ஓம் ஸ்ரீ சாயி ராம்.
இவ்வுலகம் பாதுகாப்பாகவும், பவித்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும் இருக்க வேண்டுமானால் நம் அனைவரின் நடத்தையும் ஒழுக்கத்துடனும் நன்நடத்தையுடனும இருக்க வேண்டியது அவசியமென்பதையும் பகவான் வலியுறுத்தி வருகிறார்.
" இவ்வுலகத்திற்குத் தற்போதைய முக்கிய தேவை, ஆடம்பரமும், உலகியல் சுகங்களும் அல்ல, மேன்மையான குணங்களும், நல் ஒழுக்கமும் நிறைந்த ஆடவரும், பெண்டிரும் தான்.
சரியான வழிமுறைகளில், இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் நடவடிக்கைகள் அமையாமல் போகுமானால் எதிர்காலத்தில் மகிழ்ச்சியும் சமாதானமும் இருக்காது
சத்தியம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவர்களே உண்மையான மனிதர்களாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்
சத்தியம் என்பது நீதி; தர்மம் என்பது ரீதி; தியாகம் என்பது கியாதி, இவை மூன்றும் சேர்ந்ததே மானவஜாதி. (மனித குலம்).
இந்த மனித குலம் சத்தியத்திலிருந்தே உருவாகியது.. இந்தப் படைப்புகள் அனைத்தும் சத்தியத்திலிருந்தே பிறந்து உருவாகிக் கடைசியில் சத்தியத்திலேயே ஐக்கியமாகிறது. சத்தியம் இல்லாத இடமே இவ்வுலகில் இல்லை.
இந்தத் தூய கலப்பற்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். இதை ஆதாரமாகக் கொண்டே உண்மையையே பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள் என்று அறிஞர்களும், ஞானிகளும் கூறியுள்ளார்கள். '
ஸத்யம் ப்ருயாத்' என்பது நேர்மை என்னும் குணநலனைக் குறிப்பிடுகிறது. நீதி எனப்படும் நேர்மை மற்றும்ஒழுக்கம் இன்றி மனிதகுலம் தழைத்தோங்கவோ வாழவோ முடியாது.
அநியாயம். பொய்மை. அதர்மம். என்பவை அனேக மனிதர்களின் மனதில் வேரூன்றியிருப்பதால் இன்றைய உலகம் பிரச்சினைகளில் அகப்பட்டுத் தத்தளித்து வருகிறது. வெகுவாகக் குறைந்துவரும் வரும் மனிதர்களின் உயர்குண நலன்களை மீட்டு, இவ்வுலகை நன்நெறியில் நிலை நிறுத்த இளைஞர்களாலும். யுவதிகளாலும் மட்டுமே முடியும்.
மனிதர்கள் நேர்மையைக் கடைப்பிடித்து அதன் வழியே நடக்கும் போது தான் சமத்துவம். சகோதரத்துவம். சுதந்திரம் ஆகியவை சமுதாயத்தில் நிலவமுடியும். நேர்மையைத் தங்கள் உயிர்மூச்சாகக் கைக்கொள்ள வேண்டுமானால் மனிதன் சத்தியத்தைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும். இதனால் தான் ‘சத்தியம் ப்ருயாத்’ எனக் கூறுகிறார்கள்
இது தான் மனிதனின் தலையாய கடமையாகும்.
அடுத்ததாகவருவது ‘ப்ரியம் ப்ருயாத்’ என்பதாகும். இனிமையாகப் பேசுங்கள்என்பதே இதன் பொருள். இது 'தர்மம்' என்னும் குண நலனைக் குறிக்கிறது.
இதை அடிப்படையாகக் கொண்டுதான் பகவத் கீதையில் “சத்தியத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள், உங்களது பேச்சு. மற்றவர்களது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தூண்டிவிடுவதாக அமையக் கூடாது, ஆன்மீகக் குண நலன்களைக்க் கடைப்பிடிக்கவேண்டும், ஆன்மீகப் பாதையில் செல்ல இந்தக் குணநலன்களை மனிதன் கைக்கொள்ள வேண்டும்" என்று சொல்லப்பட்டுள்ளது"
என்று பகவான் தனது அருளுரையில் திருவாய்மலர்ந்தருளியிருப்பதை நாம் அனைவரும் நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து எம்பெருமான் நமக்கு வழங்கியுள்ள மனிதப்பிறவியின் பலனை அடைவோம்.
அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
சமஸ்தலோகா சுகினோ பவந்து.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
No comments:
Post a Comment