Monday, March 1, 2021

பகாவதத்தைப் பக்தியோடு கேட்பவர்கள், சொல்பவர்கள், படிப்பவர்கள் இறைவளி நடப்பர்

அன்பின் அவதாரங்களே, கலியுகத்தில் சத்தியத்துக்கு மதிப்பற்றுப் போவதையும் பொய்யைத் திரும்பத்திருமபச் சொல்வதன்மூலம் அதையே உண்மையென மனிதகுலத்தை நம்பவைக்கபடவுள்ளதையும் தமது ஞானதிருஷ்டியினால் அறிந்து வியாசர் மிக வேதனைப்பட்டார். வேதத்தை மனிதர்கள் பாராயணம் செய்யாமமையினால்தான் பல வித அகிம்சையற்ற செயல்களில் கலிகால மனிதர்கள் ஈடுபடவுள்ளதையும் மிருக வதை மூலம் உணவைப் பெறவுள்ளதையும் அவர் உணர்ந்தார். தினமும் சிறிதளவாவது வேதம் வீடுகளில் ஒலிக்கவேண்டிய நிலையில் ஏன் வேதத்தை மக்கள் சொல்லப்போவதில்லை என்று அவர் ஆராய்ந்தபோது வேதம் கடல்போல் மிகப் பெரியதென்பதை உணர்ந்தார். அதனை இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்கு வேதங்களாகப் பிரித்தார். அவையும் மிகப் பெரிதாக இருந்ததால், அதனை மேலும் பல சூத்திரங்களாகப் பிரித்தார். அதைக்கூட கலிகால மனிதர்கள் பாராயணம் செய்யப்போவதில்லை என்று உணர்ந்த வியாசர், திருப்தியுறாமல் தனது மானசீகக் குருவான நாரதரை நோக்கித் தவமிருந்தார். அவருக்குத் தரிசனமளித்த நாரதர், கிருஷ்ணபகவானின் லீலைகளை வியாசர் எழுதாமல் மஹா பாரத்தை எழுதியதைக் குறிப்பிட்டுப் பகாவதத்தை எழுதும்படி கூறினார். அதன் மூலம் கலியுக மனிதர்களுக்கு நிம்மதிகிடைக்கும் என்றும் கூறினார். ப, க, வ, த, மு என்ற அட்சரங்களைக் கொண்ட பகவதத்தில், ப என்னும் அட்சரம் பக்தியையும், க என்னும் அட்சரம் கல்வி அதாவது ஞானம் என்பதையும், வ என்னும் அட்சரம் வைராக்கியத்தையும், த என்னும் அட்சரம் தத்துவத்தையும், மு என்னும் அட்சரம் முக்தியயும் குறிப்பதாகும் என்று கூறியதுடன், பகாவதத்தைப் பக்தியோடும், ஞானத்தோடும், வைராக்கியத்தோடும் கேட்பவர்கள், சொல்பவர்கள், படிப்பவர்கள் ஆகியோர் தத்துவம் புரிந்து இறைவளி நடப்பர் என்றும் கூறினார். இதனை நமது சுவாமியும் அழகாக் கூறுகிறார். உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்திப்போம். (இதன் மிகுதியை நாளை தொடர்வோம்)

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...