Saturday, March 19, 2022

சாயிநாதனே சத்தியம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

சுவாமி தனது அருளுரைகள் அனைத்திலும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை,  அகிம்சை ஆகிய நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறி‌வருகிறார்.
அதேவேளை மனம், வாக்கு, செயல் என்பன ஒருங்கிணைந்திருப்பதன் அவசியத்தை ‌அதாவது திரிகரண‌சுத்தியைப் பற்றியும் வலியுறுத்தி வருகிறார்.

சத்தியத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது பாண்டவர்களில் மூத்த சகோதரரான தர்மராஜரின் செயல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

திரேதாயுகத்தில் கண்ணபிரானாக அவதரித்த அதே சாயிக்கண்ணன் தனது திருவாயால் உரைத்தவற்றை விட  வேறெவை உண்மையாக இருக்க முடியும்.

திரதராஷ்டிரனின் கபட அழப்பை ஏற்றுச் சூதாடச் சம்மதித்த தருமராஜன் தனது மனைவி துரௌபதி,  தம்பிமார் மற்றும் சகலவற்றையும் இழந்து கானகத்துக்குச் சென்ற விடயம் அனைவருக்கும் தெரிந்ததே.

சூதாட்டத்தின் ஆரம்பத்தில் துரியோதனன் தனக்குப் பதிலாகச் சகுனியைச் சூதாட நியமித்தான். ஆனால் தருமர் தான் சூதாடுவது கண்ணபிரானுக்குத் தெரியக்கூடாதென்றே நினைத்தார். அதனால்தான் நடந்தவை, நடைபெறுபவை, நடக்கவிருப்பவை அனைத்தையும் அறிந்தவரும் இப்பிரபஞ்சத்தையை இயக்குபவருமான கண்ணபிரான்  சூதாட்ட மண்டபத்துக்குள் நுழையாமல் தன்னிடம் உதவி கோரும்வரை காத்திருந்தார.


தருமர் கண்ணபிரானைத் தனக்காகச் சூதாட அழைத்திருந்தால் மகாபாரதமே திசைமாறியிருக்கும்.

அதேவேளை துச்சாதனன் தனது துகிலை உரியமுயன்றபோது தன்னைக் காக்கும்படி பரிபூரண சரணாகதியடைந்து "இதயநிவாசா காத்துருள்வாய்" என்று திரௌபதி கூவியழைத்தபோது துச்சாதனன் மயங்கிவிழும்வரை சேலையை வளரவைதுக் காத்தருளினார்.

.அதேவேளை அதர்மத்தைவேரறுத்து தர்மத்தைக் காக்கவென்று
 அவதரித்த கண்ணபிரானின் அவதார நோக்கமும் இங்கு  குறிப்பிடப்பட வேண்டியதே.

நமது சாயிக்கண்ணனும் சத்தியத்தைப்பற்றிய தனது அருளுரைகளின்போதெல்லாம் தானே சத்தியம், தனது வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் அனைத்துமே சத்தியம் என்று வலியுறுத்தி வருகிறார்.

எனவே சாயிநாதனின் அருளுரைகள் அனைத்தும் நம்மை உய்விக்கவே கூறப்பட்ட வார்த்தைகள் என்னும் நம்பிக்கையுடன் வளம்பெறுவோம்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...