ஓம் ஸ்ரீ சாயி ராம்.
"யாராவது நமக்கு உதவிசெய்தால் அவர்களிடம் மிக நன்றி என்று கூறுகிறோம். யாருடனாவது பேசும்போது எப்படியிருக்கிறீர்கள், குடும்பத்தில் அனைவரும் நலமா என்று விசாரிக்கிறோம். கீழே விழுந்த நமது கைக்குட்டையை யாராவது எடுத்துக் கொடுத்தால், மிக்க நன்றி என்று கூறுகிறோம்.
அரசு நமக்கு நீரை வினியோகிக்கும்போது நாம் தண்ணீர் வரி செலுத்துகிறோம்.
அதைப்போலவே மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்காக மின்கட்டணம் செலுத்துகிறோம்.
நாம் வாங்கிய நிலத்தில் ஒரு வீட்டைக் கட்டும்பொழுது அதற்கும் வீட்டுவரி செலுத்துகிறோம்.
காற்றை அனுபவிப்பதற்கு ஒரு மின்விசிறியைப் பயன்படுத்தும்போதும் அதற்கு மின்கட்டணம் செலுத்துகிறோம்.
உயிர்வாழ்வதற்கு மிக அவசியமான காற்றை நாம் தொடர்ந்தும் அனுபவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணமான, அதாவது உயிர்மூச்சான காற்றை வளங்கியருளிய இறைவனுக்கு நாம் நன்றி செலுத்துகிறோமா என எண்ணிப்பாருங்கள்.
நாம் இறைவன் நமக்கு வழங்கும் எதற்காகவாவது வரியேதும் செலுத்துகிறோமா அல்லது இறைவன் பிரதியுபகாரமாக நாம் எதையாவது செலுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறாரா?
உலக்குக்கு வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தரும் சூரியன் நம்மிடமிருந்து எதையாவது எதிர்பார்க்கிறாரா?
ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அதனையும் நமக்குத் தேவையான அளவு பயன்படுத்துகிறோம். இந்த நீரை வழங்கும் இறைவனுக்கு நாம் வரி செலுத்துகிறோமா. அல்லது நன்றியாவது சோல்கிறோமா?
அற்பமான சாதரணமான விஷயங்களுக்க்கெல்லம் நாம் வரி செலுத்துகிறோம். நன்றி சொல்கின்றோம்.
கடவுள் அருளும் அனைத்தையுமே இலவசமாக வழங்குகிறார்.
காற்று இலவசம். நீரும் இலவசம். வெளிச்சமும் இலவசம், ஒலியும் இலவசம். இறைவன் அனைத்தையும் இலவசமாகவே கொடுக்கிறார்.
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இறைவனால் அருளப்பட்டதே. இப்பிரபஞாசத்தின் மிகச் சிறு பகுதியான பூமியும், பஞ்சபூதங்களும் இறைவனால் படைக்கபாபட்டவை மாத்திரமன்றி அனைத்தும் இறைவனின் வடிவங்களே.
இறைவனுடைய அருளைப்பெற்றுக்கொண்டு அதனை அனுபவித்துக்கொண்டிருக்கும் நாம் வரியேதும் செலுத்தும்படி இறைவன் நம்மிடம் கேட்கவில்லை.
மனித இயல்புகளுடன் மனிதனாக வாழும்படியே இறைவன் நம்மிடம் கேட்கிறார்.
நாம்தான் நாம் கேட்பதையெல்லாம் கொடுக்கவில்லையே என்று கடவுளயே குறை கூறுகிறோம். கடவுள் கொடுத்தவற்றுக்கே நன்றி இல்லாதவர்களாக இருக்கிறோம்.
யாருக்கு எதை எப்பொழுது கொடுக்கவேண்டும், யாருக்கு எது எப்பொழுது உகந்தது என்று இறைவனுக்கு நன்கு தெரியும்.
உண்மையில் மனிதன் திருப்தி உள்ளவனாக வாழவேண்டும். இறைவன் நமக்காக எத்தனை தான் அருளியிருக்கிறார்.
இந்தக் காடுகளைப் படைத்து இந்தமரங்களின் மூலமாகப் பிராண சக்தியை அதாவது ஒக்சிஜனை அருளியிருக்கிறார்.
மனிதன் மூச்சுக்காற்றின் மூலம் வெளியிடும் கரியமில வாயுவை, அதாவது காபன் டை ஒக்சைட்டை இந்த மரங்கள் பயன்படுத்திக் கொள்வதால் காற்று மாசுபடுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
இவற்றை அருளிய கடவுளுக்கு நாம் செலுத்தும் வரியையே நம் முன்னோர்கள் பலி என்று கூறினார்கள்.
பலியென்றால் ஒரு உயிருள்ள உடலை இறைவனுக்குப் பலிகொடுப்பது என்ற தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது.
எந்த உயிரையும் துன்புறுத்துவது பலி அல்ல. இறைவன் முன் எல்லா உயிரினங்களும் சமமானவையே. எனவே எக்காரணத்தைக்காகவும் உயிருள்ளவை எவற்றையும் துன்புறுத்தக் கூடாது.
நம்முடைய நன்றியுணர்வை இறைவனுக்குத் தெரிவிப்பதே நாம் இறைவனுக்குச் செலுத்தும் வரியாகும்.
அத்துடன் நாம் கடைப்பிடிக்கும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை அகிம்சை, தியாகம் என்பனவும், பிறருக்குச் செய்யும் சுயநலமற்ற உதவியும், ஆழ்ந்த பிரார்த்தனையும் இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.
நம்மிடமுள்ள துன்மார்க்கம் மற்றும் தீயசக்திகளை அழித்து நம்மிடையே நற்சக்திகளை வளர்த்துக்கொள்வோம்.
வெறும் கைகளுடன் என்னிடம் வாருங்கள், உங்கள் கைகளை எனது அருளால் நிறைத்து அனுப்புகிறேன்"
என்று நமது சாயிநாதன் தனது அறிவுரைகளைக் கூறி நம்மை நல்வழிப்படுத்துகிறார்.
சமஸ்தலோகா சுகினோ பவந்து.
ஓம் ஸ்ரீ சாயி ரராம்.
No comments:
Post a Comment