ஓம் ஸ்ரீ சாயி ராம்
இறைவன் அன்பே வடிவானவர் இந்தப்பிரபஞ்சமே இறைவனுள் அடங்கியுள்ளது.
இவற்றை இறைவனது மனித அவதாரங்கள் அனைத்திலிருந்தும் நாம் அறிந்துள்ளோம்
திரேதா யுகத்தில் இறைவன் இராமபிரானாக அவதரித்தபோது தனது வாயைத்திறந்து பிரபஞ்சம் முழுவதும் தனது வாயினுள் இருப்பதைத் தாயார் கௌசல்யாதேவிக்குக் காட்டினார்.
துவாபரயுகத்தில் கண்ணபிரானாக அவதரித்து தேவகி வயிற்றில் பிறந்து யசோதை மகனாக வளர்ந்தபோது அவர் மண்ணை உணபதாகப் பலராமர் தாயாரிடம் கூறினார். அப்போது தான் மண்ணை உண்ணவில்லையென்றும் சந்தேகமிருந்தால் தனது வாயினுள் பார்காகும்படியும் கூறி வாயைத் திறந்தார். அப்போது பாவகனான கண்ணபிரானின் வாயினுள் யசோதை பிரபஞ்சம் முழுவதையும் கண்டார்.
சீரடிபகவான் சிவலிங்கத்தை விழுங்கியபோது தன்னைத் தண்டிக்க வந்த பெண்ணிடம் தனது வாயைத்திறந்து பிரபஞ்சத்தைக் காட்டித் தன் தெய்வீகத்தை வெளிப்படுத்தினார்.
நமது சாயிநாதன் தாயார் ஈஸ்வரம்மாவிடம் தனது வாயைத் திறந்து பிரபஞ்சம் தனக்குள் அடங்கியிருப்பதைக் காட்டியுள்ளார்.
அன்ன்பையும், தியாகத்தையும நமது உயிர் மூச்சாகக் கடைப்பிடிக்கும்படி நமது பகவான் நமக்கு அறிவுறுத்தி வருகிறார்.
மேலும் நமது புலன்களை அடக்கி அதனை நமது .கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்படியும், எந்த ஒரு ஆன்மீக சாதனையாக இருந்தாலும் அச்சாதனையில் வெற்றி பெற வேண்டுமானால் புலனடக்கம் அவசியம் என்பதையும், புலனடக்கத்தின் மூலம் தெய்வீகத் தன்மையை அடையமுடியும் என்பதையும் வலியுறுத்திவரும் நமது சாயிபகவான், கோபம் என்பது நாயின் இயல்பு என்றும் சலனப்பட்டுக் கொண்டேயிருப்பது குரங்கின் குணம் என்றும் கூறுகிறார்.
நமக்குக் கோபம் வரும் போது நான் நாயல்ல, நான் மனிதன் என்று நினைவு படுத்திக் கொள்ளவேண்டுமென்றும், அதைப் போலவே மனம் அலை பாயும் போது நான் குரங்கல்ல, நான் மனிதன் என்ற திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்ளவேண்டுமென்றும் எம்பிரான் அறிவுறுத்தி வருகிறார்.
சத்தியம். தர்மம். சாந்தி. பிரேமை. அஹிம்சை ஆகியவை தான் மனிதரின் உண்மையான உயர் குணமென்றும் பகவான் வலியுறுத்தி வருகிறார்.
பிராண. அபான. வ்யான. உதான மற்றும் சமான என்பவையே பஞ்சப்பிராணன்கள் என்றும இவற்றில் ஏதாவது ஒன்றை இழந்தாலும் கூட வாழ்க்கையையே இழந்து விடுவதைப் போன்றது என்றும் எம்பிரான் எடுத்துரைக்கிறார்.
இக் குணநலன்களை இழந்து விட்டதால்தான் மனிதன் இன்று வாழும் பிணமாக இருக்கிறான். எனவே நம்பிக்கையுடன் இக்குண நலன்களை நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ளவேண்டும். அவற்றைப் போற்றி வளர்த்து, அவற்றிடமிருந்து கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவிக்கவேண்டும்.
எங்கே நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே அன்பிருக்கிறது. எங்கே அன்பிருக்கிறதோ, அங்கே அமைதியிருக்கிறது. எங்கே அமைதியிருக்கிறதோ, அங்கே சத்தியம் இருக்கிறது. எங்கே சத்தியம் இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார். எங்கே கடவுள் இருக்கிறாரோ, அங்கே ஆனந்தம் நிறைகிறது.
எனவே புலன்களைக் கட்டுப்படுத்தி அவற்றை இறேவனையடையும் பாதையில் திருப்பி நாம் பெற்ற இந்ந மனிதப்பிறவியின் பலனான 'நாம் இறைவனே' என்ற உண்மையை உணர்ந்துகொள்வோம்.
ஒவ்வொரு சுவாசத்தின் போதும் நம்மையறியாமலே நாம் "சோ...ஹம்" , "சோ...ஹம்" அதாவது நான் இறைவன், நான் இறைவன் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பதை நினைவில் வைத்து பகவானின் அருளில் திளைத்திருப்போம்.
அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
சமஸ்தலோகா சுகினோ பவந்து.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
No comments:
Post a Comment