Monday, March 7, 2022

இறைவன் ஒருவரே அவரை நம்புங்கள

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

அனைவருமே இறவனை நம்புகிறோம். நாஸ்திகர்கள் கூட இறைவன் இல்லை என்று சொல்லும் பொழுது இறைவன் என்ற நாமத்தைப் பயன்படுத்துவதால் இறையருளைப் பெறுகின்றனர். ஆனால் அவர்கள் அதனை உணர்ந்துகொளதில்லை. 


கடவுள் ஒருவரே. அவரை நாடு, கலாச்சராம், மொழி,‌ மதம்,  விருப்பு வெறுப்புப் போன்றவற்றின் காரணமாகப் பல பெயர்களால் அழைக்கிறோம். 


எந்தப் பெயரைப் பயன்படுத்தினாலும் அந்தப்பெயரை இறைவன் ஏற்றுக்கொள்கிறார். அதனால் ஒருவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்ற கேள்வி எவருக்குமே எழக்கூடாது. 


ஒருவர் இந்து சமயத்தைச் சார்ந்தவராக இருந்தால் அவர் உண்மையான இந்துவாக இருக்கவேண்டும். இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும். 


கிறிஸ்தவ சமயத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவர் உண்மையானா கிறிஸ்தவராக வாழவேண்டும். இயேசு பகவானின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் 


புத்தசமயத்தைப் பின்பற்றுபவர்கள்   புத்தபகவானின் போதனைகளைக் கடைப்பிடித்துச் சிற்ந்த புத்தமதத்தவராக இருக்கவேண்டும். 

 இஸ்லாமியர்கள் அனைவரும் திருக்குரானைப் பின்பற்றிச் சிறந்த இஸ்லாமியராக வாழவேண்டும். 

அதே போல் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்  அந்த்ச் சமயக் கொள்கைகளைப் பின்பற்றவேண்டும். 


எல்லாச் சமய நூல்களும் அன்பு, பண்பு, கருணை, தியாகம், பிறருக்கு உதவுதல், அகிம்சை போன்ற நற்குணங்களையே போதிக்கின்றன. 


எல்லா மதங்களும் வன்செயல், கோபம், ஆணவம், வெறுப்பு போன்றவற்றை விலக்கவேண்டுமென்றே போதிக்கின்றன. 


அதனால் ஒரு மதத்தவர் பிற மதத்தவரைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. 

அனைவரும் இறைவனின் வடிவங்களே. எல்லோர் மனதிலும் இறைவன் வாழ்கிறார். எனவே ஒருவரது மனதைப் புண்படுத்துவது அவருக்குள் குடியிருக்கும் இறைவனைப் புண்படுத்துவதாகும். 


எனவே அனைவரும் முடிந்தவரை அனைவருக்கும் உதவவேண்டும். உதவமுடியவிட்டாலும் யாரையும் புண்படுத்தக்கூடாது.

உலகில் இருப்பது ஒரயொருே சூரியனே. இந்தியாவுக்கென்று ஒரு சூரியனும், அமெரிக்காவுக்கு என்று இன்னொரு சூரியனும், ஆப்பிரிவுக்கு என வேறுரு சூரியனும் கிடையாது. 

ஆங்கிலேயர் சூரியனைச் 'சன்' என்று அழைக்கிறார்கள். தமிழர்கள் சூரியன் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படி வெவ்வேறு மொழிகளில் சூரியனை வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடுகிறார்கள். வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டாலும் அனைவரும் ஒரே சூரியனைத்தான் குறிப்பிடப்ப்டுகிறார்கள். 


உதாரணமாக ஒருவரின் பெயர் மோகன் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஆசிரியராகப் பணிபுரிகிறார் என்றும் வைத்துக்கொள்வோம். பள்ளியில் அவரை 'ஆசிரியர்' என்று அழைக்கிறார்கள். வீட்டில் அவரது தந்தையும் தாயும் 'மகன்' என்று அழைக்கிறார்கள். அவரது பிள்ளைகள் 'அப்பா' என்று அழைக்கிறார்கள். மாமாவும் மாமியும் 'மருமகன்' என்று குறிப்பிடுகிறார்கள். நண்பர்கள் விரும்பியபடியெல்லாம் அழைக்கிறார்கள். 

ஆனால் அனைவரும் பல பெயர்களைப் பயன்படுத்துவது 'மோகன்' என்னும் ஒருவரையே. யாரும் அப்பா, மகன், ஆசிரியர், மாமா, மருமகன், அண்ணன், தம்பி என அழைக்கப்படுவது வேறு வேறு நபர் என்று நினைப்பதில்லை. சண்டையிடுவதுமில்லை. எல்லோரும் அவர்களது உரிமைக்கு அமையவே மோகனை அழைக்கிறார்க்ள். 

எப்படி அழைத்தாலும் வருவதும், பதிலளிப்பதும் மோகன் என்பவர்தான்.. 

அதுபோல் தான் இறைவனை நாம் நமக்கு விரும்பிய எந்தப் பெயராலும் அழைக்கலாம். அதனால் ஒவ்வொரு சமயத்தவரும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கும் இறைவன் வெவ்வேறானவர் என்று நினைக்கக்கூடாது. பெயர்கள் அனைத்தும் ஒரே இறைவனையே குறிக்கின்றன. 


பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உருவங்களும் இறைவனுடையதே. இறைவன் அன்பின் வடிவானவர். விருப்பு வெறுப்பற்றவர். அனைவரையும் நேசிப்பவர். அவர் நமது இதயத்திலதான் வசிக்கிறார். 


நமது உடலே இறைவனின் ஆலையம். எனவே நாம் அனைவரும் நமது உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவன் விரும்பக்கூடிய செயல்களாகவே செய்ய வேண்டும்.

உலகம் முழுவதம் சாந்தியுடனுமும் மகிழ்வுடனும் சமாதானத்துடனும் வாழ இறைவைனை வேண்டிக்கொள்வோம்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.


No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...