ஓம் ஸ்ரீ சாயி ராம்.
நமது சாயி பகவான் தனது அருளுரைகளில் ஆத்ம ராமாயணம், ஆத்ம மகாபாரதம் என்பன பற்றித் திருவாய் மலர்ந்தருளியிருப்பது மாத்திரமன்றி, நாமஸ்மரணை, அதாவது, இறைவனின் பெயரை உசாசரிப்பதன் மகத்துவத்தையும் விளக்குகிறார்.
தனது அருளுரையின்போது,
"பெயர் (நாமம்) நித்தியமானது, சத்தியமானது. யாராலும் அதை அழிக்க முடியாது. யாராலும் தூக்கியெறியவும் முடியாது. யாராலும் அதற்கு நாசம் விளைவிக்கவும் முடியாது.
கடவுள் ராமர் எனும் பெயரும் வடிவமும் தாங்கி இலங்கைக்குச் சென்று ராவணனை வென்றார். ராவணன் அழிக்கப்பட்டான்," என்று பகர்ந்துள்ளார்.
"ஸ்ரீ ராமா, உங்கள் பெயர் எல்லாவற்றையும் வெல்லும் வல்லமை பெற்றது. ராமேஸ்வரக் கடற்கரையில் இருந்து இலங்கைக்குச் செல்ல 100 மைல் தூரமுள்ள சமுத்திரத்தைக் கடக்க வேண்டி இருந்தது.
ரா, மா என்ற இரண்டு அட்சரங்களினால் மட்டுமே அந்த 100 மைல் கடலைக் கடக்க முடிந்தது”
என்று விபீசணன் ராமரிடம் சொன்னதாகப் பகவான் கூறியுள்ளார்.
"யாரெல்லாம் இறைவனின் நாமத்தைச் சொல்கிறார்களோ, அவர்களுக்கு, செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
இறைவன் ஒருவரே.
பிரபஞ்சத்திலுள்ள பெயர்கள், உருவங்கள் அனைத்துமே இறைவனுடையவையே.
மதங்கள் அனைத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இறைவனின் பெயர்கள் அனைத்தும் அந்த இறைவன் ஒருவரையே குறிப்பிடுகிறது.
எப்பெயரை உச்சரித்தாலும் உங்களுக்கு வெற்றிதான்.
எல்லாப் பெயர்களிலுமே இரண்டு அட்சரங்கள் தான் உள்ளன.
ராமா, சிவா, யேசு, சாயி போன்ற இந்த இரண்டு அடசரங்களைக் கொண்ட பெயர்களை உச்சரிப்பதன் மூலம் உங்களால் எதையும் சாதிக்க முடியும்.
பெயர் ஒன்று மட்டுமே நிலையானது. வடிவம் முதிர்ச்சியடைந்து இறுதியில் அழிந்து விடும். எனவே பெயரே மிகவும் முக்கியமானது.
ஆகவே இறைவனின் பெயரை நமது உள்ளங்களில் பிரதிஷ்டை செய்துகொள்ளவேண்டும்.
எவ்வளவு யாகங்கள் செய்தாலும் எவ்வளவு தான தர்மங்கள் செய்தாலும்,பயனில்லை. சிரவணம், கீர்த்தனம், நாம்ஸ்மரணம், பாதசேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சாக்யம், ஆத்மநிவேதனம் என்னும் ஒன்பது வித பக்தியில் ஒன்றையாவது கடைப்பிடிகாகலாம்.
சரணாகதியென்பது உடலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யவேண்டியது என்று பொருளில்லை. இறைவனுடைய திருநாமத்தை இருதயத்தில் பிரதிஷ்டை செய்வதே உண்மையான சரணாகதியாகும்.
இறைவனுடைய திருநாமத்தை உச்சரித்து, வாழ்வினைப் பவித்திரமானதாக்கிக் கொள்ளுங்கள்.
உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்தியுங்கள்."
என்று எம்பெருமான் தனது அருளுரைகளில் எடுத்துரைத்துள்ளார்.
சமஸ்தலோகா சுகினோ பவந்து.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
No comments:
Post a Comment