Saturday, March 6, 2021

ஆன்மீகத்தில் முன்னேறவேண்டுமானால் நாம் புலன்களைக் கட்டுப்படுத்தவேண்டியது அவசியம்.

அன்பின் வடிவங்களே, திருச்சி அருகில் பகவானின் அருட்பிரசங்கமொன்று நடைபெற்றது. நிறைந்திருந்த் பக்தர்கள் மத்தியில் பகவானின் தெவீகத் தன்மையைச் சந்தேகிக்கும் ஒருவரும் அங்கிருந்தார். மக்கள் மதியிலிருந்த ஊமைப்பையனொருவனை அழைத்த பகவான், மைக்குக்கு எதிரே நிற்குமாறு கூறி உன்பெயரென்ன என்று கேட்டார். எல்லோரது எதிரிலும் வாய்திறந்து அந்த ஊமைப் பையன் தனது பெயரைக் கூறினான். சந்தேகப்பட்ட மனிதர் வெட்கத்தால் தலை குனிந்தார். நல்லதையே பார்க்கவேண்டும். கெட்டதை ஒருபொழுதும் பார்க்கக் கூடாது. அப்பொழுது தான் நமது கண்கள் புனிதத் தன்மையை அடைகிறது. இதனால் இறைவனையே காணக்கூடிய திவ்வியத் தன்மையை அடையலாம். ஆன்மீகத்தில் முன்னேறவேண்டுமானால் நாம் புலன்களைக் கட்டுப்படுத்தவேண்டியது அவசியம். இன்றைய மனிதன் தன் தேகத்தின் மீதும் நிரந்தரமற்ற மற்ற விடயங்கள் மீதும் பற்று வைத்துத் தனக்குள் உறைந்திருக்கும் தெய்வீகத்தை மறக்கின்றான். ஆன்மீகதுக்கு வெளியேயுள்ளவற்றின் மேல் பற்று வைப்பதினால் எதையோஅடைந்துவிட்டதாக நினைக்கிறான். முதலில் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். சப்தம், தொடுதல், சுவை, பார்வை, நுகர்தல் என்பவற்றை நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும். எந்தத் தீய விடயங்களையும் கேட்க முயற்சிக்கக்கூடாது. அம்மதிரியான சூழ்நிலை ஏற்படும் போது அங்கிருந்து விலகிச் சென்றுவிடவேண்டும், தீய விடயங்களைக் கேட்கக் கூடாது, தீய விடயங்களைப் பார்க்கக் கூடாது, தீயவிடயங்களைப் பேசக்கூடாது. இவ்வகையான தீய பழக்ககளிலிருந்து விலகியிருக்க முயற்சிக்க வேண்டும். இதுவே நமது ஆன்மீக சாதனைக்கு வழி செய்கிறது. மகரிஷிகள் வனத்துக்குச் சென்று தமது புலன்களைக் கட்டுப்படுத்தியது எதற்காக. புலன்களைக் கட்டுப்படுத்துவதே உண்மையான ஆன்மீக சாதனையாகும். புலன்களைக் கட்டுப்படுத்தாத எந்த ஆன்மீக சாதனையும் பயனற்றது. தகாத வார்த்தைகளைப் பேசுவதை விட இறைவனின் தெய்வீக நாமங்களைக் கூறுவதே சிறந்தது. நாம் புலன்களைப் பயன்படுத்திப் பல தவறான காரியங்களைச் செய்கிறோம். இதை நாம் புறக் கண்களால் காண இயலாது. கண்களுக்குத் தெரியாத இந்தப் புலன்களால் நாம் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். கண்களால் காணமுடியாதது எதுவோ அது செய்கைகளின் பலன்களை அளிக்கிறது. கண்களால் காணாமுடியாவிட்டலும் இவற்றின் பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும். அன்பின் வடிவங்களே, மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் புலன்களே வாழ்க்கையாகிறது. புலன்களை நல்வழியில் செலுத்தினால் வாழ்க்கை ஆனந்தமாக அமைகிறது. அமைதியான வாழ்க்கை வாழப் புலன்களைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும். தீய வார்த்தைகளைத் தவிர்ப்பது மட்டுமின்றி, அமைதியாகவும் மெதுவாகவும் பேசவேண்டும். நமது பேச்சு மிருதுவாகவும் இனிமையாகவும் இருக்கவேண்டும். இதுபோன்றே எப்பொழுதும் பேசவேண்டும். வார்த்தைகளில் புனிதத் தன்மை இருக்க வேண்டும். புனித வார்த்தைகளை பயன்படுத்தியே பலர் புத்தகங்களையும் பாடல்களையும் எழுதியுள்ளனர். வால்மீகி, வியாசர், போத்தனா போன்றோர் பல புனித நூல்களை இயற்றியதால் இவர்களின் வாழ்க்கை புனிதமாகியது. இவர்களைப் பின்பற்றுவதன் மூலம் நமது வாழ்க்கையும் புனிதமடைகிறது. பல சமயங்களில் தேவையற்ற புத்தகங்களைக்கூடப் படிக்கிறோம். இதுவும் மிகத் தவறானது. எதைப் பார்த்தாலும், பேசினாலும், படித்தாலும், எழுதினாலும், செய்தாலும் அவை நல்லதாகவே இருக்க வேண்டும். முடிந்தவரை என்டத் தவறும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மனிதனில் மறைந்திருக்கும் தெய்வீகம் புலன்களில் உள்ளது. புலன்களின் மூலமாகவே நாம் தெய்வீகத்தை அடையமுடியும். இறைவனை நம் கண்களால் காணமுடியும். நாமும் தெய்வீகமாகவே மாறலாம். உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...