ஒரு நாள் இரவு மாலை உணவை முடித்தபின் பகவான் வழமைபோல் தனது தனியறையில் அன்று தரிசனத்தின்போது பக்தர்கள் கொடுத்த கடிதங்களைப் படித்துக்கொண்டிருந்தார்.
அவரின் முன்னால் இரண்டு மூத்தபக்தர்கள் உடகார்ந்திருந்தனர். பகவான் படுக்கையில் படுத்து ஓய்வெடுக்கும்லரை பகவானுடன் இருந்து பகவானுக்கு இயன்ற சேவைகளைச் செய்து இறுதியில் பாதநமஸ்காரம் பெற்றுச் செல்வது அவர்களது வழக்கம். சில வேளைகளில் பகவான் அவர்களுடன் உரையாடும் பாக்கியமும் ஆவர்களுக்குக் கிடைப்பதுண்டு. எனவே பகவானின் திருவடிவத்தை ஆனந்தத்துடன் பார்த்து அனுபவித்துகக கொண்டிருந்தனர்.
அன்று பக்தர்களின் கோரிக்கைக் கடிதங்கள் முழுவதையும் படிக்காமல் சிலவற்றை மேலோட்டமாகப் பார்த்தபடி தனது செய்கைகளின் மூலம் தமது அதிருப்தியை பகவான் வெளியிட்டிருக்கிறார். தனது அறையினுள் இங்குமங்கும் நடந்தார்.
இரண்டு பக்தர்களும் பாத நமஸ்காரத்தை எதிராபார்த்துப் பகவானின் பின்னேயே நகர்ந்துகொண்டிருந்தனர். திடீரெனத் தனது படுக்கையில் அமர்ந்த பகவான்
"நான் இப் பூவலகுக்கு வந்ததன் நோக்கம் எவருக்குமே புரியவில்லை. பல்கலைக்கழகங்களையும் வேறுபல கல்விநிறுவனங்களையும், மருத்துவ மனைகளையும், நீர்வினியோகத் திட்டங்களையும் மற்றும் கிராம சேவை போன்றவிடயங்களையும் உருவாக்க நான் தெய்வலோகத்திலிருந்து பூவுலகுக்கு வரவில்லை.
என்னால் பெறற்கரிய மனிதப்பிறவி அளிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இந்த அரிய பிறவியைப் பயன்படுத்தி மீண்டும் பிறப்பு இறப்பற்ற தெய்வீக நிலையடைந்து என்னுடன் இரண்டறக்கலந்து என்னில் ஐக்கியமாகச் செய்வதற்கே நான் இங்கு வந்துள்ளேன்.
ஆனால் என்னிடம் வருபவர்களில் அநேகமானோர் என்னிடம் கேட்பது அவர்களது உலக வாழ்க்கைக்கான தேவைகளைத்தான். எப்பொழுதுமே கோரிக்கைகள், கோரிக்கைகள், கோரிக்கைகள் மாத்திரமே.
அவர்கள் எனக்கு அளிப்பது மாவிலைத் தோரணம், நிறைகும்ப மரியாதை, பஜனை, ஆரத்தி போன்றவையும் தமது உலக ஆசைகளை நிறைவேற்றும்படி கோரும் பிரார்த்தனைகளும் கோரிக்கைக் கடிதங்களும் மாத்திரமே.
நான் எனது விமானத்தை என்னையடையும் பேரவாவுள்ள சிலரையாவது ஏற்றிச் செல்ல விமானத்தின் அருகிலேயே காத்திருக்கிறேன். ஆனால் எனது எதிர்பார்ப்புக்கு ஏற்ற மனநிலையுடன் சிலர் கூட என்னுடன் வரத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை."
எனப் பெருமூச்சுடன் தனக்குத்தானே கூறியபடி தனது படுக்கையில் அமர்ந்திருந்தார்.
அங்கிருந்து பகவானின் பக்தர்கள் இருவரும் கலங்கிய கண்களுடன் பாதநமஸ்காரம் பெறாமலேயே அன்றிரவு சாயிநாதனின் அறையைவிட்டு வெளியேறினர்.
அவர்களில் ஒருவர் அன்றிரவு எம்பெருமானுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் எமது சாயிநாதன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் தனக்குப் புரிந்தவகையில் மனம் குமுறிக் கண்ணீர் உகுத்தபடி யூரியூப் வலைத்தளத்தில் விரிவாக விளக்கமளித்துள்ளார்.
எனவே நமது சாயிபகவானின் இப்பூவுலக அவதாரத்தின் நோக்கத்தைத் தெளிவாகப் பரிந்து, பகவான் நம்மிடம் எதிர்பார்க்கும் நோக்கப்படி வாழ்ந்து உயவடைவோம்.
சமஸ்தலோகா சுகினோ பவந்து.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
No comments:
Post a Comment