ஓம் ஸ்ரீ சாயி ராம்
இறைவன் நமக்கு ஐந்து புலன்களை அளித்திருக்கிறார். அந்தப் புலன்களைக் கட்டுப்படுத்தாமல் அவற்றை அவற்றின் பாதையிலேயே செயல்பட அனுமதித்தால், அவை தமது இஷ்டப்படியே செயல்பட்டுத் தமது எண்னப்படியே பல்வேறு தவறான பாதைகளில் நம்மை இழுத்துச் சென்றுவிடும்.
எனவே நமது புலன்கள் ஐந்தையும் மனதின் கட்டுப்பாட்டில் வைத்தபடி அவற்றை நல்வழியில் பயன்படுத்துவது நமக்கு இறைவன் அளித்த முக்கிய கடமையாகும்.
சாயிபகவான் நமது உடலைத் தேருக்கு ஒப்பிடுகிறார். இவ்வுடலென்னும் தேருக்கு. மனமே தேர்ச்சாரதியாகும். ஆத்மாவே பயணியாகும்.
இறவனைச் சென்றடைவதே நமது ஆத்மாவின் ஒரே நோக்கமாகும். உடலென்னும் தேரை இழுத்துச் செல்லும் குதிரைகளே நமது புலன்களாகும்.
ஐம்புலன்கள் எனப்படும் குதிரைகளைச் செலுத்தும் சாரதியான மனதின் கட்டுப்பாட்டில் புலன்களான குதிரைகள் இருக்கும்வரை தான், தேர் உரிய பாதையில் விரைவாகச் சென்று, அடைய வேண்டிய இடத்தை அடையும்.
ஆனால் புலன்களான குதிரைகள் சாரதியின் கட்டுப்பாட்டில் இருக்காவிட்டால் தேர் சேரவேண்டிய இடத்தைச் சன்றடையாது.எனவே மனமாகிய தேர்ச்சாரதி புலன்களாகிய குதிரைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மாத்திரமே ஐந்து புலன்களும் தமது கடமைகளைச் சரிவரச் செய்ய முடியும்.
கண்களால் பார்க்க மாத்திரமே முடியும். அவற்றால் ஒலிகளைக் கேட்க முடியாது.
காதுகளால் ஒலியைக் கேடகமுடியுமே தவிர காட்சிகள் எதனையும் பார்க்க முடியாது.
எனவே ஒவ்வொரு புலனும் தனக்குரிய கடமையை ஒழுங்காகச் செய்யும்வரை எல்லாமே நன்றாக நடைபெறும்.
அதேவேளே கண்கள் நல்லவற்றையே பார்க்கவேண்டும். காதுகள் நல்லவற்றையே கேட்கவேண்டும். மூக்கு நல்லவற்றையே நுகர வேண்டும். கைகள் நல்லவற்றையே செய்யவேண்டும். கால்கள் நல்ல இடங்களுக்கே செல்ல வேண்டும் வாய் நல்லவற்றையே பேச வேண்டும் நா நல்லவற்றையே சுவைக்க வேண்டும்; பேசவேண்டும்.
இப்படி எல்லாப் புலன்களும் நல்லவிடயங்களில் மாத்திரம் ஈடுபடும்போது மனமும் நற்சிந்தனையுடன் இருக்கும் நாமும் தவறெதுவுதும் செய்யாமாட்டோம்.
புலன்களைக் கட்டுப்பாடன வகையில் செலுத்தி இறைவன் மீது லயிக்கச் செய்வதன் மூலம் நாம் இறைவனிடமிருந்து பிரியமாட்டோம். ஆனால் இறைவன் மீதுள்ள பற்றைவிட வெளியுலகக் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றுக்கு ஆசைப்பட்டால், நாம் ஆசைப்படும் நிரந்தரமற்ற பொருளை இழப்பதும் வேதனையில் ஆழ்வதும் தவிர்க்க முடியாதவையாகிவிடும்.
இதனை இராமயணத்திதில் சீதாப்பிராட்டியார் பொன்மானுக்கு ஆசைப்பட்டதைக் கூறி விளக்குகிறார் நமது சாயிராமர்.
தனது அந்தப்புர வாழ்க்கையைத் துறந்து 13 வருட காலம் தனது கணவரான இராமபிரான் இருக்குமிடமே ஆயோத்தியெனக் கருதி ஒரு கணமேனும் கணவனைவிட்டுப் பிரியாமல் மகிழ்ச்சியாகக் காட்டில் வாழ்ந்தவர் சீதாதேவியார்.
ஆனால் இராமபிரானைத் தவிர எதன்மீதும் ஆசைவைக்காத சீதாதேவியார், இயற்கைக்குப் புறம்பான பொன்நிற வடிவத்துடன் தன் முன்னே மேய்ந்து கொண்டிருந்த மாய மான் மீது ஆசைகொண்டதால் இராமபிரானைப் பிரிந்து, இலங்கை வேந்தனாகிய இராவணனால் கடத்தப்பட்டு, அசோகவனத்துச் சிறையில் பல துன்பங்களுக்கு ஆளானார் என்பதை விளக்கும் நமது சாயிராமன்,
இறைவனின் மேலுள்ள பற்றைப் புறக்கணித்து, நிலையற்ற உலக ஆசைகளின் மீது ஆசைவைத்துப் புலன்கள் செல்லும் வழியில் செல்பவர்கள் துன்பமடைவார்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே புலன்களை அடக்கி இறவனை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்ந்து நமது பெறற்கரிய மனிதப்பிறவியின் நோக்கமான இறவனுடன் இரண்டறக்கும் பேற்றை நாம் அனைவரும் பெறவேண்டுமென்று எம்பிரான் சாயிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
சமஸ்தலோகா சுகினோ பவந்து.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
No comments:
Post a Comment