Thursday, March 24, 2022

பகவானையே கொலைசெய்ய முயன்று பகவானிடமே சரணடைந்த தீவிரவாதி

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

இந்தச் சம்பவம் 1967ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி நடைபெற்றது.

தீவிரவாதப் போக்கைக் கொண்ட கம்யூனிஸ்ட் இளைஞர்கள் சிலர் இறைவனின் பெயரைச் சொல்லி உலகை ஏமாற்றும் போலிச்சாமியார்கள் என அவர்கள் கருதிய 27 சமயத் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டனர்.

அவர்களின் திட்டத்துக்குக் காரணம் பல போலிச் சமயத்தலைவர்கள் பல மடங்களை ஸ்தாபித்து,  ஊழல்புரியும் அரசியல்வாதிகள் மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்திலுள்ளவர்களின் துணையுடன் இந்தியாவின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதாக அவர்கள் கருதியதாகும். எனவே அவர்கள் 27 சமயத் தலைவர்களின் பெயர்களைத் தெரிவு செய்தனர். குலுக்கல் முறை மூலம் யார் எந்தச் சமயத் தலைவரைக் கொலைசெய்யவதென அவர்கள் முடிவு செய்தனர்.

அவர்களின் இந்த முடிவு எதிர்காலத்தில் இந்தியா தடைகளெதுவுமின்றி‌‌ முன்னேற்றமடையவேண்டும் என்ற கருத்துடனேயே எடுக்கப்பட்டது. அவர்களின் நோக்கம் சரியானதாக இருந்தபோதிலும் அவர்களது கொலை முயற்சி தவறானது என்பதை அவர்கள் உணரவில்லை.

அவர்களுடைய திட்டப்படி 27 சமயத் தலைவர்களேயும் 1967ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி ஒரேசமயத்தில் கொலைசெய்வதாக முடிவு செய்யப்பட்டது. 

குலுக்கல்முறையின்போது கேரளத்தைச் சேர்ந்த இளைஞரொருவருக்கு நமது சாயிநாதனின் கதையை முடிக்குமம்படியான துண்டுச் சீட்டுக் கிடைத்தது. 

அதற்கென உள்ளே குத்துக் கத்தியுடனும் கத்தியைச் உடலினுள் ஊடுருவச்செய்து உயிரைப்பறிக்கும் பொத்தானும் வைத்து அமைக்கப்பட்ட 'மவுத் ஆர்கன்' (mouth organ) போன்று வடிவமைக்கப்பட்ட ஆயுதமும் அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

தனது செயலை நிறைவேற்றுவதற்கு இரண்டொரு நாட்களின் முன்னேயே அவர் பிராசாந்தி நிலையத்துக்கு வந்து பக்தர்களுக்கு மத்தியில் அமர்ந்து நமது பகவானின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்..

பகவானும் எதுவும் அறியாதவர் போலப் பக்தர்களுக்குத் தரிசனமளித்தார். இது நடைபெற்றது 1967.17 அன்றாகும்.

அன்று இரவு யாரின கண்களிலும் படாமல் பிரசாந்தி நிலைய மாடிக்குச் சென்று பகவானின் படுக்கையறைக்குள் நுழைந்து நோட்டமிட்டான் அந்த இளைஞன். பகவான் வழக்கம்போல் தனது சிறிய படுக்கையறையில் படுத்திருந்தார். ஆனால் நமது மாயச் சாயிக்கண்ணன் படுத்திருந்தது அந்த இளைஞனின் கண்களுக்குத் தெரியவில்லை. எங்கும் தேடியும் பகவான் படுக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் இளைஞன் திரும்பி  வந்துவந்துவிட்டான்.. 

அடுத்தநாள் பகதர்களுக்குத் தரிசனமளிக்கும்போது தனது தனிப்பட்ட நேர்காணலுக்கென (interview) அந்த இளைஞனை பகவான் அழைத்தார். அந்த இளைஞன் அதனை மறுக்க முயன்றும் முடியாத நிலையில் பகவானின் இன்ரவியூ அறையினுள் சென்றான்..

இனரவியூவின்போது சாயிநாதன் புன்சிரிப்பொன்றை உதிர்த்தபடி "உண்மையில் இறைவன் இருக்கிறாரா" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன் " இவ்வுலகில் இறைவன் என்றொருவர் இல்லவேயில்லை" என்று பதிலிறுத்தான். பகவானும் சில வினாடிகள் மௌனமாக இருந்துவிட்டு "நீ சொல்வது நூறு சதவீதம் உண்மை"  என்று கூறினார். இதனால் ஆத்திரமும் எரிச்சலும் அடைந்து " அப்படியானால் நீ ஒரு பொய்யன். உலகை ஏமாற்றுபவர். வித்தைக்காரன்" எனச் சத்தமிட்டான் இன்ரவியூவைப் புன்சிரிப்புடன் பகவான் முடித்துக் கொண்டார்.

இது நடைபெற்றது  18ம் திகதி பகலில். 

அன்றிரவு வழக்கத்துக்கு மாறாக, பகவான் ஒரு கட்டிலில் பிரசாந்தி நிலைய பஜனை மண்டபத்தில் படுத்திருந்தார். அப்போது குல்வந்த் ஹால் அமைக்கப்படவில்லை.

