்த்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment