Thursday, March 24, 2022

மனிதர்கள் பேரின்பவாழ்வை அடையும் வழி.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

கடவுள் எங்கும் நிறைந்தவர். எல்லாம் வல்லவர். எல்லாம் அறிந்தவர். நம் அனைவருக்கும் என்ன தேவை, எபாபொழுது தேவை போன்ற அனைத்தையும் அறிந்தவர். 

கடவுளின் சங்கல்பம் என்ன என்று யாராலும் அறிந்துகொள்ள முடியாது. கடவுள் எங்கும் நீக்கமற 
நிறைந்துள்ளார், எங்கு பார்த்தாலும் அங்கெல்லாம் வியாபித்துள்ளார் என்பதை நாம் ஒருபொழுதும் மறக்கக் கூடாது. 

அப்படிப்பட்ட கடவுளை ஜபம், யாகம், தியானம் போன்றவை மூலமாக மாத்திரம் நம்மால் அடைந்துவிட முடியாது. மனிதன் பலவீனங்களின் வடிவானவன் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் மனிதன் பாவியல்ல,‌ பலவீனமானவனல்ல. இறைவனின் வடிவமே மனிதன் என்றும்‌ மனிதனிடம் 85 விழுக்காடு தெய்வீகமும் 5 விழுக்காடு பலவீனங்களும் உள்ளதாகப் பகவான் கூறுகிறார்.

மனிதர்களின் மனத்தை ஐம்புலன்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து  புலனின்பங்களை நோக்கி இழுத்துச் செல்வதால், மனித மனமும்  உடலை இறைவனை நோக்கிப் பயணம் செய்யாமல் தடுத்துத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்கிறது.  இதனால் தீய நடவடிக்கைகளில் ஈடுபடத்தூண்டப்பட்டு இறைவனை நோக்கிச் செல்லும் பாதையிலிருந்து விலகி இறைவன் படைத்த தன் நோக்கத்தைத் தவறவிட்டுவிடுகிறான்  

இதனால் இறைவன் கொடுத்த 85 விழுக்காடு தெய்வீகம் குறைந்து தீய குணங்களால் நிரப்பப் படுகிறான். இதனால் தான் தனது கடவுளை நோக்கிய பாதையைத் தவறவிட்டு மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். 

கடவுள் எப்படிப்பட்டவர் என்று யாராலும் சொல்லமுடியாது. கடவுள் ஒருவரே. ஒவ்வோரு மொழியிலும் கடவுளைக் குறிக்கும் சோல்லைப் பயன்படுத்தி வழிபடுகிறார்கள். 

உதாரணமாக உலகுக்கு ஒரு சூரியன்தான் ஒளிகொடுக்கிறார். ஆங்கிலேயர் சூரியனை 'சன்' ன்று கூறுகிறார்கள். தமிழர்கள் சூரியன் என அழைக்கிறார்கள். இந்தியில் 'ரவி' என அழைக்கிறார்கள். ஜப்பானியர்கள் 'ரயோ: என அழைக்கிறார்கள். ஆனால் எல்லாப் பெயர்களும் ஒரே சூரியனைத்தான் குறிப்பிடப்படுகிறது.

அதே போல் நீங்கள் எந்தப் பெயர், எந்த உருவம் என்பவற்றை பயன்படுத்தி வணங்கினாலும் அந்த வணக்கம் ஒரே இறைவனையே சென்றடைகிறாது. இந்த ரகசியத்தை மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை. 

அதிகமான மக்களுக்கு ஆன்மீகத்தில் நோக்கம் இல்லை. சாதாரண மனிதர்களிலிருந்து மகான்கள் வரையில் யாக யக்ஞங்களில் திருப்தியடைந்து விடுகிறார்கள். கடவுள் நன்நடத்தையையும் ஆன்மீகத்தையும் தான் எதிர்பார்க்கிறார். 

இவ்வுலகில் செல்வமும் சிபார்சும் தான் முதலிடம் பெறுகின்றன. இது மிகுந்த அறியாமையாகும். இந்த அறியாமையிலிருந்து வெளியேறாத வரை கடவுளைப் புரிந்துகொள்ள முடியாது. 'நான்' என்னும் ஆணவமும் 'என்னுடையது' என்னும் அகம்பாவமும் உள்ள இதயங்களைக் கடவுள் விரும்புவதில்லை.

.உலகில் நாமும் நாம் சேர்த்து வைப்பது அனைத்தும் என்றோ ஒருநாள் அழிந்துவிடும். 

மனித உடலும் ஒருநாள் அழிந்துவிடும். எனவே பிறந்து இறக்கும் இவ்வுலக வாழ்வின் துயரங்களிலிருந்து விடுதலை பெற்று இறைவனுடன் இரண்டறக்கலப்பதற்கான சத்தியம், தர்மம், சாந்தி, பிரமை, அகிம்சை, திரிகரணசுத்தி என்பவற்றைக் கடைப்பிடித்து பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்சியைப் பெறுவோம்.

உடலுக்கு உணவளிப்பது போன்று நமது ஆத்மாவுக்குரிய உணவையும் அளித்து இறைவனுடன் ஒண்றிணைந்து பேரின்பத்தை அடைவதே நமது நோக்கமாக இருக்கவேண்டும்.. 

அனைத்து உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...