பகவானின் அருகில் அந்த இளைஞன் படுத்திருந்தான். சரியாக மண்டபத்தில் இருந்த சுவர்மணிக்கூண்டு பத்துமணியை ஒலித்தவுடன் பகவான் எழுந்து உட்கார்ந்து, அருகில் தூங்காமல் படுத்திருந்த அந்த இளைஞனிடம் நேரத்தைக் கேட்டார். இளைஞனும் பத்து மணி என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடியபடி படுத்திருந்தான். அவனருகில் அவனது ஆயுதம் இருந்தது.

10.30 மணிக்குச் சுவர்க்கடிகரம் ஒலியெழுப்பியது. உடனே பகவான் எழுந்து உட்கார்ந்தார் இதனை எதிர்பார்க்காத இளைஞனும் எழுந்து உட்கார்ந்தான். ஆனால் அவனது ஆயுதத்தைக் காணவில்லை. 


பகவான் கையை அசைத்தார். இளைஞனின் மவுத் ஆர்கன் ஆயுதம் பகவானின் கையிலிருந்தது. அதைப்பார்த்த அந்த இளைஞன் "அது என்னுடையது" என்று சப்தமிட்டான். 

பகவான் தனது மனதைமயக்கும் புன்னகையுடன் "இப்பொழுது சரியாகப் பத்துமணி முப்பது நிமிடம். நீ இன்றிரவு 10.30 க்கு எனது இதயத்தில் பாய்ச்சி என்னைக் கொலைசெய்யப் போவதாக‌ உனது டயரியில் எழுதி வைத்துள்ளாயல்லவா?  செய்வதாகத் தீர்மானமெடுத்த செயலைச் செய்து முடிக்க வேண்டியது உனது கடமை. எனவே இந்த மவுத் ஆர்கனை எனது மார்பில் இதயத்தின் நேராக வைத்து இந்த பொத்தானை அழுத்து. உடனே உள்ளேயிருக்கும் கத்தி எனது இதயத்தைத் துளைத்துவிடும். தாமதிக்காதே. தீர்மானித்த வேலையை முடித்துவிடு, தயவு செய்து என்னைக் கொன்றுவிடு. கொன்றுவிடு" என்று அந்த இளைஞனிடம் கூறினார்.

இளைஞன் நடுங்கத் தொடங்கினான். அவனது உடல் குளிர ஆரம்பித்தது. தனது பலம் அனைத்தையும் இழந்த அவனது கரம் பகவானின் மடியில் விழுந்தது. 
அதேவேளை பகவானின் கையிலிருந்து மவுத் ஆர்கன் நழுவி அந்த இளைஞனின் கால்விரலின்மேல் விழுந்தது. ஆயுதம் கால்விரலில் ஏற்படுத்திய காயத்திலிருந்து இரத்தம் வழிந்தது.

உடனே பகவான் தனது அங்கியின் துண்டொன்றைக்கிழித்து.அவனது காயத்தில் கட்டினார்.

 தலையை அன்புடன் வருடிய பகவான், தனக்கேயுரிய தெய்வீகக் கருணையுடன் "நீங்கள் நாட்டைக் காக்க முடிவு செய்தது மிகவும் சரியானதே. ஆனால் நீங்கள் அதனை நிறைவேற்றத் தீர்மானித்த முறைதான் தவறானது. நீ இனி உனது தாய் தந்தையரிடமோ வேறெங்கோ போகாமல் என்னுடனேயே இரு" என்று அவனது கண்களுள் உற்று நோக்கியவாறே கூறினார்.

இளைஞன் மனம் திருந்தினான். அவனது கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

அந்த இளைஞனைத் தனது  சேவையில் அமர்த்தினார் எம்பெருமான். 

இப்போது அவனுக்கு வயது சுமார் 65. இன்னும் புட்டபர்த்தியிலேயே இருக்கிறான்.

சுமார் ஒருவாரத்தின் முன் சாயிநாதனின் பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சியொன்றின்போது
 முதலாவது தடவையாகத் தான் யாரென்பதையும் பகவானின் கதையைமுடிக்கவென்று பிரசாந்தி நிலையத்துக்கு 1967 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வந்த தனது கதையை முடித்த பகவானுடைய கருணையால் இன்றும் புட்டபர்த்தியில் வசிப்பதாகத் தனது வாயாலேயே கூறியுள்ள தகவலை அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய சாயிபக்தர் ஒருவர் சில‌நாட்களின்  முன் வெளியிட்டுள்ளார்.

மேலும்  ஏனைய மதத் தலைவர்களைக் கொலைசெய்யும் நோக்கத்துடன் புறப்பட்ட ஏனைய 26 இளைஞர்களும் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சாயிநாதனின் கருணையால்தான் அவர் சாயிநாதனைக் குறிவைத்துப் புட்டபர்த்திவந்து சாயி சேவகனாக மாற்றப்பட்டதையும் அவர் உயிர் பிழைத்திருப்பது பகவானின் கருணையால்தான் என்பதையும் மனமுருகிக் கூறியுள்ளார்.

எம்பெருமானின் கருணையே கருணை.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்
.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...