இன்று மனிதன் சந்திரனில் கால் பதித்து தனது விண்வெளி ஆராய்ச்சியின் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளான். ஆனால் சந்திரனில் கால் பதித்து நடந்ததாகக் கூறும் விஞ்ஞானிகள் அதன் மூலம் எதனையும் சாதிக்க முடியவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நீல் ஆம்ஸ்றோங் சந்திரனில் கால் பதித்து நடந்த முதலாவது மனிதன் என்ற பெருமையைப் பெற்றவர்வர். ஆனால் நீல் ஆம்ஸ்ரோங்கும் எட்வின் அல்ட்ரினும் பயணம் செய்து சந்திரனை அடைந்த விண்வெளிக் கலசத்திலிருந்து உடனடியாகச் சந்திரத் தரையில் இறங்கிக் கால்பதிக்காமல் பாரம்பரியமான இறைவணக்கத்தில்தான் ஈடுபட்டனர்.
மேலும் சந்திரனிலிருந்து மீண்டும் பூமியை நோக்கிப் பயணம் செய்ய முயற்சித்தபோது அவர்களின் சந்திரக் கலசம் இயங்கவில்லை.
எனவே அவர்கள் இருவரும், தாய்க்கலத்தில் இருந்தபடி சந்திரனைச் சுற்றியபடியே இருந்த அந்த விண்வெளிப் பயணத்தின் தலைவர் மற்றும் அமெரிக்காவின் சந்திரப்பயணக் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்த விஞ்ஞானிகள் அனைவரும் தமது முழுத் திறமையையும் பயன்படுத்தி சந்திரனிலிறங்கிய கலத்தை இயக்க முயற்சித்தனர்.
ஆனால் அவர்களால் சந்திரனிலிருந்த விண்கலத்தைப் புறப்படச் செய்த முயற்சிகளெதுவும்
வெற்றியளிக்கவில்லை. எனவே இறைவனிடம் உதவிகோருவதைத் தவிர அவர்களால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.
எதேசமயம் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
நீல் ஆம்ஸ்ரோங் விண்கல யன்னல் வழியே வெளியே பார்த்தபோது செந்நிற ஆடையணிந்து தலை முழுவதையும் கூடைபோல் மூடிய கரும் முடி நிறைந்த ஒருவர் கைகளில் ஏதோவொரு பொருளைத் தூக்கியபடி சந்திரக்கலத்தின்கீழ் சென்றதைக் கண்டார். அதன்பின் என்ன நடந்தது என்று அவருக்கு எதுவும் தெரியவில்லை.
ஆனால் விண்வெளி உடை அணியாமல் ஒரு மனிதர் சந்திரத் தரையில் நடந்து சென்றதை அவரால் நம்பமுடியவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சியும் பயமும் அடைந்த ஆம்ஸ்ரோங் விரைவில் அங்கிருந்து புறப்படுவதற்கு முயற்சித்தார். எனவே மீண்டும் விண்கலத்தை இயக்க முயன்றார்.
உடனடியாக விண்கலம் இயங்க ஆரம்பித்துச் சந்திர த் தரையிலிருந்து புறப்பட்டுத் தாய்க்கலத்துடன் இணைந்து பூமிக்குத் திரும்பியது. விண்வெளிவீரர்கள் மூவரும் பாதுகாப்பாகப் பூமிக்கு வந்து சேர்ந்தனர்
.
பூமிக்கு வந்தபின் தான் சந்திரனில் பார்த்த மனிதன் யாராக இருக்க முடியும் என்று ஆராயத் தொடங்கினார். அப்போது பிரசாந்தி நிலையத்தைப்பற்றியும் நமது சாயிநாதனைப்பற்றிய விபரத்தையும் அறிந்த அவர் பிரசாந்தி நிலையதாதுக்கு வந்து சுவாமியைத் தரிசித்து எம்பெருமானின் அருள் பெற்றுப் பெரும் பேறுபெற்றார்.
மேலும் சந்திரனிலிருந்த கற்களைச்சேகரித்து வந்த விண்வெளி வீரர் ஒருவர், தனது சந்திரப் பயணத்தின்மூலம் சாதாரண கற்களையே எடுத்துவர முடிந்ததையும் நமது சாயிநாதனைத் தரிசிக்கப் பிரசாந்தி நிலையம் வந்த பயணமே தனது வாழ்க்கையின் பெரும்பேறு என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
சமஸ்த லோகா சுகினோ பவந்து.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
No comments:
Post a Comment