Sunday, March 6, 2022

உலகம் நலமாக வாழ நாம் தர்மநெறியைக் கடைப்பிடிப்பதன் அவசியம்

ஓம் ஸ்ரீ சாயிராம்.

நமது சாயிபகவான் தனது அருளுரைகளின்போது‌ திரிகரண சுத்தியைப்பற்றி‌த் தொடரந்தும் குறிப்பிட்டு வருகிறார்.

முதலில் திரிகரண‌சுத்தி என்றால் என்னவென்று அனைவரும் விளங்கிக்  கொள்ள வேண்டும்.

திரிகரண சுத்தி  என்பது மனதில் தோன்றும் எண்ணமும், வாயால் கூறும் சொல்லும், அதுசம்பந்தமான நமது செயலும் வேறுபாடற்று ஒன்றாகவே இருக்கவேண்டும்.

ஏதாவது ஒரு சூழ்நிலையில் ‌நமது மனதில்‌ ஏற்படும் எண்ணமும், அந்தச் சூழ்நிலையில் நமது வாயிலிருந்து நாம் வெளிப்படுத்தும் வார்த்தையும் ,‌அந்தச் சூழ்நிலையில் நாம் செய்யும் ‌செயலும் வேறு வேறாக இருக்கக் கூடாது.

அதே வேளை நமது மன எண்ணங்களும் சொல்லும் செயலும் தூய்மானதாகவும், தர்மநெறியின் அடிப்படையிலானதாகவும், பிறருக்கு நன்மையளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

ஒருவர் நம்மிடம்  ஒரு உதவி கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.‌ அந்த உதவியை நாம் செய்ய விரும்பவில்லை ‌என்று நினைக்கிறோம் என்றும் வைத்துக்கொள்வோம். ஆனால் கேட்பவரிடம் நாம் அவர் கேடகும் உதவியை நிசசயம் செய்து கொடுப்பதாக நமது வாயினால் உறுதியளிக்கிறோம் என்றும் வைத்துக் கொள்வோம். அதேவேளை உதவிகோரியவரிடம் அவர் கேட்ட உதவியைச் செய்யாமல் ஏதோ சாக்குப் போக்குக் கூறி ஏமாற்றிவிடுகிறோம். என்றும் வைத்துக் கொள்வோம். 

இங்கு நம் மனதிலிருந்த எண்ணமும், நாம் வாயால் கூறிய உறுதி மொழியும், அந்தச் சொல் மற்றும் நமது செயல் என்பனவும் வெவ்வேறாக இருக்கின்றன.
இங்கு திரிகரண சுத்தி என்பது இல்லவேயில்லை.

நம்மிடம் உதவி கேட்டவரிடம் உதவி செய்யவேண்டும் என்ற மன எண்ணமும், ஒரே நிலைப்பாட்டுடன்‌  இருக்கவேண்டும்.
.
இதனைக் குழந்தைகளுக்குச் சிறு பராயத்திலிருந்தே கற்றுக் கொடுக்கவேண்டும். அதனால் அவர்கள் வளர்ந்த பின்னரும் நற்குணங்களுடன் நற்செயல்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள். 

தற்காலத்தில் பல குடும்பங்களில் பெரியவர்களே குழந்தைகளின் எதிரிலே தவறுகளைச் செய்கிறார்கள். 

குழந்தைகள் பெரியவர்களின் ஒவ்வொரு செயலையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. 

உதாரணமாக,  தனது தகப்பனாரைத் தேடி அவருக்கு வேண்டாதவர்கள் யாராவது வந்தால், வீட்டினுள் இருந்தபடியே தான் வீட்டில் இல்லையென்று சொல்லும் படி குழந்தையிடம் கூறச்சொல்வது போன்ற சம்பவங்கள் பல குடும்பங்களில் நடைபெறுகின்றன. 

அப்பொழு குழந்தை தகப்பன் பொய்சொல்வதை அவதானிக்கிறது. 

அதே போல் ஆசிரியாரோ , தந்தை போன்ற பெரியவர்களோ புகைபிடிப்பதைக் குழந்தைகள் பார்கிறார்கள். 

அப்போது இவை கெட்ட பழக்கங்கள் என்று தம்மிடம் சொல்லும் பெரியவர்களே தவறான காரியங்களைச் செய்வது, குழந்தைகளின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

எனவே குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நாம் நடந்துகொள்ள வேண்டும். அப்படியானால்தான் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது நற்குண, நற்செய்கைகளையே கடைப்பிடிப்பார்கள் என்பதை மனதில் கொண்டு நாம் நடந்துகொள்ளவேண்டும்.

நாம் நமது குழந்தைகள் மற்றும் இளம் சந்ததியர் மற்றும் பிறர் அனைவரின் முன் நமது மனச்சாட்சிப்படி நல்ல நடத்தையுடன் வாழ்ந்தால், நம்மமுடன் பழகும் மற்றும் நம்மை அவதானிக்கும் அனைவரும் மனம் திருந்தி நல்லவர்களாக வாழத் தொடங்குவார்கள். 

இப்படியான நமது நன்நடத்தையின் மூலம் அனைவரையும் நல்லவர்களாக மாற்றி எதிர்காலத்தைச் சத்திய யுகமாக மாற்றுவோம். 

உலகத்திலுள்ள அனைவரும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை, தியாகம் என்பவவற்றை உலக மக்கள் அனைவரும் கடைப்பிடித்து நலமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.


No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...